Followers

Thursday, February 15, 2018

தாயிஃப் நகரத்தில் ஒரு மரம் சாய்க்கப்படுகிறது!


தாயிஃப் நகரத்தில் ஒரு மரம் சாய்க்கப்படுகிறது!

நபிகள் இளைப்பாறிய மரம் என்று யாரோ கிளப்பி விட்ட கதையை நம்பி இங்கிருந்து ஹஜ்ஜூக்கு செல்லும் நம்மவர்கள் மரத்தை வணங்க ஆரம்பித்தனர். நாகூர் தர்ஹா ஏர்வாடி தர்ஹா என்று பல நூதன பழக்கங்களை புகுத்திய நம்மவர்கள் மக்கா சென்றும் அந்த பழக்கத்தை விடவில்லை.

சவுதி அரசு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது. ம்ஊஹூம்..... நம்மவர்கள் கேட்பதாய் இல்லை. பொறுமையிழந்த சவுதி அரசாங்கம் ஒரு புல்டோஷரைக் கொண்டு வந்து அந்த மரத்தையே அலக்காக தூக்கி விட்டனர். :-) இது தான் இஸ்லாம்.

இறைவனோ நபிகளோ காட்டித் தராத எந்த வணக்கமும் இஸ்லாமிய பார்வையில் வணக்கமாகாது.

(நபியே?!) நீர் கூறுவீராக: இறைவன் அவன் ஒருவனே. இறைவன் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

📘(அல்குர்ஆன் : 112:1-4)

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.

📘(அல்குர்ஆன் : 4:116)





No comments: