Followers

Tuesday, February 27, 2018

காஞ்சிப் பெரியவர் ஜெயேந்திரர் இன்று காலை இறந்து விட்டார்!


காஞ்சிப் பெரியவர் ஜெயேந்திரர் இன்று காலை இறந்து விட்டார்!

நீங்கள் எங்கிருத்த போதிலும் உங்களை மரணம் வந்தடையும். பலமாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் வசித்தாலும் சரியே!’

குர்ஆன் (அந்நிஸா: 78)

மனிதர்கள் என்றுமே மனிதர்கள்தான். அவர்கள் என்றுமே இறை தன்மையை அடைய முடியாது என்பதற்கு இது போன்ற இறப்புகள் சான்று பகர்கின்றன. இறைவனுக்கென்று சில இலக்கணங்கள் உள்ளன.

1.மனிதர்களை தரம் பிரித்து 'நீ உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்று கூறுபவன் இறைவனாக முடியாது.

2. மல ஜலம் வியர்வை போன்றவற்றை சுமந்திருப்பவர்கள் இறைவனாக முடியாது.

3.சமஸ்கிரதம் உயர்ந்தது: தமிழ் மொழி தாழ்ந்தது. அது ஒரு நீச மொழி என்று சொல்வபர் இறைவனாக முடியாது.

4.ஒரு தாய்க்கு பிறந்து சில காலம் ஆசாபாசங்களோடு வாழ்ந்து ஒரு மனிதனாக இறந்தவர் இறைவனாக முடியாது.

5. ஒரு பகுதிக்கு ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு மட்டும் இறைவனாக இருந்து கொண்டு அருளாசி வழங்கிக் கொணடு இருப்பவர் இறைவனாக முடியாது. 

இது போன்ற இலக்கணங்களை எல்லாம் நாம் இறை தன்மையோடு பொருத்திப் பார்க்காததாலேயே இறைவனைப் பற்றிய குழப்பங்கள் இன்றும் பலருக்கு இருந்து வருகிறது.

ஜெயேந்திரரை பிரிந்து வாடும் அவரது பக்தர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.



1 comment:

Dr.Anburaj said...

சில சமய அனுஷ்டானங்களை பின்பற்றினாா்
அதில் தவறு என்ன ?
உயா்ந்தவன் தாழ்ந்தவன் என்று யாரையும் அவர் கருதவில்லை.
மனிதர்கள் பிறப்பின் அடிப்படையில் மாறுபட்ட ஆளுமை பண்புகள் கொண்டுள்ளார்கள் என்பது உண்மை.

சமஸ்கிருதம் உயா்ந்தது என்று சொல்வது தவறில்லை.தமிழை நீச பாசை என்று அவா் சொன்னதில்லை.

சங்கரமடம் வளா்ந்துள்ளது.பழைய காலத்தில் அக்ரகார மடமாக இருந்தது உண்மைதான்.

ஆனால் அந்த சுவற்றை உடைத்து அனைத்து இந்துக்களும் சங்கர மடத்திற்கு வருவதற்கு வழி வகுத்து கொடுத்தவா் ஸ்ரீஜெயேந்திரா்.
இவரே ஊா் ஃஊராக கிராமம் கிராமமாக சென்றாரே.மறந்து விட்டதா

ஸ்ரீஜெயேந்தரா்“ குறித்த தங்கள் பதிவு பண்பாடற்ற பதிவு.இதற்கு இவா்
குறித்து பதிவுகள் ஏதும் செய்யாமலே இருந்திருக்கலாம்.
துஷ்டத்தனம்.