Followers

Tuesday, December 02, 2014

கிறிஸ்து- முஸ்லிம்-ராமரின் பிள்ளைகளே - மத்திய அமைச்சர்

கிறிஸ்து- முஸ்லிம்-ராமரின் பிள்ளைகளே - மத்திய அமைச்சர்



புதுடில்லி: இந்த நாட்டில் வாழும் அனைவரும், கிறிஸ்துவர் , முஸ்லிம் மக்கள் அனைவரும் ராமரின் பிள்ளைகளே, இதனை ஏற்று கொள்ளாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறலாம் என டிலலியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மத்திய தொழில் மற்றும் உணவு துறை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசினார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் அமளி ஏற்பட்டது. அமைச்சர் டில்லி கூட்டத்தில் பேசியதாவது: இந்த நாட்டில் உள்ள அனைவரும் ராமரின் பிள்ளைகளே, கிறிஸ்துவர், முஸ்லிம்களும் கூட ராமரின் பிள்ளைகள் தான். இந்தியாவில் இருந்து யார் ஒருவர் வெளிநாடு சென்றாலும் நாம், அனைவரும் இந்துஸ்தானி என்று தான் சொல்கிறோம். இதனை ஏற்று கொள்ள முடியாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம். டில்லியில் வரும் காலத்தில் ராமரின் மகன் ஒருவனே ஆட்சி செய்ய போகிறான் . டில்லியில் ராமரை பின்பற்றுபவர்கள் ஆட்சி வேண்டுமா ? சட்ட விரோதிகள் ஆட்சி வேண்டுமா ? டில்லி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.


இந்த பேச்சுக்கு எதிர்கட்சிகள் பார்லி.,யில் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது. அவையின் பணிகள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் சாத்வி, பேசுகையில், நான் யாரையும் புண்படுத்தும் விதமாக பேசவில்லை. யாரையும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என்று பதில் அளித்தார்.

ஆனால் எதிர்கட்சியினர், மன்னிப்பு மட்டும் போதாது. அமைச்சர் பேச்சு ஒரு குற்றச்செயல். மத துஷ்வேத கருத்தை கூறியுள்ளார். அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்தனர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. நிதி அமைச்சர் அருண்ஜெட்லி சொன்ன சமாதானத்தையும் எதிர்கட்சியினர் ஏற்று கொள்ள மறுத்து விட்டனர். அமைச்சர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும் என மார்க்., கம்யூ தரப்பில் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார்.

பிரதமர் அறிவுரை: பேச்சை நிறுத்தி விட்டு வேலையை பாருங்கள் .பா.ஜ., எம்.பி.,க்கள் பேசும் போது கவனமாக பேச வேண்டும் என்றும், பொதுவான விஷயங்களில் கருத்துக்களை கூறக்கூடாது என்றும், கூறி உள்ளார். இதன் மூலம், சத்வியின் பேச்சை பிரதமர் மோடி மறைமுகமாக கண்டித்துள்ளார்.

தினமலர்
02-12-2014

இந்த நாட்டில் ராமனை கடவுளாக ஏற்றுக் கொண்டவர்கள் பார்பனர்கள் மட்டுமே. பிற்படுத்தப்பட்ட மக்களிலும் சிலர் வரலாம். ஆனால் முஸ்லிம்களும், கிறித்தவர்களும், நாத்திகர்களும், கம்யூனிஸ்டுகளும், இந்துக்களில் பெரும்பான்மையோரும் ராமனை ஒரு கற்பனை பாத்திரமாகவும், அல்லது முன்பு வாழ்ந்து இறந்து விட்ட ஒரு மன்னனாகவும் தான் பார்க்கிறார்கள். ராமனை கடவுளாக ஏற்பவர்கள் மட்டுமே இந்த நாட்டில் இருக்க வேண்டும் என்றால் இரண்டு சதவீதமே இருக்கும் பார்பனர்கள் மட்டுமே இந்தியாவில் தங்க முடியும். ஏனெனில் தீண்டாமை, நயவஞ்சகம், பெண் அடிமை என்று பார்பனர்கள் தூக்கி பிடிக்கும் அனைத்து குணத்தையும் உடையவன் தான் வால்மீகியும் கம்பனும் காட்டும் ராமன். எனவே தான் பார்பனர்கள் ராமன் என்ற ஒரு கற்பனைப் பாத்திரத்துக்கு இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த பார்பனர்கள் கூட கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவில் ஊடுருவிய அந்நிய தேசத்தவரே. எவ்வாறு பாலஸ்தீனில் நுழைந்து இன்று அந்த நாட்டு மக்களையே அகதிகளாக்கி யூதர்கள் வைத்துள்ளனரோ அது போன்ற கதையைத்தான் இந்தியாவில் அரங்கேற்ற மத்திய மந்திரி அடித்தளம் இடுகிறார். இவரது எண்ணம் இன்னும் 1000 வருடங்கள் ஆனாலும் நிறைவேறப் பொவதில்லை. ஏதோ காங்கிரஸின் கையாலாக தனத்தால் ஐந்து வருடம் வேறு வழி இல்லாமல் ஆட்சி செய்ய மக்கள் பிஜேபிக்கு அதிகாரம் அளித்துள்ளனர். கொடுத்த அந்த அதிகாரத்தை ஐந்து வருடம் கூட தக்க வைத்துக் கொள்ள மாட்டார்கள் போல் இருக்கிறது.

1 comment:

UNMAIKAL said...

சாத்வி நிரஞ்சன் ஜோதி உண்மையில் பேசியது என்ன?

மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி விவகாரத்தில் (சில) தமிழ் ஊடகங்கள் முழுமையான செய்தியை தரவில்லை.

முஸ்லிம்களும் கிருத்துவர்களும் இராமரின் பிள்ளைகள் தான் என்று கூறியதற்காகவே இவ்வாறான சர்ச்சை வெடித்துள்ளதாக செய்தி சொல்கின்றனர்.

உண்மையில் இதையும் தாண்டிய விஷ கருத்துகளை சாத்வி தெரிவித்தது தான் உண்மை.

அதாவது, டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில்,

"நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகின்றீர்கள்?, இராமரின் மகன்களுக்கா (Ramzada) அல்லது முறைகேடாக பிறந்தவர்களுக்கா (har****da)?"

என்று விஷத்தை கக்கியது தான் இவ்விவகாரம் பூகம்பமாய் வெடித்ததற்கு காரணம்.

ஆதாரம் இங்கே

Ramzada vs haramzada: Outrage over Union Minister Sadhvi’s remark -

Launching the BJP’s campaign in Delhi, Union Minister of State Sadhvi Niranjan Jyoti told voters here on Monday that they must choose between ‘Ramzadon’ (those born of Ram) and ‘haramzadon’ (illegitimately born).

Meanwhile, another Union Minister of State, Giriraj Singh, compared Prime Minister Narendra Modi to Ram.

Addressing a rally in West Delhi’s Shyam Nagar area, Jyoti, the BJP MP from Fatehpur in Uttar Pradesh, said, “Aapko tay karna hai ki Dilli mein sarkar Ramzadon ki banegi ya haramzadon ki. Yeh aapka faisla hai (You must decide whether you want a government of those born of Ram or of those born illegitimately).”

Addressing another rally in Dhirpur, Giriraj Singh told the BJP cadres that Modi was their “saviour”. “Do you know Hanuman? We are all Hanuman. Hanuman told Ram that he has no identity of his own. Hum Modi ke bhakt hain purey desh mein. (We are all followers of Modi.) People wanted to know the reason for my victory in Lok Sabha. I told them it is only Narendra Modi,” he said.

In the run-up to the Lok Sabha polls, Singh had courted controversy when he said that there was no place in India for those who were opposed to Modi, and they should go to Pakistan.

Reacting sharply to Jyoti’s comments, former Delhi Minister and AAP leader Manish Sisodia said, “The BJP clearly wants to vitiate the atmosphere. Comments like these from senior ministers show that their concept of elections is divisive and based on hooliganism.”

Former Congress minister Haroon Yusuf said, “This is what the BJP has been doing in Delhi for the past few months. They have been trying to polarise Delhi on the basis of religion, this is what they did in Trilokpuri and Bawana. This politics of religious polarisation is very dangerous and spreads hatred. But Delhi won’t accept this.

SOURCE: http://indianexpress.com/article/india/india-others/union-minister-spells-out-choice-in-delhi-ramzada-vs-haramzada/

"முறைகேடாக பிறந்தவர்கள்" என்ற பதத்திற்கு அவர் பயன்படுத்திய ஹிந்தி வார்த்தையை ஆங்கில ஊடகங்கள் சில கூட (நான் போட்டுள்ளது போல) *** என்று போட்டு தான் விவரிக்கின்றனர். அப்படியானால் இந்த அமைச்சரின் வார்த்தை பயன்பாடு தரத்தை நாம் புரிந்துக்கொள்ளலாம்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தில் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. மன்னிப்புடன் விடாமல் அவர் விலக வேண்டும், அவர் மீது எப்.ஐ.ஆர் போட வேண்டும் என்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்து போக செய்துள்ளனர்.

எச்.ராஜா, சாத்வி போன்றவர்கள் பாஜகவின் தரத்தை நிர்ணயிக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல. - ஆஷிக் அஹ்மத் அ

SOURCE:http://manithaabimaani.blogspot.com/2014/12/blog-post.html

.