Followers

Tuesday, December 09, 2014

புனித நூலாக பகவத் கீதை - சுஷ்மா ஸ்வராஜ்



தேசியப் புனித நூலாக பகவத் கீதை அறிவிக்கப்படும் என்று சுஷ்மா ஸ்வராஜ் பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இவ்விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை மாற்றியமைக்க பாஜக மேற்கொள்ளும் வஞ்சக முயற்சியே பகவத் கீதையை தேசிய புனித நூலாக்கும் திட்டம் என எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இவ்விவகாரத்தை எழுப்பிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா, "சுஷ்மா ஸ்வராஜின் கருத்துக்கு இந்த அவை கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இந்தியாவில் பல்வேறு மத நம்பிக்கைகள் இருக்கின்றன. ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியே புனித நூல் உள்ளது. இந்நிலையில் கீதையை மட்டும் தேசிய புனித நூலாக எப்படி அறிவிக்க முடியும்.

இதை சுஷ்மாவின் தனிப்பட்ட கருத்தாக பார்க்க முடியவில்லை. இதன் பின்னணியில் பாஜக முக்கிய தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ். பெரும் புள்ளிகளும் இருக்கின்றனர். இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற தன்மையை சிதைக்கும் வகையில் பாஜக வஞ்சனை செய்கிறது.

இந்த அவை சுஷ்மா கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல் பள்ளிகளில் சமஸ்கிருத்தை திணிக்க பாஜக முனைப்பு காட்டுவது ஏன்? சமஸ்கிருதம் போல் தமிழ் மொழியும் பழமையான மொழியே. அப்படியிருக்க சமஸ்கிருதத்திற்கு மட்டும் ஏன் சிறப்பு அந்தஸ்து" என்றார்.

பத்திரிக்கை செய்தி
09-12-2014

இந்த நாட்டை திரும்பவும் வர்ணாசிர கோட்பாட்டின் படி நடத்திச் செல்ல வேண்டும் என்பதன் முதல் அறிகுறிகளே சமஸ்கிரதம் தேசிய மொழி பகவத் கீதை புனித நூல் என்ற கூப்பாடுகள். இதனை இந்துக்களில் பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஆனாலும் ஆர்எஸ்எஸ்ஸின் கட்டளைகளை செயல்படுத்தும் கட்டாயத்தில் மோடி அரசு இருப்பதால் இது போன்ற காமெடிகளை தினமும் நாம் பத்திரிக்கையில் பார்க்கலாம்.

10 comments:

Dr.Anburaj said...

அடா அறிவு கெட்ட ஜென்மங்களா! பகவத்கீதையை இந்தியாவில் சிறப்பிக்காமல் சவுதிஅரேபியாவிலா கொண்டாடுவாா்கள். மதச்சான்பின்மைக்கும் பகவத்கீதையை தேசிய நூலாக அறிவிப்பதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.சிறந்த நூல்கள் அனைத்தையும் தேசிய நூலாக அறிவிக்கலாம். திருக்குறளில் மடியில்லான் தாள் உள்ளாள் தாமரையினாள் என்று சோம்பல் இல்லாதவன் வீட்டில் லடசுமி தேவி வசிப்பாள் என்று உள்ளது. அப்படியானால் திருக்குறளும் இந்துத்துவா புத்தகம தானே
கீதை காட்டும் வருணம் உண்மையானது.சத்தியமானது. கீதை காட்டும் பிறாமணம்ன் பண்பட் மனதால் பிறாமணம். அப்பவவே.காயல்பட்டணத்திலும் அம்பேத்காா் நகாிலும் அக்ரகாரத்திலும் சத்துவ குணம் மேலோங்கிய பிறாணமணா்கள் உள்ளாா்கள்.பிறப்பின் அடிப்படையில் வா்ணம் அமையாது.
அரேபிய அடிமை சுவனப்பிாியன் வேறு என்ன எழுதுவாா் ?

Dr.Anburaj said...

ஸ்ரீபகவத்கீதையை,திருமந்திரத்தை, தாயுமானவரின்ன பாடல்களை,விவேகானந்தாின் ஞானதீபத்தை முஸ்லீம்கள் அனைவரும் படிக்க வேண்டும்.நிறைய முஸலீம்கள் இந்துவாக மாறிவிட அல்லது அரேபிய அடிமைத்னததிலிருந்து விடுபட்டு விடுவாா்கள் எனப்பயந்து இத்தகைய கருத்துக்களை அரேபிய அடிமை தலைவா்கள் வற்புருத்துவது கிடையாது.

C.Sugumar said...

Gandhi on BhagawadGita:


The Gita is the universal mother. She turns away nobody. Her door is wide open to anyone who knocks. A true votary of Gita does not know what disappointment is. He ever dwells in perennial joy and peace that passeth understanding. But that peace and joy come not to skeptic or to him who is proud of his intellect or learning. It is reserved only for the humble in spirit who brings to her worship a fullness of faith and an undivided singleness of mind. There never was a man who worshipped her in that spirit and went disappointed. I find a solace in the Bhagavad-Gita that I miss even in the Sermon on the Mount. When disappointment stares me in the face and all alone I see not one ray of light, I go back to the Bhagavad-Gita. I find a verse here and a verse there , and I immediately begin to smile in the midst of overwhelming tragedies -- and my life has been full of external tragedies -- and if they have left no visible or indelible scar on me, I owe it all to the teaching of Bhagavad-Gita.
தேசப்பிதா காந்திஜிக்கு ஒளியாக வழிகாட்டியாக இருந்த பகவத்கீதையை சுவனப்பிாியன் இவ்வளவு மோசமாக வா்ணனை செய்திருப்பது தேசப்பிதாவை அவமதிப்பதாகும்.

C.Sugumar said...

பகவத்கீதை படித்தவர் அமோிக்க தத்துவ மேதை ஹென்றி டேவிட் தோரயு
"In the morning I bathe my intellect in the stupendous and cosmogonal philosophy of the Bhagavat Geeta, since whose composition years of the gods have elapsed, and in comparison with which our modern world and its literature seem puny and trivial;
......"Whenever I have read any part of the Vedas, I have felt that some unearthly and unknown light illuminated me. In the great teaching of the Vedas, there is no touch of sectarianism. It is of all ages, climes and nationalities and is the royal road for the attainment of the Great Knowledge. When I am at it, I feel that I am under the spangled heavens of a summer night."
One sentence of the Gita, is worth the State of Massachusetts many times over"
The religion and philosophy of the Hebrews are those of a wilder and ruder tribe, wanting the civility and intellectual refinements and subtlety of Vedic culture."

C.Sugumar said...

Arthur Schopenhauer (1788-1860), German philosopher and writer.
"There is no religion or philosophy so sublime and elevating as Vedanta.""From every sentence (of the Upanishads) deep, original and sublime thoughts arise, and the whole is pervaded by a high and holy and earnest spirit...."In the whole world there is no study so beneficial and so elevating as that of the Upanishads. They are destined sooner or later to become the faith of the people."
Schopenhauer, who was in the habit, before going to bed, of performing his devotions from the pages of the Upanishads, regarded them as:" It has been the solace of my life -- it will be the solace of my death."

C.Sugumar said...


திரு.ஆல்டஸ்ஹக்ஸி என்ற அறிஞாின் கூற்று
The Bhagavad-Gita is the most systematic statement of spiritual evolution of endowing value to mankind. It is one of the most clear and comprehensive summaries of perennial philosophy ever revealed; hence its enduring value is subject not only to India but to all of humanity.”
― Aldous Huxley

Dr.Anburaj said...



சுவனப்பிாியன் எந்த கருததையும் தொிவிக்கவில்லையே ஏன் ? அரேபிய மத்தைப் பின்பற்றும் அன்பர்கள் ஏன் வாய்மூடியிருக்கின்றனா்கள் ?

C.Sugumar said...

பிராமணன் முகமானான் – கைகள் அரசன் – தொடைகள் வைசியன் – பாதங்களில் சூத்திரன் தோன்றினான்” என்ற மந்திரம் பல்வேறு வகையான விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகியுள்ளது. இந்து எதிர்ப்பாளர்கள் வேத காலத்திலேயே சாதி வேறுபாடுகளும், அடக்குமுறைகளும் இருந்தன என்பதற்கு சான்றாக இந்த மந்திரம் உள்ளது என்று கூறி இதனைக் கட்டுடைக்கின்றனர்.

varnasrama_dalit_casteஆனால் முழுமையாக இந்த சூக்தத்தையும், ஒட்டுமொத்தமாக ரிக்வேதத்தையும் கற்பவர்கள் அத்தகைய கருத்துக்கள் ஆதாரமற்றவை என்பவை உணர்வார்கள். நான்கு வர்ணத்தினரும் பரம புருஷனின் அங்கங்கள் என்றால் அதன் பொருள் என்ன? நான்கு வர்ணங்களும் தெய்வத் தன்மை கொண்டவை. இதில் ஒரு வர்ணம் இல்லாமல் போனாலும், விராட் புருஷன் குறைபட்டவனாக, ஊனமுற்றவனாக ஆகி விடுகிறான் என்பதே பொருள். விராட் புருஷனின் கால்களில் தோன்றியவர்கள் என்பதால் சூத்திரர்கள் தொடர்ந்து இழிவுற்றனர், அடிமைப் படுத்தப் பட்டனர் என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது. அதுவும் தர்க்க பூர்வமாக இல்லை. ஏனென்றால் இதே சூக்தத்தில் இன்னொரு மந்திரத்தில் “பாதங்களினின்று பூமி தோன்றியது” என்று வருகிறது. அந்த பூமியை வேதம் வழிபாட்டுக்குரியதாக, தெய்வீக அன்னையாகத் தான் கூறுகிறதே அன்றி இழிவான ஒன்றாக அல்ல.

நான்கு வர்ணங்கள் இருந்ததற்கான சான்று இந்த மந்திரத்தில் கிடைக்கிறது என்பது உண்மையே. ஆனால் பிற்காலத்தில் வர்ணங்களை வைத்து உண்டான ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இதில் கற்பிக்கப் படவில்லை. வேதங்களில் எங்கு தேடினாலும் பிறப்பு அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகள் மற்றும் வர்ண ஏற்றத் தாழ்வுகளுக்கான சான்றுகள் கிடைக்காது.

ரிக்வேதத்தில் வைகறையின் தேவியான உஷையைக் குறித்த சூக்தம் (1.113) கூறுகிறது –

வீரச்செயலுக்கென ஒருவனை
புகழுக்கென ஒருவனை
மகத்தான வேள்விக்கென ஒருவனை
பலனுக்கென ஒருவனை
உழைப்பிற்கென ஒருவனை
தொழிலுக்கென அனைவரையும் என
உஷை
புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்
எழுப்பினாள்.

யஜுர்வேதம் (தைத்திரிய சம்ஹிதை 5.7.6.6) கூறுகிறது –

பிராமணர்களுக்கு நல்லொளி தருக
அரசர்க்கு நல்லொளி தருக
வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும்
நல்லொளி அளித்திடுக.

சுக்ல யஜுர்வேதம் கூறுகிறது -

நலம் தரும் இம்மந்திரங்களை
நான் உங்களுக்குக் கூறுகிறேன்
பிராமணர் அரசர் சூத்திரர்
இன்னும் மற்றுமுள்ளோர்
நம் மக்கள் அன்னியர்
அனைவர்க்கும் இவற்றைக் கூறுக.

வேதகால வர்ண அமைப்பு மூன்று காலகட்டங்களைக் கடந்து, அதற்குப் பின்னர் புராணங்களிலும் ஸ்மிருதிகளிலும் குறிப்பிடப் படும் வர்ண அமைப்பாக மாறியுள்ளதாக டாக்டர் அம்பேத்கர் கருதுகிறார். முதல் காலகட்டத்தில் வர்ணம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருவரால் செய்யப்படும் தொழிலாக அமைந்திருந்தது. வாழ்க்கையின் நடுவில் ஒருவர் வர்ணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இரண்டாம் கால கட்டத்தில் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒருவரது வர்ணம் நிர்ணயிக்கப்படும். ஆனால் அதனை அதன் பின்னர் மாற்றிக்கொள்ள முடியாது. மூன்றாவது காலகட்டத்திலேயே அது குல அடிப்படையில் மாறியது. இதற்கான சான்றுகளையும் தனது நூல்களில் அம்பேத்கர் எடுத்துரைக்கிறார். இதன் அடிப்படையில் புருஷ சூக்தத்தில் உள்ள இந்த சித்திரம் வேதகால வர்ண அமைப்பின் முதலிரண்டு காலகட்டங்களையே சார்ந்தது என்று கருத வேண்டும்.

C.Sugumar said...

நான்கு வர்ணத்தினரும் பரம புருஷனின் அங்கங்கள் என்றால் அதன் பொருள் என்ன? நான்கு வர்ணங்களும் தெய்வத் தன்மை கொண்டவை. இதில் ஒரு வர்ணம் இல்லாமல் போனாலும், விராட் புருஷன் குறைபட்டவனாக, ஊனமுற்றவனாக ஆகி விடுகிறான் என்பதே பொருள். விராட் புருஷனின் கால்களில் தோன்றியவர்கள் என்பதால் சூத்திரர்கள் தொடர்ந்து இழிவுற்றனர், அடிமைப் படுத்தப் பட்டனர் என்று ஒரு வாதம் வைக்கப் படுகிறது. அதுவும் தர்க்க பூர்வமாக இல்லை. ஏனென்றால் இதே சூக்தத்தில் இன்னொரு மந்திரத்தில் “பாதங்களினின்று பூமி தோன்றியது” என்று வருகிறது. அந்த பூமியை வேதம் வழிபாட்டுக்குரியதாக, தெய்வீக அன்னையாகத் தான் கூறுகிறதே அன்றி இழிவான ஒன்றாக அல்ல.”-

C.Sugumar said...

/சுக்ல யஜுர்வேதம் கூறுகிறது -

நலம் தரும் இம்மந்திரங்களை
நான் உங்களுக்குக் கூறுகிறேன்
பிராமணர் அரசர் சூத்திரர்
இன்னும் மற்றுமுள்ளோர்
நம் மக்கள் அன்னியர்
அனைவர்க்கும் இவற்றைக் கூறுக.
. ஞான ஒளி எங்கும் பரவச் செய்வோம்.
சுவனப்பிாியன் பகவத் கீதை குறித்து வெளியிட்ட கருத்துப்படத்தினால் என்மனம் புண்பட்டுள்ளது.எனது வருத்தத்தை பதிவு செய்கின்றேன்.