கணவனால்
கைவிடப்பட்ட பெண் விபத்தில் பலத்த காயம்!
ராஜஸ்தான்
மாநிலம் கோடா - சித்தூர் நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் யசோதாபென் சென்ற
வாகனம் விபத்திற்குள்ளானது. இதில் அவருடன் வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் காயமடைந்த யசோதாபென் சித்தூர்கர் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தினமலர்
07-02-2018
பாவம் இந்த அபலை பெண்! அவர்
நலமடைந்து வீடு திரும்ப நாமும் பிரார்த்திப்போம்! தற்போது மருத்துவமனையில் இருக்கும்
இவரை இந்த நிலையிலாவது ஓடிப் போன கணவன் பார்க்க வருவாரா?
4 comments:
சகோதரிக்கு இறைவருள் கிடைக்க பிரார்த்தனை செய்வோம்.
மெஜாரிட்டி தோற்கும், மைனாரிட்டி வெல்லும்- ராமாயண, மாபாரத அதிசயம்! (Post No.4709)தமிழ் வேதம்)
பொதுவாக ஒரு தேர்தலில் யாருக்குப் பெரும்பான்மை (மெஜாரிட்டி) பலம் இருக்கிறதோ அவர்தான் அரசு அமைப்பார். மைனாரிட்டி-- அதாவது சிறு பான்மைக் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் உட்காரும். ஒரு போரில் யாருக்கு அதிக படை பலம் இருக்கிறதோ அவர் வெல்லுவார்; குறைந்த படை பலம் உடைய தரப்பு தோற்கும்; இதை சதுரங்க (செஸ்) விளையாட்டில்கூடக் காணலாம்.
மஹா பாரதத்தில் பாண்டவர் படையில் ஏழு அக்ஷௌகினி சேனையும் துரியோதனாதியரிடம் பதினோரு அக்ஷௌகினி சேனையும் இருந்தது. அது மட்டுமல்ல துரோணர், பீஷமர், அஸ்வத்தாமன், கர்ணன் போன்ற பெரிய வீரர்களைக் கொண்டது துரியோதனன் படை. ஆயினும் மைனாரிட்டி படை பலம் உடைய பாண்டவர் படைதான் இறுதியில் வென்றது. அதாவது, பெ ரும்பான்மை, சிறுபான்மை என்பதே-- அறப் போராட்டத்தில் முக்கியமல்ல-- யார் யார் தர்மத்தின் தரப்பில் நிற்கிறார்களோ அவர்கள் வெல்வார்கள்.
ராமாயணத்திலும் இதே கதைதான்!
ராமன் தலைமையிலான குரங்குப் படை எழுபது வெள்ளம்! ஆனால் ராவணன் தலைமையில் இருந்த அரக்கர் சேனை ஆயிரம் வெள்ளம். இது பற்றிய சுவையான சம்பஷணை இதோராம பிரானுடைய படைகள், ஆழ்கடலின் மீது பாலம் கட்டி, அதன் மேல் நடந்து வந்து. இலங்கைக்குள் நுழைந்துவிட்டன. சுவேல மலையின் மீது நின்று ராவணன் படைகளை நோட்டம் விடுகிறான் ராமன்.
ராவணன் தனது கோபுர உச்சியில் நின்று ராமனின் வானர சேனையை கண்காணிக்கிறான். திடீரென்று சுரீவன் பறந்து வந்து ராவணனின் மணிமகுடத்தைப் பறித்து ராமன் காலில் சமர்ப்பிக்கிறான்.
அதற்குப்பின் ராவணன் அமைச்சரவையைக் கூட்டி விவாதிக்கிறான். அப்போது நடந்த உரையாடல்:
நிகும்பன் என்ற மந்திரி ராவணனிடம் சொல்கிறான்:-
எழுபது வெள்ளத்துற்ற குரக்கினமெயிலை முற்றும்
தழுவின என்று செய்யத் தக்கது சமைதி போலாம்
அழுவ நீர் வேலை அன்னது ஆயிர வெள்ளம் அன்றே
உழிஞையைத் துடைக்க நொச்சி உச்சியில் கொண்டது உன் ஊர்
--யுத்த காண்டம், அணிவகுப்புப் படலம், கம்ப ராமாயணம்
பொருள்
எழுபது வெள்ளம் என்ற கணக்கை உடைய குரங்குக் கூட்டம் இலங்கை நகர மதிலை முற்றும் வளைத்துக்கொண்டன என்று எண்ணி மனம் வருந்துகிறாய் போலும்; நம்முடைய படை ஆயிரம் வெள்ளமன்றோ! நம் பகைவர் சூடிய உழிஞையைப் போக்குவதற்கு உன் ஊர்ப்படை நொச்சியை உச்சியில் கொண்டுள்ளது என்று நிகும்பன் சொன்னான்.
தங்களிடம் வலிய ஆயுதங்கள் இருப்பதால் தேவர்களும் முற்காலத்தில் அஞ்சி ஓடினர் என்று நிகும்பன் கூறி முடித்த உடனே மாலியவான் என்பான் கூறுகிறான்:
புக்கெரி மடுத்து இவ் ஊரைப் பொடி செய்து போயினாற்குச்
சக்கரம் உண்டோ கையில் தசமுகன் தலைகள் ஆன
இக் கிரி பத்தின் மௌளி இன மணி இடந்து கொண்ட
சுக்கிரீவற்கும் உண்டோ சூலமும் வாளும்
யுத்த காண்டம், அணிவகுப்புப் படலம்
பொருள்
இந்த இலங்கை நகரத்துக்குள் புகுந்து தீயை ஊட்டி இதைச் சாம்பலாக்கிவிட்டுப்போன அனுமனுக்குக் கையில் சக்கரம் இருந்ததா? பத்து முகங்களைக் கொண்ட ராவணனின் தலைகள் ஆன பத்து மலையில் உள்ள மகுடத்தின் தொகுதியான மணியைப் பறித்துக் கொண்டுபோன சுக்கிரீவனுக்கு சூலம், வேல், வாள், ஆகியவை உண்டோ?
இதற்குப்பின் சீதையை விடுதலை செய்வதே சாலச் சிறந்தது என்று அவன் கூறியவுடன் ராவணன் சினந்து அவனை எள்ளி நகை ஆடுகிறான்.
இதிருந்து பெறப்படுவது யாது?
தர்ம- அதர்மப் போராட்டத்தில் எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல. சிறிய தொகை ஆனாலும் தர்மமே வெல்லும்.
மஹாபாரத காலத்திலும், ராமாயண காலத்திலும் தர்மத்தின் தரப்பில் இருந்த படைகள், கூட்டணி குறைவானதே.
இனி வரப்போகும் கல்கி அவதார காலத்திலும் அதர்மம் செய்வோர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். ஆனால் அறமே வெல்லும்; பாவம் தோற்கும்.
வெள்ளம் என்பது 1 எண்ணைத் தொடர்ந்து 16 பூஜ்யங்கள் உள்ள மிகப்பெரிய எண்.
அக்ஷௌணி என்பது ஒரு லட்சம் படை வீரர்களுக்கு மேலானது, 65000 குதிரைகள் சுமார் 2800 தேர்கள் 2800 யானைகள் கொண்ட ஒரு படை.
TAGS--அறம் வெல்லும், பாவம் தோற்கும், வெள்ளம், அக்ஷௌகிணி, பெரும்பான்மை, சிறுபான்மை
Why pavam?
Post a Comment