Followers

Tuesday, February 27, 2018

கருணை இல்ல கொலை வழக்கு....



மனிதனை சூத்திரன் என்று வகைப்படுத்தி தொட்டாலே தீட்டு என்று ஒதுக்கிய ஹெச் ராஜாக்கள் கருணை இல்லங்களுக்கு எதிராக அதிகம் பொங்குவதை பார்க்க முடிகிறது. உண்மையில் என்னதான் நடக்கிறது. சற்று இந்த பதிவை படியுங்கள்.

 #கருணைஇல்லகொலைவழக்கு படிங்க...நீங்களும் குழம்புவீர்கள்..
தலைய பிச்சுக்கலாம் போல இருக்கே... விளக்குங்கப்பா...

அய்யா நட்பு ராசாக்களா #மீடியாஓடியா?

கௌரவமாக சாவதற்கும் வழியில்லாமல் போய்விடுமோ?
 ஊடகங்களோடு விஷமிகளின் அறியாமை:

#புனிதவளனார்கருணையில்லம் (#StJoseph's Hospice)
நிறுவனம் ஏதோ தவறு செய்துவிட்டதாக தங்கள் #TRP மதிப்பை அதிகப் படுத்தும் நோக்கில் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள். சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சில விஷமிகள், ஏதோ புனித வளனார் கருணையில்லம் நிறுவனம் எலும்புகளை சேகரித்தும், உள் உறுப்புகளை அறுவடை செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவதாகவும் சமுகவலைதளங்களில் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். ஆகவே மக்களுக்கு தெளிவு படுத்த எனது சிறு முயற்சி.

#Vault 
எனும் ஆங்கிலச் சொல்லுக்கு, தமிழ்ப்பதம்: பெட்டகம் என்று கொள்ளலாம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை போன்ற நகரங்களில் கல்லறைத் தோட்டங்கள் நிறம்பி விட்டதால், C.S.I. பேராயர் தேவசகாயம் அவர்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் கல்லறைகளுக்கு இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருப்பதால், இறந்தைவர்களின் சடலங்களை எரிப்பதற்கும், பெட்டகத்தில் அடக்கம் செய்வதற்கும் பரிந்துறை செய்திருந்தார். இப் பெட்டகங்களில் அடக்கம் என்பது பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் உள்ள நிகழ்வு தான். இப்படிப் பட்ட 200 ஆண்டுகள் பழமையான பெட்டகம் ஒன்றை நான் திருச்சியிலுள்ள ஆலயத்தில் பார்த்திருக்கிறேன். இப்படிப் பட்ட பெட்டகம்-முறை அடக்கம் கேரளாவில் மிகவும் அதிகம். சில குடும்பங்கள் தாங்கள் இறந்த பின்னரும் குடும்பத்தாரோடு இருக்கவேண்டும் என்றெண்ணி குடும்பத்திற்கென்று ஒரு பெட்டகத்தை ஆலயத்திலுள்ள பகுதிகளில் கட்டி இருப்பார்கள். ஒராண்டிருக்கு முன்னர் நடிகை '#ப்ரியாங்காசோப்ரா' தனது பாட்டியை தங்கள் குடுப்பத்தின் பெட்டகத்தில் அடக்கம் செய்ய ஆர்தோடாக்ஸ் ஆலையம் மறுத்துவிட்டதென்று அங்காய்த்தது உங்கள் நினைவுக்கு வரலாம். ஆகவே பெட்டகம்-முறை அடக்கம் என்பது, இந்தியா உட்பட உலக்தின் அனைத்து நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது தான். The #Madras #Cemeteries Board (#MCB) Trust தங்கள் வசம் உள்ள கல்லறைத் தோட்டத்தில் பல அடுக்கு பெட்டகத்தை 2007ஆம் ஆண்டே அறிமுகம் செய்துள்ளது. 


புனித வளனார் கருணையில்லம் நிறுவனம் தங்களை எவ்வாறு அடையாளப் படுத்தி இருக்கிறார்கள்? சாகும் தருவாயில் கைவிடப் பட்டவர்களின் இல்லம் (#Home #for #Dying #Destitute) என்று தானே!

புனித வளனார் கருணையில்லம் நிறுவனம் எதையுமே மறைக்க வில்லையே! தங்கள் வெப்சைட்டில் ( http://www.stjosephshospices.com/web/index.php... ) எவ்வாறு பெட்டகத்தில் இறந்தவர்கள் அடக்கம் செய்யப் படுகிறார்கள் என்பதை படத்துடன் வெளியிடிருக்கிறார்களே! யூடுபில் YouTube கூட இது பற்றிய காணொலிகள் (videos) உண்டு:

https://youtu.be/zwhLvMgDxuI

https://youtu.be/9gGDqbRl5m0

அருள்தந்தை R V தாமஸ் 2011ம் ஆண்டு ஆரம்பித்த பாதுகாப்பகத்திற்கு என் வயோதிகர்கள் வருகிறார்கள்? குடும்பத்தாரால் கைவிடப்பட்டவர்கள், அமைதியான சாவுக்காக புனித வளனார் கருணையில்லம் நிறுவனத்தை நாடி வருகிறார்கள் (They come to this hospice to have a peaceful death).

இப்படி மதிப்போடு மக்கள் இறப்பதற்கு செயல் பட்டுவரும் இடத்தை (A place for death and human dignity) #ஊடகங்களும், விஷமிகளும் கொச்சை படுத்தி வருவதை நினைத்து மனம் வெகுவாக வேதனைப் படுகிறது.

50
ஆண்டுகளாய் கத்திக்குத்து பற்றிய செய்தியை வெளியிடும் பொழுது, "சதக் சதக் என்று கத்தியால் குத்தினான்" என்று கோரமாய் செய்தி வெளியிடும் ஊடகத்திடம் இதைத் தவிற்று வேறு எதை ஏதிர் பார்க்க முடியும்?


அடுக்குமாடி கல்லறைகள்.. ஒரு விளக்கம்..

செங்கல்பட்டு அருகே தனியார் கிருஸ்துவ அமைப்பு ஒன்று நடத்தும் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில், மரணமடைந்தவர்களின் விவகாரத்தில் சட்ட மீறுதல்கள் நடந்திருந்தால், சட்டபடியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.. ஆனால், இந்த விஷயத்த
ில், சுவரில் புதைத்துவிடுகிறார்கள் என சொல்வது, சரியான புரிதல் இல்லாமல் சொல்வதாகும்..

இதுவும் இறந்தவர்களை புதைக்கும் முறைதான்.. கிருஸ்துவ கல்லறை தோட்டங்களில் இடப்பற்றாக்குறையால், இப்படி புதைக்கும் முறை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கேரளா, சென்னையில் நடைமுறையில் உள்ளது..

இதற்கு வால்ட் முறை என்று பெயர். அதன்படி 30 அடி நீளம், 8 அடி அகலம், 10 அடிஉயரத்தில் சிமென்ட் அறை அமைக்கப்படுகிறது. இந்த அறை குறுக்குவாக்கில் 15பிரிவாக பிரிக்கப்படும்.

ஒவ்வொரு பிரிவும் மேலும், கீழுமாக 5 அடுக்குகளாக பிரிக்கப்படும். இப்படியாகமொத்தம் 75 வால்ட்டுகள் அதாவது கல்லறைகள் அமைக்கப்படும்.

ஒவ்வொரு வால்ட்டின் உட்புறமும் காற்றுப் புகாத அளவக்கு கதவுகளும்அமைக்கப்படும்.

இந்த வால்ட்டுகளுக்குப் பின்புறம் 8 அடி இடைவெளி விட்டு இதேபோன்றுஇனனொரு வால்ட் கல்லறை அமைக்கப்படும். இதிலும் 75 கல்லறைகள் இருக்கும்.இரண்டு வால்ட் கல்லறைகளுக்கும் இடையே முழுவதும் சிமென்ட்டால் ஆன கிணறுஅமைக்கப்படும்.
மொத்தம் 150 கல்லறைகளும் ஒரு கிணறும் சேர்ந்து பிளாக் எனப்படும்.

இந்த 150 கல்லறைகளில் ஒரு வால்ட்டுக்கு ஒரு உடல் என மொத்தம் 150 உடல்களைவைக்க முடியும். 2 ஆண்டுகள் கழித்து அந்த வால்ட் தேவைப்படுமானால் அதன்கதவுகள் திறக்கப்படும்.

2 ஆண்டுகள் ஆகியும், அழுகாமல் உள்ள உடலின் மீதப் பகுதிகள் அகற்றப்பட்டுஅருகே உள்ள கிணற்றில் விடப்படும். பின்னர் அந்த வால்ட் சுத்தம் செய்யப்பட்டுஅங்கு வேரு ஒரு உடலை வைக்கலாம்.


இணையத்திலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்டது..








1 comment:

Dr.Anburaj said...

மதம் மக்களை மடையனாக்குபது மனிதன் மதத்தை அழிக்க துவங்குவதும் இங்குதான்.

நிதிபதி சாக்ளா என்ற முஸ்லீம் அனைத்து மத பிணங்களையும் எரிக்கத்தான் செய்ய வேண்டும் என்ற தனிநபா் மசோதாவை கொண்டுவந்தாா்.அதை நிறைவேற்றியிருந்தால்

கோடிக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாழாகிக் கிடப்பதை தவிா்த்து இருக்க முடியும்.
செத்த மையத்தை எரித்தால் என்ன பாவம் வந்து விடும்?
எரித்தால் மையம் சாம்பலாகிவிடும். புதைத்தால் நாறி புழு அடைந்து வாட வதங்கி வாடி மண்ணில் மக்கி அழியும்.

இதில் அல்லாவின் விருப்பம் என்பது தேவையற்ற ஒன்று.

பிணங்களை எரிப்போம்.முட்டாள்தனங்களில் இருந்து விடுபடுவோம்