Followers

Tuesday, August 26, 2014

இந்து சகோதரருக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமிய அமைப்பு!



துபாய்: இந்து சகோதரருக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமிய அமைப்பு

துபாயில் இறந்து போன தமிழகத்தைச் சேர்ந்த ஜெயராமனின் உடலுக்கு இஸ்லாமிய அமைப்பான ஈமான் அமைப்பின் முயற்சியில் 16.04.2014 புதன்கிழமை துபாய் ஜெபல் அலி மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. துபாயில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இறந்து எவ்வித தகவலும் இன்றி துபாய் மருத்துவமனை பிணவறையில் ஜெயராமன் உடல் வைக்கப்பட்டு இருந்தது.

துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் ஈமான் அமைப்பு கடலூர் மாவட்டத்திலுள்ள ஜெயராமன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடலை துபாயிலேயே இந்து மத சம்பிரதாயப்படி இறுதிச்சடங்கு நடத்த ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோருக்கு அனுமதிக் கடிதம் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து 16.04.2014 புதன்கிழமை காலை துபாய் ஜெபல் அலி மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இறுதிச் சடங்கில் ஈமான் துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின், முஹம்மது உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறைந்த ஜெயராமனின் ஊரைச் சேர்ந்த இளவரசன் இந்து மத சம்பிரதாயங்களை நிறைவேற்றினார். அவரிடம் துபாய் காவல் துறையினர் ஜெயராமன் இறந்தபோது வைத்திருந்த பணம், கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

"எங்கே இருந்தாலும் மாற்று மதத்தினரை மதிப்பவன் தான் உண்மையான முஸ்லிம்".



நன்றி: tamil.oneindia.in

நபிகள் நாயகம் ஒரு சபையில் அமர்ந்திருந்த போது ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அதைக் கண்ட நபிகள் நாயகம் அவர்கள் எழுந்து நின்றார்கள். உடனிருந்த தோழர்கள் இது யூதரின் பிரேதம் என்று சுட்டிக் காட்டினார்கள். அதைக் கண்டு கொள்ளாத நபிகள் நாயகம் அவர்கள் "அந்த பிரேதமும் ஆதமுடைய சந்ததி அல்லவா? உங்களை ஒரு பிரேதம் கடந்து சென்றால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள்" என்று கூறினார்கள்.

(ஆதாரம் புகாரி 1228)

நபிகள் நாயகம் அவர்களைக் கொலை செய்திட சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள் முயன்ற போது அவர்களும் அவர்களின் நெருங்கிய தோழரான அபூபக்கரும் ஊரைவிட்டு இரகசியமாக வெறியேறினார்கள். மதினாவுக்கு செல்லும் வழியைக் காட்டுவதற்காக முஸ்லிம் அல்லாத ஒருவரை நம்பி அவரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்கள். (ஆதாரம் புகாரி 2103)

இது போன்று பல சம்பவங்கள் நபிகளின் வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. மாற்று மதத்தவர்களை மதித்தே தனது வாழ்நாள் பூராவும் வாழ்ந்துள்ளார்கள். அன்பை விதைத்தார்கள்: சிறந்த அறுவடையை பெற்றார்கள்! அவர் வழியில் வந்த நாமும் அன்பையே விதைப்போம்! அனந்த சாகர், தருமி, அனந்தன் கிருஷ்ணன், சாரங்க் போன்ற நண்பர்களுக்கும் இன் முகத்துடனேயே பதில் கொடுப்போம். இன்றில்லா விட்டாலும் என்றாவது உண்மையை உணர்ந்து கொள்வார்கள்.


2 comments:

Anonymous said...

எந்த உண்மையை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் சுவனபிரியர், அதையும் கொஞ்சம் விளக்கினீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

Anandan Krishnan
Kanyakumari

Anonymous said...

என்ன ஆனந்த கிருஷ்னன், உங்களுக்கு புரியலயா ? முஸ்லிம்கள் எதை எல்லாம் உண்மை என்று சொல்றாங்களோ அதையெல்லாம் அப்படியே ஒத்துக்கனும். காபிர் பெண்களை கற்பழிக்கலாம் என்றாலும் சரி, முகமது வானத்துக்கு பறந்து போய் அல்லாவை பார்த்தார் என்றாலும் சரி, மலையுயர சுவருக்கு பின்னால் கோடிக்கனக்கில யஜூஜ் மஜூஜ் இனத்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டார்கள் என்றாலும் சரி, இப்படி இஸ்லாம் என்ற பேருல எத சொன்னாலும் ஒத்துக்கறதுதான் உண்மைய ஒத்துக்கறதுன்னு அர்த்தம். இப்போ புரியுதா ?