Followers

Monday, August 18, 2014

ஒரு விமானி தனது தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவார்?

ஒரு விமானி தனது தொழுகையை எவ்வாறு நிறைவேற்றுவார்?

திரு டான்டி!

//.ஜெர்மன் நாட்டில் முஸ்லிம்களுக்கு தனி மயானம் உண்டு நாடு முழுவதும் நகரம் ,கிராமங்களில் எல்லாம் பள்ளிவாசல்கள் .ஒலி பெருக்கியில் வாங்கு சொல்லும் சத்தம் இதையும் அந்த மக்கள் பொறுத்து கொள்கின்றார்கள் ..இங்கிலாந்தில் பள்ளி வாசல்களில் அந்த நாட்டையும் ,மக்களையும் ,அரசியையும் கீழ்த்தரமாக விமர்சிபதையும் அந்த மக்கள் பொறுத்து கொள்கின்றார்கள் ..இது நாகரீகம் ....அரபு நாடுகளில் கோயில் கட்டி ,தேவாலயம் கட்டி மணியோசை எழுப்பி ,ஒலி பெருக்கியில் பஜனை செய்யமுடியுமா ? பங்களாதேஷ் நாட்டில் கூட முடியாது ...எல்லா சமயமும் சமயம் அல்ல இஸ்லாம் மாத்திரமே சமயம் ...எப்படி ?//

ஆதி தமிழர்கள் பல தெய்வங்களையும் கல்லையும் மண்ணையும் வணங்கவில்லை. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றுதான் சொன்னார்கள். ஏசு கிறித்தவர்களை தன்னை வணங்க எங்குமே சொல்லவில்லை. பிதாவை வணங்குமாறுதான் போதித்தார். ஆக... தவறை உங்களிடம் வைத்துக் கொண்டு இஸ்லாம் மட்டுமே சமயமா? என்று கேட்டால் எப்படி?

மேலும் சவுதிக்குள் வருவதற்கு முன்பே அந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே வாழ்வேன் என்று உறுதி கூறி விட்டுத்தானே வருகிறீர்கள்? இருபது வருடத்துக்கு மேலாக சவுதியில் குழந்தை மனைவியோடு சந்தோஷமாக வாழ்ந்து வரும் இந்துக்களிடம் கேளுங்கள் அவர்கள் சொல்வார்கள் தங்களுக்கு எந்த குறையும் இல்லை என்று.

//...இந்து மதத்தில் சொள்ளபடுள்ள எல்லா விடயங்களையும் இந்த கால கட்டத்தில் கடைபிடிகமுடியாது அன்று சரியாக விருக்கலாம்அன்று வாழ்ந்த மக்களுக்கு நேரம் இருந்தது ..ஒரே இடத்தில தலைமுறை தலைமுறை ஆக .வாழ்ந்தார்கள் //.

எல்லா காலத்துக்கும் பொருந்தும் வகையில் கட்டளைகள் இருந்தால்தான் அது இறை வேதமாக மதிக்கப்படும். கிறித்தவர்களைப் போல் வருடா வருடம் திருத்திய பதிப்பை வெளியிட்டால் அங்கு இறை போதனை இருக்காது. அதன் புனிதமும் கெட்டு விடும். இந்த காலத்துக்கு இந்த வசனம் பொருந்தாது என்று எதனையாவது உங்களால் குர்ஆனிலிருந்து மேற்கோள் காட்ட முடியுமா? முடியாதே.... ஆப்ரிக்கன், அமெரிக்கன், ஆசியன், ஐரோப்பியன் என்று எவருமே ஒரு வரியைக் கூட விடாமல் இக்காலத்திலும் பின் பற்ற முடிகிறதே. குர்ஆன் இறை வேதம் இல்லாமல் இருந்திருந்தால் இது சாத்தியப்படுமா?

//இதே போல் தான் எல்லா சமயங்களும் ..போதனைகளும் இப்பொது எவரும் ஒட்டகத்தில் பாலைவனத்தை கடப்பதில்லை ...விமானத்தில் கடகின்றாக்கள் //

உங்கள் கேள்விக்கு இறைவன் மிக அழகாக பதிலளிப்பதை பாருங்கள்.

"இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், அவனே படைத்துள்ளான்; இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்" (அல் குர்ஆன் 16:8)

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் நபி அவர்களின் காலத்தில் இருந்த குதிரைகள், கோவேறு கழுதைககள் மற்றும் கழுதைகளை வாகனங்களாக படைத்திருப்பதாக் கூறியதோடு இன்னும் நீங்கள் அறியாத வாகனங்களைப் படைத்திருப்பதாக கூறுகிறான். இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால் இன்று நாம் பயன் படுத்திக் கொண்டிருக்கும் கார், விமானம் போன்ற வாகனங்களை மட்டுமல்லாமல் இன்னும் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படக் கூடிய பிற வாகனங்களைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்துள்ளான் என்பதாகும்.

//..விமானி பறக்கும் போது மார்க்க முறைப்படி தொழுகை செய்தால் ..??????//

நீங்கள் பூமியில் பிரயாணம் செய்யும்போது ஏக இறைவனை மறுப்போர் உங்களுக்கு விஷமம் செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சினால், அப்பொழுது நீங்கள் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது….(அல்குர்ஆன் 4:101)

ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்: -
அல்லாஹ் தொழுகையினை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும், பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாக கடமையாக்கினான். பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது. (ஆதாரம் :புகாரி)

நான் சென்ற ஆண்டு டெல்லி ஆக்ரா அஜ்மீர் என்று குடும்பத்தோடு சென்றேன். ஒரு வார காலம் அந்த பயணம். ஒரு நேர தொழுகையைக் கூட நான் விடவில்லை. ஏனெனில் பயணத்தில் இருப்பவர் தனது தொழுகையை சேர்த்து, மேலும் சுருக்கி தொழுது கொள்ள குர்ஆன் எங்களுக்கு அனுமதி அளிக்கிறது. ஓடும் ரயிலிலும், லாட்ஜிலும் ஆங்காங்கு உள்ள மசூதிகளிலும் எனது தொழுகையை நேரத்தோடு நிறைவேற்றினேன். எந்த சிக்கலும் இல்லை. அதே போல் விமானியும் தனது தொழுகையை தரையிலேயே சேர்த்து தொழுது தனது கடமையை நிறைவேற்றி விடுவார். விமானத்தில் அமர்ந்தும் தொழலாம். ஒரு தொழுகைக்கு ஐந்து நிமிடங்களே ஆகும். அந்த நேரத்தில் மற்றொரு விமானி நமது விமானத்தை பார்த்துக் கொள்வார். எனவே தொழுகையை கொண்டு வேலைக்கோ, பிரயாணத்துக்கோ, எந்த சிரமமும் இல்லை. உடல் நிலை சரியில்லாதவர்கள் கூட உட்கார்ந்து தொழுது கொள்ளவும், அதுவும் முடியாதவர்கள் படுத்துக் கொண்டே தொழுது கொள்ளவும் அனுமதி உள்ளது. மேலும் இந்த தொழுகை முஸ்லிம்களிடம் இருப்பதால்தான் தீண்டாமையும் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது.8 comments:

Anonymous said...

யூதர்களும் சீக்கியர்களும் ஓரிறைக் கொள்கை உடையவர்கள்தானே ? அவர்களையும் ஏன் விடவில்லை ?

Anonymous said...

அடுத்த மனிதனை அடிமைப் படுத்துவது எல்லாக் காலத்துக்கும் பொருந்துமா ?

சுவனப் பிரியன் said...

//யூதர்களும் சீக்கியர்களும் ஓரிறைக் கொள்கை உடையவர்கள்தானே ? அவர்களையும் ஏன் விடவில்லை ? //

அவர்கள் ஓரிறைக் கொள்கை உடையவர்கள் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது. அடுத்து முகமது நபியையும் இறைத் தூதராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா?

சுவனப் பிரியன் said...

//அடுத்த மனிதனை அடிமைப் படுத்துவது எல்லாக் காலத்துக்கும் பொருந்துமா ?//

இக்காலத்தில் யார் அடிமைபடுத்தியது? அதற்கான ஆதாரத்தை தரவும்.

Anonymous said...

//அவர்கள் ஓரிறைக் கொள்கை உடையவர்கள் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது.//

இஸ்லாமே ஜுடாயிசத்தின் காப்பி ஆயிற்றே. ஓரிறைக் கொள்கையை முகமதுக்கு கற்று கொடுத்தவர்களே யூதர்கள்தானே.

God, the Cause of all, is one. This does not mean one as in one of a pair, nor one like a species (which encompasses many individuals), nor one as in an object that is made up of many elements, nor as a single simple object that is infinitely divisible. Rather, God is a unity unlike any other possible unity. This is referred to in the Torah (Deuteronomy 6:4): "Hear Israel, the Lord is our God, the Lord is one."

//அடுத்து முகமது நபியையும் இறைத் தூதராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா?//

அப்படியே பகாய் மதத்தை தோற்றுவித்த பகாவுல்லாவையும், அகமதிய மதத்தை தோற்றுவித்த மிர்சா குலாம் அகமதையும் இறை தூதராக ஏற்றுக் கொள்கிறீர்களா ?


---------------------------------

//இக்காலத்தில் யார் அடிமைபடுத்தியது? அதற்கான ஆதாரத்தை தரவும்.//

எத்தனை ஆதாரம் கொடுத்தாலும் , எங்கே ஆதாரம் என்பதை கேட்பதை விட மாட்டீர்கள் போலும். இஸிஸ் காபிர்களை அடிமை படுத்துவது குரானின் போதனையின் அடிப்படையில்தான் என்பது உங்களுக்கே தெரியும். மெளரிதானியா என்ற முஸ்லிம் நாட்டில் அடிமைத் தனத்தை இன்னும் முழுவதுமாக அழிக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் குரான்.

Anandan Krishnan said...

//அவர்கள் ஓரிறைக் கொள்கை உடையவர்கள் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது.//
யூதர்கள் இப்போது பல வணங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது. உங்களுக்கு தனியாக எதாவது வஹீ வந்ததா

//முகமது நபியையும் இறைத் தூதராகவும் ஏற்றுக் கொள்ள வேண்டுமல்லவா//

அவரு யாருங்க தூதரு முகமது. எந்த கடவுள் தன் தூதராக அவரை அப்பாயின்மென்ட் செய்தார். அந்த திருட்டு புத்தகம் குரானை தவிர்த்து வேற ஆதாரம் காட்டுங்கள். மேலும் என்ன மை...... க்கு அந்த ஆளை மற்றவர்கள் தூதராக ஏற்று கொள்ள வேண்டும்

Anandan Krishnan said...

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூதம் அல்லது யூத மதம் (Judaism, "יהודה", யெகூடா,) யாவே என்ற ஒரே கடவுளை வணங்கும் சமயமாகும். யூத மதத்தின் சமய நூல் டனாக் ஆகும். யூத மதத்தை பின்பற்றுபவர்கள் யூத மக்கள் அல்லது யூதர் என தமிழில் அழைக்கப்படுகின்றனர்.[1] இயேசு கிறிஸ்துவும் பிறப்பால் ஒரு யூதராவார். மேலும் கிறிஸ்தவ விவிலியம் எபிரேய விவிலியத்தையும் உள்ளடக்கியதாகும். ஆகையால் யூதம் கிறிஸ்தவத்தின் மூலமாகவும் நோக்கப்படுவதுண்டு.

யூதர் ஒரு இனமதக் குழுவாகும்.[2] இது யூதராக பிறந்தவரையும் யூத மதத்திற்கு மாறியவர்களையும் குறிக்கும். 2010 இல் உலக யூதர்களின் மக்கள் தொகை 13.4 மில்லியன் அல்லது உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர்கள் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.[3]

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

Anonymous said...

20 varudathukku mela inga irukkavanga, appo irundha vasadhiyavida ippo vasadhi adhigama irukkundradhala vena sollalame ozhiya, vera yarum abdi solla vaippu illa. summa adichi vittu aal serunga.