ஐரோப்பிய கல்லூரிகளிலும் இஸ்லாமிய எழுச்சி!
ஐரோப்பிய கல்லூரிகளில் இளம் மாணவர்கள் இறைவனை தொழும் அழகைப் பாருங்கள். இடம் இல்லை என்றாலும் படிக்கும் டெஸ்குகளை விரிப்பாக ஆக்கி தங்களின் கடமையை நிறைவேற்றுகின்றனர். இந்த தொழுகையில் நாம் கவனமாக இருந்தால் உலகின் எந்த பிரச்னைகளையும் சுலபமாக தீர்க்கும் வழியை இறைவன் நமக்கு காட்டுவான். தொழுகையில் கவனத்தை செலுத்தி தீய செயல்களிலிருந்து தவிர்ந்து கொள்வோம்.
ஒருவர் தமது வீடு அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஜந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது ஒருவர் உளூ செய்து அதை அழகாகவும் செய்து பின்னர் தொழவேண்டும் என்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் செல்வாரானால் அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஒரு அந்தஸ்த்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் இருக்கும் போதெல்லாம் அவருக்காக மலக்குகள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில் இறைவா நீ இந்த மனிதன் மீது அருள்புரிவாயாக, உனது கருணையை அவருக்கு வழங்குவாயாக என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (647)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (647)
1 comment:
அரேபியாவில் மதம் என்பது ஒரு ஆதிக்கம் பெறும் நடவடிக்கை.
மனிதர்கள் குழுவாக கூட்டமாக சோ்ந்து தங்கள் குழுதான் சிறந்தது உயா்ந்தது என்று பேசி மற்றவா்களை விட அரசியல் பலத்திலும் பொருளாதாரத்திலும் மேன்மை பெற முயல்வதுதான்.
அதனால்தான் தொளுகை என்பது கூட்டாகச் செய்ய வேண்டும் என்ற கருத்து வலிமை பெறுகின்றது. அணி மனப்பான்மையை உறுதி செய்யவே இந்த ஏற்பாடு.ராணுவத்தில் right left right turn left turn about turn என்று அணி வகுப்பு நடத்துவது தலைமைக்கு கட்டுபட்டு நடக்க மனதை பழக்கும் ஒரு நடவடிக்கையே.அரேபிய தொளுகை இதுதான்.இங்கு பக்தி கிடையாது.
பக்தி இருந்தால் ஏன் இரண்டாம் கலிபா உமா் முஹம்மதுவின் அன்பு மகள் பாத்திமா வீட்டிற்கு தீ வைப்பாரா ?
கீழே தள்ளி விட்டு கர்ப்பிணி பெண்ணாக பாத்திமா கருக்கலைந்து மரணம் அடைய காரணமாக இருப்பாரா ?
3ம் கலிபா உதுமான் கொல்லப்படுவாரா ? அவரது பிணம் யுதர்கள் அடக்கம் செய்யும் இடத்தில் அநாதையாக கிடக்குமா ?
சின்ன மாமி ஆயிசாவுக்கும் மருமகன் அலிக்கும் பதிவிச்சண்டையில் ஒட்டக்போர் நடந்து 5000-10000 முஸ்லீம்கள் செத்தார்களே ?
4ம் கலிபா வாக பொறுப்பேற்ற முஹம்மதுவின் மருமகனை கடைசிவரை நிம்மதியாக ஆட்சி பண்ண விட்டார்களா ? அது பக்தியா
நாட்டின் அனைத்து பகுதி கவர்னா்களும் அவருக்கு எதிராக கீழ்படியாமை இயக்கம் நடத்தினார்களே ? அது பக்தியா ?
பின் அலி கொலை செய்யப்பட்டாரே ? அது பக்தியா ?
முஹம்மதுவின் பேரன்கள் -அலி-பாத்திமா தம்பதியினரின் குழந்தைகளின் குடும்பம் படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்டார்களே ! அது பக்தியா ?
இசுலாம் ஒரு அரேபிய வல்லாதிக்க இயக்கம்.Arabian imperialims is otherwise called Islam.
Post a Comment