Followers

Thursday, August 28, 2014

"பார்பனியம் எப்போது இளையராஜாவை ஒதுக்கியது"?

//பார்பனியம் எப்போது இளையராஜாவை ஒதுக்கியது?//

நான் யுவன் சங்கர் ராஜா சம்பந்தமாக வெளியிட்ட கவிதைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாக்கரிலும் முகநூலிலும் 'பார்பனியம் இளையராஜாவை எங்கு ஒதுக்கியது?' என்று பலரும் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக இந்த பதிவு அமைகிறது.



2009 யில் தனது 75-வது பிறந்த நாள் விழாவில் காஞ்சி ஜெயேந்திரர். நால்வருக்கு விருது வழங்கினார் அதில் முக்கியமானவர், இளையராஜா. அவர் உட்பட எழுத்தாளர் விக்ரமன், வேதவிற்பன்னர் கிருஷ்ண மூர்த்திகனபாடிகள், சமூகசேவகர் ராதா கிருஷ்ணன் போன்ற மூவருக்கும் சேர்த்து இந்த விருதுகள் வழங்கப்பட்டது..

இதில் என்ன இருக்கிறது? விருது தானே! இது எல்லோருக்கும் வழங்குவதுதானே என்றால்! அது தப்பில்லை, அது பொதுவான விசயம். ஆனால் இதில் பேசப்படவேண்டிய விசயம் என்னவென்றால் காஞ்சி ஜெயேந்திரர் தீட்டு பட்டு விடும் என்பதற்காக தான் தொடாமலேயே தனது உதவியாளர் கையால் அந்த விருதை வழங்கி இருக்கிறார் என்பது தான் முக்கியமான விசயம்.

மற்ற மூவரும் மேல் சாதிக்காரர்கள். ஆனால் இளையராஜா தாழ்ந்த சாதியை சேர்ந்தவர். மூன்று பேருக்கு மட்டும் தொட்டு விருது வழங்கி விட்டு இளையராஜாவை ஒதுக்கினால் அது பெரும் பிரச்னையாகி விடும் என்று யோசித்தார் ஜெயேந்திரர். உடனே தனது உதவியாளரை அழைத்து அவர் கையாலேயே நால்வருக்கும் பொதுவாக விருதை வழங்க வைத்து விட்டார். விருதும் வழங்கியாகி விட்டது. ஆச்சாரமும் காப்பாற்றப்பட்டு விட்டது. வெளி உலகின் ஏசுதலுக்கும் முற்றுப் புள்ளியும் வைத்தாகி விட்டது.

சம்பந்தப்பட்ட இளையராஜா பெருந்தன்மையோடு இந்த அவமானத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம். இது விருது கொடுத்தவர்களுக்கு அசிங்கம் இல்லையா? தொட்டால் தீட்டு என்ற ஜாதி அடிப்படையில் பாகு பாடு பார்த்து இந்த விருது வழங்கி இருக்கிறார் இந்த பார்பனர். இவ்வளவுக்கும் இளையராஜா இந்து மதத்தில் பெரிய ஆன்மீக வாதியாக அறியப்படுபவர். தமிழகம் மற்றும் உலக அளவில் பிரபலமாக பார்க்கப்படுபவர். இந்த அளவு உயரத்திற்கு சென்றவர் இவ்வளவு தூரம் அசிங்கப்பட்டு இந்த விருதை வாங்கத்தான் வேண்டுமா?

எவ்வளவு இழிவாக நடத்தினாலும் இவர்களுக்கு இந்த விருதுதான் பெரிதாக தெரிகிறது. இவர்களின் தன் மானம் காக்கப் படவேண்டாமா? 'ஜனனி...ஜனனி' பாடலை கேட்டு உருகாத இந்துக்கள் எவரும் இல்லையே! இளையராஜாவின் சங்கீதம் ஜாதி பார்ப்பது இல்லையே! ஆனால் இந்த காஞ்சி மடாதிபதி இங்கிதமாக ஜாதி பார்க்கிறாரே!

இவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றபோது இந்த பார்ப்பன வர்க்கம் இவர்களை பிரித்து, ஜாதி கற்பித்து காட்டுகிறதே? இன்னும் இதற்குள் இருக்கத்தான் வேண்டுமா? சிந்திக்க மாட்டார்களா? விருது, விழா, பட்டம், பதக்கம் என்றால் யார் கொடுத்தாலும் வாங்கி விடுவதா?

யுவன் சங்கர் ராஜா தன்மான சிங்கம். எனவே தான் தனது தொழிலில் பின்னடைவு ஏற்படும்: பலராலும் ஏசப்படுவோம் என்றெல்லாம் முன்பே தெரிந்தும் துணிந்து தான் 'இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்' என்று பகிரங்கமாக அறிவித்தார். உங்களின் துணிச்சலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் யுவன்! இறைவன் உங்களை மேலும் மேலும் இந்த குர்ஆனின் சுவையை உணர்வுபூர்வமாக அறிய வாய்ப்பை நல்குவானாக! நீங்கள் உணர்ந்த அந்த சுவை கூடிய விரைவிலேயே உங்கள் தந்தையையும் உணர வைக்கும். அதற்காக நாமும் பிரார்த்திப்போமாக!

4 comments:

Mahesan said...

இந்த மாதிரி தவறான கதைகள் எல்லாம் எப்படி ஆதாரம் இல்லாமல் சொல்ல முடிகிறது? ஜெயேந்திரன் என்பவர் தவறானவர்தான் அதில் மாற்று கருத்து கிடையாது ஆனால் அவர் கீழ் ஜாதி மட்டும் அல்ல மேல் ஜாதி மனிதர்களையும் தீண்டுவது இல்லை. நான் ஒரு பிராமணன்தான் ஒரு தடவை காஞ்சி சென்ற பொழுது எனது பெற்றோர்கள் அவரை சந்திப்பதற்கு சென்றனர் அவர்களை மூன்று அடி தள்ளி வைத்தே ஆசிர்வாதம் வழங்கினார் அதே போல்தான் மற்றவர்களுக்கும் நடந்தது. அதில் பெரும்பான்மையோர் நீங்கள் சொல்லும் மேல் ஜாதி பிராமணர்களே. ஒருவர் தவறானவர் என்றால் அதற்கான ஆதாரத்தோடு விமர்சனம் செய்யுங்கள் அதை விடுத்தது இது போன்று பொய் புரட்டுகளை பரப்பாதீர்கள்.பொய்களை பரப்பிய பார்பனர்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை.

suvanappiriyan said...

//நான் ஒரு பிராமணன்தான் ஒரு தடவை காஞ்சி சென்ற பொழுது எனது பெற்றோர்கள் அவரை சந்திப்பதற்கு சென்றனர் அவர்களை மூன்று அடி தள்ளி வைத்தே ஆசிர்வாதம் வழங்கினார் அதே போல்தான் மற்றவர்களுக்கும் நடந்தது. அதில் பெரும்பான்மையோர் நீங்கள் சொல்லும் மேல் ஜாதி பிராமணர்களே.//

இவர் மற்றவர்களை தொடுவது கிடையாது என்பதை என்னால் நம்ப முடியவில்லை நண்பரே! இவர் பலரையும் தொடுவதை காண சகிக்க முடியாமல்தான் சங்கர ராமன் புனைப் பெயரில் கடிதங்களாக எழுதி கடைசியில் அது கொலையிலும் முடிந்ததை நீங்கள் அறிவீர்கள். இன்றும் இவர் நடமாடும் தெய்வம்தான் பலருக்கு.....

Mahesan said...

நான் நேரடியாக கண்டதினால் சொல்கிறேன் பொது இடங்களில் அவர் யாரையும்(மேல் ஜாதி கீழ் ஜாதி எதுவானாலும்) தீண்டுவது கிடையாது.ஆனால் மறைவில் நடப்பது நான் அறியேன்.பலருக்கு என்பது தவறு ஒரு சிலருக்கு இவர் தெய்வம் அவர்கள் கூட இவரால் பயன் அடைந்தவர்களாக இருப்பார்கள்.அதனால் நீங்கள் இளையராஜாவை சம்பந்தபடுத்தி கூறி இருப்பது மத ரீதியிலான வெறுப்பே என்பது தெளிவாகிறது.

Unknown said...

ஐயா சுவனப்பிரியன், பார்ப்பனர்கள் இளைய ராஜாவை ஒதுக்கவில்லை. இவர்தான் பார்ப்பனர்களை ஒதுக்கினார். பின்வருபவற்றை விசாரித்து உருதிபடுத்திக்கொள்ளுங்கள்.நீங்கள் சொன்ன விருது நிகழ்ச்சி பிறகு, நடந்தது. அதற்கு முன் ஒரு கோயிலில்(ஸ்ரீரங்கமோ, சிதம்பரமோ) நீண்ட நாட்களாக கும்பாபிஷேகம் நடக்கவில்லை என்று பொருளுதவிக்கு இளையராஜாவை நாடினார்கள். அவர் நான்கு நகரங்களில் நிகழ்ச்சி நடத்தி 9 தோ 11 னோ லட்சம் கலெக்ஷன் செய்து கொடுத்தார். இந்த கோயில் கமிட்டி நீங்களே வந்து பெரியவரிடம் கொடுங்கள் என்று கூட்டிப்போக, அதைப்பெற்றுக் கொண்ட பெரியவர் இளையராஜா போன பின் இவா என்ன கோத்திரம் என்று கேட்டு இவர அமர்ந்த இடத்தை ஏழு முறை தீட்டுபோக கழுவச்சொன்னார். பின்னர் இதைக் கேள்விப்பட்ட இளையராஜா துடித்துப்போய்விட்டார். அன்றிலிருந்து எந்த பிராமணர்களுக்கும்(பாலசந்தர், மணிரத்தினம், கமல்ஹாசன், ரஜினி)இனி இசை அமைப்பதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டார்.அந்த அவமானத்திற்காகவே பாலசந்தர் தயாரிக்க மணிரத்தினம் இயக்கிய படத்தை திலீப்பாக இருந்தவரை ஏ.ஆர்.ரஹ்மான் என்று இட்டு அதை பார்ப்பனர்கள் பலமுயற்சி செய்து மத்திய அரசு விருது வரை கொண்டு சென்றார்கள்.