Followers

Wednesday, February 28, 2018

இஸ்லாத்தில் மனித நேயம் நடைமுறையில் இருக்கின்றதா?

கேள்வி: இஸ்லாத்தில் மனித நேயம் இருக்கின்றது சரி. அது நடைமுறையில் இருக்கின்றதா? அப்படி இருந்தால் ஏன் இஸ்லாமிய நாடுகள் தங்களுக்குள் சண்டையிடுகின்றன. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியது தானே என்று நண்பர் ஒருவர் வினவுகிறார். மேலும், உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள் என்றார்.
– ஏ.ஆர். சைபுல்லாஹ், யு.ஏ.இ.

பதில்: இந்தக் கேள்விக்குரிய சரியான விடை நம்மைத் திருத்திக் கொள்வது தான்.
இஸ்லாமிய நாடுகளின் சண்டைகளை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் நம்மிடையே பூரணமான சகோதரத்துவத்தைக் கடைப்பிடித்தால், ஒருவருக்கொருவர் உதவுவதில் மற்றவர்களை விட முன்னணியில் நாம் இருந்தால் அந்த நாடுகளின் நடவடிக்கைக்கும், இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று நாம் கூறுவதை அவர்கள் நம்புவார்கள்.
எனவே முஸ்லிம் சமுதாயம் இது போன்ற கேள்விகளிலிருந்து 'மற்றவர்கள் நம்மை எந்த அளவுக்குக் கவனிக்கிறார்கள்? நம்மிடம் எந்த அளவுக்கு எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இது நம்மவருக்குக் கூற வேண்டிய செய்தியாகும்.
முஸ்லிம்கள் என இன்று உலகில் வாழ்பவர்களில் தொன்னூறு சதவிகிதம் பேர் பல்வேறு மதங்களை ஆய்வு செய்து, இஸ்லாம் சரியான வாழ்க்கை நெறி என்று உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர்.
மாறாக தமது பெற்றோர் முஸ்லிம்களாக இருந்ததால் தம்மையும் முஸ்லிம்களில் சேர்த்துக் கொண்டவர்கள். இஸ்லாத்தின் அடிப்படை என்ன என்பதை அறியாதவர்கள் கூட இத்தகையோரில் உள்ளனர்.
அதாவது இஸ்லாத்தைப் புரிந்து கொண்டு ஏற்காதவர்களே பெரும்பாலான முஸ்லிம்களாகவுள்ளதால் தான் அந்த நண்பர் சுட்டிக்காட்டுகிற நிலைமை இருக்கிறது. அதிலும் முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களின் நிலைமை இதை விட மோசமாகவுள்ளது.
அவர்களில் பலர் பெயரளவுக்குத் தான் முஸ்லிம்களே தவிர முழுக்க முழுக்க மேற்கத்தியக் கலாச்சாரத்தின் அடிமைகளாவே அவர்கள் உள்ளனர். எனவே தான் நாடு பிடிப்பதற்கும், இன்னபிற நோக்கத்திற்கும் அண்டை நாடுகளுடன் சண்டையிட்டு வருகின்றனர் என்பதை நண்பருக்கு விளக்குங்கள்!
முஸ்லிம்களை முஸ்லிம்களாக வாழச் செய்ய இன்னும் கடுமையாக நாம் உழைத்தால் இது போன்ற கேள்விகளை யாரும் கேட்க முடியாமல் செய்யலாம்.
(பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து)

2 comments:

Dr.Anburaj said...

முஸ்லீம் ஆக வாழ்வது என்பதும் அரேபியன் போல் வாழ்வது என்பதும் ஒரே கருத்துதான்.


மனிதனாக வாழ வேண்டும் என்ற கருத்துதான் சரியானது.முஸ்லீம் இந்து கிறிஸ்வர்


என்பது மனிதன் உண்டாக்கியதுதான்.இறைவன் முன் அனைவரும் மனிதர்களே.

அரேபியன் போல் இல்லாத மனிதர்களை மதிக்காமல் மிதித்ததால்தான் இசுலாமிய அரேபிய சமூகம் தானும் அழிந்து பிறரையும் அழிக்கும் அரக்கர்களாக வாழ்ந்து வருகின்றார்கள்.

Dr.Anburaj said...

அகண்ட அரபிஸ்தான் மட்டும் அல்ல உலகையே வென்று அரபு மயமாக்க வேண்டும் என்று திட்டம் கொண்டவா் முகம்மது.அரேபிய மண்ணில் சிறியதும் பொியதுமாக 64 போர்களை அதில் மிக கொடூரமான போர்களும் அடங்கும் - சக்கரவா்த்தியாக கீரிடம் அணியாமல் அரசாட்சி செய்தாா்.மனிதநேயம் ஜனநாயக மனப்பான்மை அப்போதே கடுகளவும் கிடையாது.

ஆனால் ஆட்சியாளா் எப்படி தோ்வு செய்யப்பட வேண்டும் ஆட்சியாளா்கள் மாற்றப்பட வேண்டுமானால் எப்படி செய்ய வேண்டும் என்ற விசயங்களைக் குறித்து தம் கருத்தை பதிவு செய்யவில்லை.
இவரது மறைவிற்கு பிறகு பதவிபித்து பிடித்து நபி தோழர்கள் சொர்க்கத்தின் வாரிசுகள் என்று புகழப்பட்டவா்கள் எப்படியெல்லாம் சண்டையிட்டு பிணங்கினார்கள் என்பதை மனிதநேயமற்ற வரலாற்றை எவரும் தொிந்து கொள்ளலாம்.
இசுலாம் என்பது அரேபிய வல்லாதிக்க இயக்கம்.எனவே அது சதா யுத்தம் செய்வதை வலியுருத்தும் கருத்துக்கள் நிறைய உள்ளது.
அரேபிய மத அடிமை நாடுகள் அனைத்தும் பணபலன் மிகுந்த நாடுகள்.ஆனால்
1அறிவியல் ஆய்வில்
2.மருத்துவ துறையில்
3.மனிதாபிமானத்துறையில்
4.விணவெளி ஆய்வில் சாதனையில்
எதிலாவது சாதனை புரிந்துள்ளாா்களா ?

தின்பதிலும் குமுஸ் பெண்களை சல்லாபிப்பதிலும் காபீா்கள் என்று நல்லவா்களை பழித்து அழிப்பதிலும் தங்களின் ஆற்றலை செலவு செய்து மனதில் வெறுப்புணா்வை வளா்தது பின் தங்களுக்குள் சண்டையிட்டு அழிந்து வருகின்றார்கள். கலகம் செய்வதுதான் முஸ்லீம்களுக்கு கைவந்த கலை.மஹம்மதுவிற்கும் அதுதான் பலம்.

மக்களை பண்படுத்தும் தகுதி அரேபிய மத இலக்கியங்களுக்கு இல்லை.எனவே குரானை முகம்மதுவை பின்பற்றும் அளவிற்கு அந்த சமூகம் அழிவையே தனக்கும் பிறருக்கும் அளிக்கும்.
இன்றைய உலகம் தான் அதற்கு நிரூபணம்.