Followers

Sunday, December 14, 2014

எச்சில் இலையில் உருளுவதற்கு உச்ச நீதி மன்றம் தடை!



நேற்று முக்கியமான ஒரு நிகழ்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. உருளு சேவா. கேள்விப்பட்டிருக்கக் கூடும். கர்நாடகாவின் கடற்கரையோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் நடக்கும் உற்சவம். ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்நிகழ்வில் பார்பனர்களுக்கு பந்தி வைப்பார்கள். அவர்கள் வரிசையாக அமர்ந்து போஜனம் முடித்தவுடன் எச்சிலையை எடுக்க மாட்டார்கள். அப்படியே வரிசையாகக் கிடக்கும் இந்த இலைகளின் மீது பார்பனர் அல்லாதவர்கள் படுத்து உருள்வார்கள். இது வேண்டுதல். பிரம்மஹத்தி தோஷமோ அல்லது பாம்பைக் கொன்ற தோஷமோ இருந்தால் விலகிவிடுமாம். இந்தப் பாவங்களினால் உருவாகும் தோல் நோய்களிலிருந்து விடுபடவும் இந்த நேர்த்திக்கடன் முக்கியம் என நம்புகிறார்கள்.

கிட்டத்தட்ட ஐந்நூறு வருட நம்பிக்கை இது.

சூரசம்ஹாரத்தை முடித்துவிட்டு முருகர் இந்த இடத்துக்குத்தான் வந்திருக்கிறார். இங்குதான் தெய்வானைக்கும் முருகருக்கும் திருமணம் நடக்கிறது. இங்கிருக்கும் குகையில்தான் கருடனிடமிருந்து தப்பிப்பதற்காக வாசுகி பாம்பு தவம் புரிந்திருக்கிறது. முருகன் வாசுகிக்கு தரிசனம் கொடுத்து காத்தாராம். அதனால்தான் பாம்பைக் கொன்ற தோஷத்தை போக்குவதென்றால் இங்கே வந்து உருள்கிறார்கள்.



அது ஏன் பார்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பிற்படுத்தப்பட்ட தலித் மக்கள் உருள வேண்டும்? பார்பனர்கள் ஏன் தலித் மக்கள் சாப்பிட்ட இலைகளில் உருளுவதில்லை என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது. :-)

தங்களுக்குள்ள வியாதிகள் எல்லாம் இந்த எச்சில் இலைகள்மீது புரண்டால் தானே குணமாகி விடும் என்ற பக்தி மூடநம்பிக்கை காரணமாக இப்படிச் செய்து வரும் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் ஜாத்ரா (விழா)வாக அக்கோயில் கொண்டாடும் வழக்கம்.
இதனை கர்நாடக நீதிமன்றம் நெடுங்கால பழக்க வழக்கம் என்ற பெயரால் நீடித்து வந்த நெடுங்கால விழாவிற்கு அரசின் தடையை ரத்து செய்தது.

அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு - அப்பீல் செய்தது அதன்மீது தான் உச்சநீதிமன்றம் கர்நாடக நீதிமன்ற தீர்ப்புக்குத் தடை வழங்கியது. இது மாதிரி கர்நாடகத்தில் மூன்று கோயில்களில் எச்சில் இலைமீது உருளும் திருவிழா நடைபெறுகிறது; இது 500ஆண்டு கால பழைய பழக்க வழக்கம். எனவே இதனை நிறுத்தக் கூடாது என்று இக் கோயில்கள் சார்பாக வழக்குரைஞர்கள் வாதித்தனர்.

உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வி

அதற்கு உச்சநீதிமன்றம் நன்றாக ஒரு கேள்வியைக் கேட்டது. தீண்டாமைக் கொடுமைகூட பல நூறு ஆண்டுகளாக உள்ளது என்பதற்காக அதைத் தடை செய்யாமல் இருக்க முடியுமா? டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.

இது மிகவும் பாராட்டத்தகுந்த முற்போக்குக் கருத்துள்ள, மனிதநேயத் தீர்ப்பாகும். நீதிபதிகளை மனதாரப் பாராட்டுகிறோம்.

பார்பனீயம் இந்த அப்பாவி இந்து பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் மேல் தனது மேட்டுக்குடி இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள என்னவெல்லாம் தந்திரங்களை கையாள்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணம்.

உச்ச நீதி மன்றத்தின் தடை அமுல்படுத்தி இந்த விழாவை ரத்து செய்கிறார்களா? அல்லது பார்பனர்களின் எச்சில் இலையில் மற்ற சாதியினர் உருளப் போகிறார்களா என்று டிசம்பர் 27 ஆம் தேதி தெரிந்து விடும். பொறுத்திருந்து பார்போம்.

3 comments:

Anonymous said...

ஏனுங்க சுவனம் 60 சதம் பேர் பின் தொடர்ந்ததால் அவர்கள் எல்லாம் ஆதரித்து பின் தொடர்ந்தார்கள் என்று அர்த்தமா? உமது பதிவை கூட நான் தினமும் பார்க்கிறேன் வேறு இந்துக்களும் பார்க்கிறார்கள் அதனால் உமது மதத்தையும் அதன் கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன் என்றா அர்த்தம். நீங்கள் புதிதாக என்ன உளறியிருக்கிறீர் என்பதை தெரிந்து கொள்ளத்தான். பேஸ்புக் தளத்தில் கூட உமது கும்பல் நடத்தும் பல பக்கங்களுக்கு கமெண்ட் செய்ய வேண்டுமென்றால் அதை லைக் போட்டு தொலைக்க வேண்டியதிருக்கிறது. அதை என்ன இஷ்டபட்டா செய்கிறோம். அது மாதிரி தான் இந்த பாலோ பண்றதும்.

Dr.Anburaj said...

நல்லதொரு மாற்றம்.சுவாமி விவேகானந்தா் வழியில் தியான வழியில் மக்களின் சமய வழக்கங்கள் மாறி அமைய வேண்டும். எசச்சில் இலையில் உருள்வதற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது.
மகாபாரதத்தில் தருமா் அஸவமேதயாகம் செய்தான்.ஸ்ரீகிருஷ்ணா் உட்பட அனைவரும் கூடி வேலைகளை பங்கீட்டுக் கொணடாா்கள்.ஸ்ரீகிருஷ்ணா் அனைவரும் சாப்பிட்ட எச்சில் இலைகளை சுத்தம் செய்யும் வேலையை விரும்பிக் கேட்டு பெற்றுக் கொண்டாா். ஸ்ரீகிருஷ்ணாின உன்னத பண்புக்கு இதற்கு மேல் என்ன காட்ட வேண்டும்.எச்சில் இலையை சுத்தம் செய்ய முன்வருவது பண்பாடு. ஆனால் அதில் போய் உருளுவது தவறு.திருத்த வேண்டியதுதான்.நீதிமன்றத்திற்கு நன்றி.

Dr.Anburaj said...

இந்து சமூகத்தில் உள்ள சிறு குறைகளை புதக்கண்ணாடி போடடு வெளிச்சம்காட்டும் சுவனப்பிாியன் ஷியா முஸ்லீம்கள் கா்பாலா நினைவு தினத்தன்று தங்கள் உடலில் கத்தி கொண்டு சிறுகாயங்கள் ஏற்படுத்திக்கொண்டு பைத்தியங்கள் போல்ஊா்வலம் போகின்றாா்களே 0அதை தடுக்க ஏன் வழங்கு போடவில்லை. பணம் பெருத்த முஸ்லீம்கள் செய்யலாமே! சுவனப்பிாியனிடம் இல்லாத பணமா! அரபு நாடுகளில் இரந்து நன்கொடை கொட்டோ கொட்டோ என்று இந்தியாவில் கொட்டுகிறதே!