நடிகை ஸ்ரீதேவி
இறந்தது ஹார்ட் அட்டாக்கால் இல்லையாம்.
அளவுக்கதிகமாக
மது அருந்தியதால் நிலை தடுமாறி குளியல் தொட்டியில் விழுந்து இறந்துள்ளார். இன்னும்
உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை. விசாரணை தொடர்கிறது.
"நபியே! மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு அவற்றில் சில பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள
பலனைவிடப் பெரிது.”
(அல்குர்ஆன் 2: 219)
(அல்குர்ஆன் 2: 219)
கள் குடி
பற்றித் திருமந்திரம்
உள்உண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வள்ளன்மை நாதன் அருளினன் வாழ்வுறார்
தென் உண்மை ஞான சிவயோகம் சேர்வுறார்
கள் உண்ணும் மாந்தர் கருத்தறியாரே.
திருக்குறள்
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்
மனுதர்மசாஸ்திரம்
மருந்துக்காவது மதுபானம் அருந்தியவன் அப்பாபத்தைப் போக்க கந்தை வஸ்திரத்தைத் தரித்து, சடை முடியுடன் ஓராண்டு நெய்யை அல்லது பிண்ணாக்கை சாப்பிட்டு இருக்க வேண்டும்.
டிஸ்கி: நம் வீடுகளில் பெண்கள் சமையலுக்காக கசகசா என்ற ஒரு பொருளை சேர்ப்பார்கள். அது மிக வீரியமுள்ள போதைப் பொருளாம். இது தெரியாமல் சில பெண்கள் பார்சல் கட்டிக் கொண்டு சவுதி வந்து விடுவார்கள். விமான நிலையத்தில் இதனை மிகப்பெரும் பிரச்சினையாக்கி விடுவர் அலுவலர்கள். எனவே சவுதி வருபவர்கள் கசகசாவை எக்காரணத்தை முன்னிட்டும் கொண்டு வந்து விட வேண்டாம். யாரும் பார்சல் கொடுத்தாலும் பிரித்து சோதித்து விட்டே வாங்கிக் கொள்ளுங்கள்.
எழுத்தாளர் சுஜாதா துபாய் போகும் போது இந்த பிரச்னையை சந்தித்துள்ளார். அப்பொழுதுதான் அவருக்கே கசகசா போதைப் பொருள் என்பது தெரியுமாம். 'ஸ்ரீரங்கத்து திண்ணைகளில் பல அம்பிகள் கசகசாவை விழுங்கி விட்டு உருண்டு கிடந்தது ஏன் என்பதன் காரணம் இப்போது தான் விளங்குகிறது' என்று ஹாஸ்யமாக அதனை விளக்குவார். :-)

1 comment:
ஒரு நடிகையின் பெயரைக் குறிப்பிடாது மதுவின் தீமைகளை விளக்கியிருக்க வேண்டும்.
அந்த அம்மா நடித்தார்கள் பணம் சம்பாதித்தார்கள். செத்தார்கள். நமக்கு என்ன ?
Post a Comment