நாச்சியார் - திரைப்பட
விமர்சனம் (2)
முந்தய பதிவு சற்று
நீண்டு விட்டதால் அதன் தொடர்ச்சியாக மேலும் சில கருத்துகளை இங்கு பதிவிடுகிறேன். படத்தில்
இஸ்லாமிய திருமண முறைகளையும் பாலா பதிவிடுகிறார். படத்தின் நாயகி ஓடி ஆடி வேலை செய்து
களைத்து நிற்கும் போது....
'நீ சாப்பிட்டியா?'
என்று வீட்டுக்கார அம்மா கேட்க
'இல்லம்மா'
என்று கதாநாயகி சொல்ல
'முதலில் சாப்பிடு....
இப்படி இருந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்' என்று சகோதர வாஞ்சையோடு அவரை பந்தியில் உட்கார வைக்கிறார்.
அடுத்து கதாநாயகனின்
அம்மா 'டேய் பாய் வீட்டு பிரியாணி
நல்லா இருக்குண்டா... எனக்கு ஒரு பார்சல் கொண்டு வா' என்று அன்போடு கேட்க...
'சரிம்மா கொண்டு வருகிறேன்'
என்று கதாநாயகன் சொல்ல வேலை முடிந்து வீட்டுக்கு
போகும் போது ஒரு பார்சல் வாங்கிக் கொள்கிறார். ஆனால் வெளியில் நிற்கும் ஒருவரோ 'என்ன இது பார்சல்?' என்று கேட்க...
'அம்மாவுக்கு'
என்கிறார் பரிதாபமாக....
'நீ சாப்பிட்டல்ல...
பிறகு அம்மாவுக்கு வேற ஏண்டா எடுக்கிற?' என்று பார்சலை பிடுங்கிக் கொள்ள கதாநாயகன் கோபத்தோடு வெளியேறுகிறான். இதனை மேலிருந்து
பார்த்து விடுகிறார் வீட்டுக்கார அம்மா. அந்த இடத்துக்கு வந்து....
'என்ன பிரச்னை?'
என்று கேட்க...
'வேறொன்னுமில்லம்மா....
பையன் தன்னோட அம்மாவுக்காக பிரியாணி கேட்டான். ஆனால் அத இவரு பிடுங்கி கிட்டு திட்டி
அனுப்பிச்சுட்டாரு ' என்று சொல்ல
'அறிவு இருக்காடா உனக்கு....? காலையிலேருந்து ஓடி ஆடி எத்தனை வேலை பார்த்துருப்பான் தெரியுமா?
அவன் அம்மாவுக்காக பிரியாணி பார்சல் கொண்டு போனா
குறைஞ்சு போக மாட்டோம்.... போடா... போய் அவனை கூப்பிடு' என்று தாயுள்ளத்தோடு கேட்பதையும் பாலா பதிய மறக்கவில்லை....
இது பல இஸ்லாமிய திருமணங்களில்
நாம் சாதாரணமாக பார்க்கும் வழக்கம்தான். இஸ்லாமிய கிராமங்களில் நடக்கும் திருமணங்களில்
ஏழைகளை விரட்டுவதில்லை. கடைசி பந்தியாக அவர்களையும் உட்கார வைத்து சாப்பாடு கொடுத்து
அனுப்பும் பழக்கம் இன்றும் நடந்து வருகிறது.
முந்தய பதிவை பார்வையிட....
http://suvanappiriyan.blogspot.com/2018/02/blog-post_75.htmlமுந்தய பதிவை பார்வையிட....
1 comment:
இது பல இஸ்லாமிய திருமணங்களில் நாம் சாதாரணமாக பார்க்கும் வழக்கம்தான். இஸ்லாமிய கிராமங்களில் நடக்கும் திருமணங்களில் ஏழைகளை விரட்டுவதில்லை. கடைசி பந்தியாக அவர்களையும் உட்கார வைத்து சாப்பாடு கொடுத்து அனுப்பும் பழக்கம் இன்றும் நடந்து வருகிறது.
----------------------------------------------
எதை எடுத்துக் கொண்டாலும் மத உணா்வுடன் முஸ்லீம்களை உயாத்தி எழுதும் கொள்கை கொண்டவா் சுவனப்பிரியன்.
அன்னதானம் வழங்கவதில் இந்துக்கள் அளவிலும்தரத்திலும் மிக உயா்ந்து நிற்பவா்கள் இந்துக்கள்.
அன்பும் ஈகையும் ஒழுக்கமும் மனித நேயமும் இந்துக்களின் பிறவிகுணம்.இரத்தத்தில் ஊறியது.
Post a Comment