Followers

Sunday, February 18, 2018

கொள்ளையடிக்க வழி அமைத்துக் கொடுக்கும் புரோக்கரா?


மும்பையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:

சாத்தியமான கொள்கை, திட்டமிடல் மற்றும் செயல் திறன் ஆகியவையே முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது. திட்ட மிடாத கட்டமைப்பின் சுவர்களை அகற்றுவதன் மூலம் அரசு வரம்புகளை குறைத்து வரவு செலவு திட்டத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது .

தினமலர்
18-02-2018

நீங்கள் நன்றாகவே திட்டமிடுகிறீர்கள்: செயல் திறனை நன்றாகவே காட்டுகிறீர்கள். விஜய் மல்லையாவிடமும், நீரவ் மோடியிடமும் நீங்கள் காட்டிய திட்டமிடல், செயல் திறனை பார்த்து உலக நாடுகளே காறி துப்புகின்றன மோடி அவர்களே... நீங்கள் நாட்டு மக்களுக்கு பிரதமரா? அல்லது அம்பானி, விஜய் மல்லையா போன்றவர்களுக்கு கொள்ளையடிக்க வழி அமைத்துக் கொடுக்கும் புரோக்கரா?

10 comments:

Dr.Anburaj said...

அறன் எனப்பட்டதே இல்வாழ்கை



எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்

இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்



கல்லை மென்கனியாக்கும் விச்சைகொண்டென்னை நின்கழற்கன்பனாக்கினாய்

எல்லையில்லை நின்கருணை யெம்பிரான்



குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே







தண்டியக்காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடி விழுந்துஒடிட







மலையிடைப் பிறவா மணியே என்கோ?

அலையிடைப்பிறவா அமிழ்தே என்கோ?

யாழிடைப் பிறவா இசையே என்கோ?



.கனியிருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே



தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருக பணித்தருள்வாய்



கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே

Dr.Anburaj said...

மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? சாணக்கியன் அறிவுரை (Post No.4760)

ஒரு தந்தை தனது மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? எப்போது அவனை நண்பனாக நடத்த வேண்டும் என்று சாணக்கியன் சொல்கிறான்.

மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் பேசாத விஷயமே இல்லை. மாபெரும் மகத சாம்ராஜ்யத்தைத் ஸ்தாபித்த, மிகப் பெரிய பொருளாதார நிபுணன் , ராஜ தந்திரி மற்ற விஷயங்கள் பற்றிச் சொல்லுவது அற்புதமானது. அவருக்குப் பின்னர் தமிழகத்தில் தோன்றிய வள்ளுவன், திருக்குறளில் செப்பும் கருத்துகள் பல, சாணக்கியனின் கருத்துகளை எதி, ரொலிப்பதாக உள்ளது. இமயம் முதல் குமரி வரை பாரதீய சிந்தனை ஒன்றே என்பதற்கு இது மேலும் ஒரு சான்று.

ஒரு மகனை தந்தையானவர் ஐந்து வயது வரை கொஞ்சலாம்; பத்து வயது வரை கட்டு திட்டங்களுடன் பராமரிக்கலாம். 16 வயதை அடைந்துவிட்டாலோ மகனை நண்பரைப் போல நடத்த வேண்டும்

லாலயேத் பஞ்ச வர்ஷாணி தச வர்ஷாணி தாடயேத்

ப்ராப்தே து ஷோடசே வர்ஷே புத்ரம் மித்ரவதாசரேத்

சாணக்கிய நீதி 3-18


வரமேகோ குணீ புத்ரோ நிர்குணைஸ்ச சதைரபி

ஏகஸ்சந்த்ரஸ்தமோ ஹந்தி ந ச தாராகணைரபி

சாணக்கிய நீதி 4-6

Dr.Anburaj said...

குணமற்ற நூறு புதல்வர்களைவிட குணவானாகிய ஒரு பிள்ளை இருப்பது மேல்; இரவு நேரத்தில் ஒரு நிலவு இருளை எல்லாம் போக்கிவிடும்; நிறைய நட்சத்திரங்கள் போக்காது.

மூர்க்கஸ்சிராயுர் ஜாதோபி தஸ்மாத் ஜாதம்ருதோ வரஹ

ம்ருதஹ ச்ஸ சால்பதுக்காய யாவஜ்ஜீவம் ஜடோ தஹேத்

சாணக்கிய நீதி 4-7

ஒரு முட்டாள் குழந்தையைப் பெறுவதற்குப் பதிலாகக் குறைப் பிரசவம் ஆனாலும் சரியே. குறைப் பிரசவம் என்பது அந்த நேரத்தில் துக்கத்தைக் கொடுத்துவிட்டு மறைந்து விடும்; முட்டாள் பிள்ளையோ பெற்றோரின் வாழ்நாள் முழுதையும் வீணாக்கி விடும்.

ஏகோநாபி ஸுபுத்ரேண வித்யாயுக்தேன ஸாதுனா

ஆஹாலாதிதம் குலம் ஸர்வம் யதா சந்த்ரேண சர்வரீ

சாணக்கிய நீதி 3-16


ஒரு நல்ல மகன் இருந்தால் அவன் குடும்பம் முழுவதையும் புகழ் அடையச் செய்வான்; ஒரு சந்திரனால் இரவும் முழுதும் ஒளி பெறுவதைப் போல!


கிம் ஜாதைர்பஹுபிஹி புத்ரைஹி சோக ஸந்தாபகாரகைஹி

வரமேகஹ குலாலம்பீ யத்ர விஸ்ராம்யதே குலம்

சாணக்கிய நீதி 3-17

துக்கத்தையும் கெட்ட பெயரையும் உண்டாக்கும் பல புதல்வர்கள் இருந்து என்ன பயன்? குடும்பம் முழுதும் பயன அடையக்கூடிய ஒரு மகன் போதும்.

இதை மக்கட்பேறு என்ற அதிகாரத்தில் வள்ளுவன் எழுதிய பத்து குறட்களுடன் ஒப்பிட்டால் இரு அறிஞர்களும் ஒரே விஷயத்தைச் சொல்லுவதைக் காணலாம்;

Dr.Anburaj said...

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்— 62



மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்னோற்றான் கொல்லெனுஞ் சொல் –70



ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்

சான்றோன் எனக் கேட்ட தாய் –69



தம்மின் தம் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது- 68

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தியிருப்பச் செயல் –67

பொருள் எழுதத் தேவை இல்லாத, எளிமையான,எல்லோருக்கும் தெரிந்த குறள்கள்!

Dr.Anburaj said...



இந்து மத புராணங்களில் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்குப் புகழ் பெற்ற சிறுவர்கள் உள்ளனர்:


நட்சத்திர நிலைக்கு உயர்ந்த துருவன்,

ஒரு அணையை கை விரலால் இரவு முழுதும் அடைத்த ஸ்வேதகேது,

யமனையே விரட்டிச் சென்று கேள்வி கேட்ட நஸிகேதஸ்,

புத்திசாலியான என்றும் 16 வயது வாழும் வரம் பெற்ற மார்கண்டேயன்,

இறைவன் பெயரைச் சொல்லி தந்தையின் ஆட்சியையே எதிர்த்த பிரகலாதன்,

16 வயத்துக்குள் பல்லாயிரம் பாடல் பாடிய ஞான சம்பந்தன்,

16 வயதுக்குள் பாவை பாடிய ஆண்டாள்,

இளம் வயதிலேயே நாட்டை வலம் வந்த ஆதிசங்கரர்!

போன்ற பல இளைஞர்கள் முன் உதாரணமாக விளங்கினர். உலகில் வேறு எந்த சமயத்திலும், கலாசாரத்திலும் இப்படி இல்லை என்பதால் பாரதீய கலாசாரமே பழமையான, முதன்மையான நாகரீகம் என்பது சொல்லாமலேயே விளங்கும்.


TAMIL AND VEDAS o

Dr.Anburaj said...

ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தான்; அவன் வாரி வழங்கும் வள்ளல்; கவிஞர்களுக்கும் அறிஞர்களுக்கும் கொடுத்தான். அவனிடம் பரிசு பெற்ற பலர் அவனைப் பாராட்டினர். ஆனால் அறிஞர் பெருமக்களோ எல்லாம் இறைவன் செயல் என்று தனி மனிதன் துதியில் இறங்கவில்லை.

பரிசு வாங்கியவர்களில் ஒருவர் அரசனை இந்திரனே, சந்திரனே, பாரியே ஓரியே, காரியே என்று புகழ்ந்தார். வேறு ஒரு அறிஞர் ‘’அவனின்றி ஓர் அணுவும் அசையாது — எல்லாம் ஈசன் செயல் — ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் என்று சொன்னார்.

‘’ஈஸாவாஸ்யம் இதம் சர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்

தேன த்யக்தேன புஞ்சீதா மாக்ருதஹ கஸ்யஸ்யத்வித்தனம்’’

—–ஈஸாவாஸ்ய உபநிஷத்தின் முதல் மந்திரம்

பொருள்

இந்த உலகம் முழுவதும் இறைவனால் வியாபிக்கப்பட்டுள்ளது; எல்லாம் அவன் கட்டுப்பாட்டில் உள்ளது; அவரவர்களுக்குரியதை அனுபவியுங்கள்; பிறருடைய செல்வத்துக்கு ஆசைப் படாதீர்கள்

எத்தனை முறை பரிசு கொடுத்தாலும் இதே கதைதான். அரசனோ தன்னைப் புகழ்வதையே விரும்பினான். இறைவன் பற்றிய புகழ்ச்சியை அவன் விரும்பவில்லை. ஆனால் அறிஞர் பெருமக்களிடம் என்னைப் புகழ்ந்து பேசுங்கள், பாடுங்கள் என்று சொல்லத் துணிவும் இல்லை.

Dr.Anburaj said...

ஒரு முறை இதை அறிஞருக்கு குறிப்பால் உணர்த்துவோம் என்று கருதி இருவரையும் அழைத்தான்; தன்னை எக்காலமும் முக்காலமும் புகழும் ஒரு ஆளுக்கு ஒரு பூசணிக்காய்க்குள் ரத்தினக் கற்களை நிரப்பிக் கொடுத்தான் அதை வாங்கியவர் வெறும் பூசணிக்காய் என்றே நினத்தார். குறைந்த மதிப்புள்ள இரண்டு நாணயங்களை அறிஞரிடம் கொடுத்தார். இருவரும் புதிய பரிசுப் பொருட்களுடன் அரண்மனையிலிருந்து வீடு சென்றனர்.





பூசணிக்காய் வாங்கியவருக்குக் கொஞ்சமும் திருப்தி இல்லை. அவர் வீட்டின் வழியாகச் சென்ற அறிஞரை அழைத்து நீங்களே இந்தப் பூசணிக்காயையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றான்; அவரும் அதை மனமுவந்து ஏற்று, என்னிடமுள்ள இரண்டு காசுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.



அறிஞர் பெருமகன் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் பூசணிக்காயைக் கொடுத்து சமைக்கச் சொன்னார். அவள் அதை வெட்டிய அடுத்த நிமிடம் ரத்தினக் கற்கள் கீழே விழுந்தன. உடனே அந்த அறிஞர் நமக்குத் தேவையானதற்கு மேல் எதுகிடைத்தாலும் அதற்கு ஆசைப்படக்கூடாது; ‘ஈஸாவஸ்யம் இதம் சர்வம்’ என்ற உபநிஷத மந்திரத்தைச் சொல்லி, அரசனிடமே அந்த ரத்தினக் கற்களைக் கொடுத்து பூசணிக்காய் விஷயத்தைச் சொன்னார். அரசனனுக்குகு பெரும் வியப்பு!!



நான் இந்த ஆளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காக காய்க்குள் மறைத்து ரத்தினக் கற்களை வேறு ஒருவருக்குக் கொடுத்தேன். நான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறதே’ என்று வியந்தான். பின்னர் அ’வனின்றி ஒரு அணுவும் அசையாது’ என்பது உண்மையே என்பதை ஏற்று தனது தவற்றையும் அறிந்தான்.

அவனுடைய அஹங்காரம் அகன்றது; யார் யாருக்கு என்ன என்னவென்பதை இறைவன் ஏற்கனவே நிச்சயித்து விட்டான்; நான் ஒரு கருவி மட்டுமே என்ற ஞானோதயம் ஏற்பட்டது.

இறைவனின் கணக்குப்படியே எல்லாம் நடக்கும் என்பதை உணர்ந்தான்.

Dr.Anburaj said...

சங்க இலக்கியத்தில் வரும் ஒரு பாடல் கடலில் மாண்ட பாண்டிய மன்னனான இளம்பெருவழுதி பாடியது. அதில் நல்ல தமிழன் ஒருவனின் இலக்கணத்தைப் பாண்டிய மன்னன் சொல்வது நம்மை பிரமிக்க வைக்கும். பாடல் இது தான் :





உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர்

அமிழ்த மியைவ தாயினு மினிதெனத்

தமியருண்டலு மிலரே முனிவிலர்

துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்

புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனி

உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்

அன்ன மாட்சி யனைய ராகித்

தமக்கென முயலா நோன்றாட்

பிறர்க்கென முயலுந ருண்மையானே (பாடல் 182)





பாடலின் பொருள்:

இந்த உலகம் இருப்பதன் காரணம் இது தான்!

இந்திரர்க்குரிய அமிர்தம் கிடைத்தாலும் கூட அதைத் தனியே தான் ஒருவனே உண்ணமாட்டார். யாருடனும் வெறுப்பில்லாதவர்.பிறர் அஞ்சுவதற்கு அஞ்சி அது தீர்தல் பொருட்டு மடிந்திருத்தலும் இலர். புகழ் கிடைப்பதாக இருந்தால் தம்முடைய உயிரையும் கொடுப்பர். பழி வருவதாக இருந்தாலோ உலகம் முழுவதும் கிடைப்பதாக இருந்தாலும் அதைச் செய்ய மாட்டார்; அயர்வே இல்லாதவர். இவ்வளவு பெற்றி உடையவராக தமக்கென்று முயலாமல் பிறர் பொருட்டென முயல்வார்.

அப்படிப்பட்டவர் இருப்பதால் அல்லவா இந்த உலகம் நிலை பெற்றிருக்கிறது!

பாண்டியனின் கூற்றின் சாரம் பிறர்க்கென வாழ்பவரால் அல்லவா உலகம் நிலை பெற்று இன்னும் இருக்கிறது!

Dr.Anburaj said...

ஒரு முறை இதை அறிஞருக்கு குறிப்பால் உணர்த்துவோம் என்று கருதி இருவரையும் அழைத்தான்; தன்னை எக்காலமும் முக்காலமும் புகழும் ஒரு ஆளுக்கு ஒரு பூசணிக்காய்க்குள் ரத்தினக் கற்களை நிரப்பிக் கொடுத்தான் அதை வாங்கியவர் வெறும் பூசணிக்காய் என்றே நினத்தார். குறைந்த மதிப்புள்ள இரண்டு நாணயங்களை அறிஞரிடம் கொடுத்தார். இருவரும் புதிய பரிசுப் பொருட்களுடன் அரண்மனையிலிருந்து வீடு சென்றனர்.





பூசணிக்காய் வாங்கியவருக்குக் கொஞ்சமும் திருப்தி இல்லை. அவர் வீட்டின் வழியாகச் சென்ற அறிஞரை அழைத்து நீங்களே இந்தப் பூசணிக்காயையும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றான்; அவரும் அதை மனமுவந்து ஏற்று, என்னிடமுள்ள இரண்டு காசுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.



அறிஞர் பெருமகன் வீட்டிற்குச் சென்று மனைவியிடம் பூசணிக்காயைக் கொடுத்து சமைக்கச் சொன்னார். அவள் அதை வெட்டிய அடுத்த நிமிடம் ரத்தினக் கற்கள் கீழே விழுந்தன. உடனே அந்த அறிஞர் நமக்குத் தேவையானதற்கு மேல் எதுகிடைத்தாலும் அதற்கு ஆசைப்படக்கூடாது; ‘ஈஸாவஸ்யம் இதம் சர்வம்’ என்ற உபநிஷத மந்திரத்தைச் சொல்லி, அரசனிடமே அந்த ரத்தினக் கற்களைக் கொடுத்து பூசணிக்காய் விஷயத்தைச் சொன்னார். அரசனனுக்குகு பெரும் வியப்பு!!



நான் இந்த ஆளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காக காய்க்குள் மறைத்து ரத்தினக் கற்களை வேறு ஒருவருக்குக் கொடுத்தேன். நான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறதே’ என்று வியந்தான். பின்னர் அ’வனின்றி ஒரு அணுவும் அசையாது’ என்பது உண்மையே என்பதை ஏற்று தனது தவற்றையும் அறிந்தான்.

அவனுடைய அஹங்காரம் அகன்றது; யார் யாருக்கு என்ன என்னவென்பதை இறைவன் ஏற்கனவே நிச்சயித்து விட்டான்; நான் ஒரு கருவி மட்டுமே என்ற ஞானோதயம் ஏற்பட்டது.

இறைவனின் கணக்குப்படியே எல்லாம் நடக்கும் என்பதை உணர்ந்தான்.

Dr.Anburaj said...

ஸ்வாமி விவேகானந்தர் மிக அழகுறக் கூறிய வார்த்தைகள் இவை:



THEY ALONE LIVE WHO LIVE FOR OTHERS

THE REST ARE MORE DEAD THAN ALIVE!

மற்றவருக்குச் சேவை புரிந்து வாழ்பவனே வாழ்பவன்;

மற்றவர்கள் உயிரோடிருந்தாலும் இறந்தவரே!