Followers

Saturday, February 17, 2018

மரண சாஸனத்தை முறையாக நிறைவேற்றிய மகன்கள்!


மரண சாஸனத்தை முறையாக நிறைவேற்றிய மகன்கள்!

அல்சும்மாரி எனும் ரியாதில் வசித்து வந்த ஒரு சவுதி இறந்து விடுகிறார். இவர் இறந்து ஆறு வருடங்களுக்கு பின் அவர் மகன்கள் அவர் எழுதியிருந்த உயிலை படிக்க நேர்ந்தது.

அதில் அவர் எழுதியிருந்ததில் ஒரு முக்கிய அம்சம் இதுதான்.

என் சொத்துக்களை விற்கும் போது 1996 வரை நம் வீட்டில் டிரைவராக பணி புரிந்த சிரிலங்காவைச் சேர்ந்த லெப்பை என்பவருக்கு சவுதி ரியால் 11000 கொடுத்து விடவும்.”

இதைப்படித்த அவர் மகன்கள் , அப்பாவின் இறுதி ஆசையை நிறைவேற்ற , லெப்பை அவர்களின் விவரங்கள் தேடிய போது, அவரின் பாஸ்போர்ட் காபி மட்டும் கிடைத்தது.

உடனே அவர்கள் ரியாத் சிரிலங்கா தூதரகத்தை தொடர்பு கொண்டு , லெப்பையை தேடி கண்டு பிடித்து 11000 ரியால்களை அவருக்கு கொடுக்க சொல்லி ஒப்படைத்திருக்கிறார்கள்.

தந்தை மறைந்தாலும் அவர் கோரிக்கையை நிறைவேற்ற முனையும் மகன்களைப் பெற்ற தந்தை எவ்வளவு பெரிய பாக்கியவான்.


"உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர், ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின் அவர் தம் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் முறைப்படி வஸிய்யத் (மரண சாஸனம்) செய்வது விதியாக்கப் பட்டிருக்கிறது. இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது பயபக்தியுடையோர் மீது கடமையாகும்.

வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர் எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ, அவர்கள் மீதே சாரும். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் கேட்பவனாகாவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.

ஆனால் வஸிய்யத் செய்பவரிடம் பாரபட்சம் போன்ற தவறோ, அல்லது மனமுரண்டான அநீதமோ இருப்பதை அஞ்சி ஒருவர் சம்பந்தப்பட்டவர்களிடையே சமாதானம் செய்து அந்த (வஸிய்யத்தை) சீர் செய்தால் அப்படிச் செய்பவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கின்றான். 

(அல்குர் ஆன்: 2:180,181,182)



1 comment:

Dr.Anburaj said...

இது ஒரு மிகச்சாதாரணமான நிகழ்வு.அரேபிய அடிமைத்தனம் அரேபியர்களை புகழ கிடைத்த வாய்ப்பை தவறவிடவில்லை. வாழ்க