Followers

Tuesday, February 20, 2018

ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சி செய்ய முடியாதாம்!


ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சி செய்ய முடியாதாம்!

ஆதிச்ச நல்லூர் அகழ்வாராய்ச்சி இனி மேலும் தொடர முடியாது. இது மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவாக சொல்லப்பட்டுள்ளது.

அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய அரசு தயக்கம் காட்டுகிறது. மாநில அரசே அகழ்வாராய்ச்சி நடத்தி தமிழர்களின் தொன்மையான வரலாற்றை வெளி உலகுக்கு கொண்டு வரலாம்.
-மதுரை உயர்நீதி மன்ற கிளை  தீர்ப்பு.

தமிழர்களின் பண்டைய வரலாறு உலகுக்கு தெரிய வந்தால் அதன் மூலம் ஆரியர்கள் செய்த கொடுமைகள் எல்லாம் உலகுக்கு தெரிய ஆரம்பித்து விடும் என்று மத்திய அரசு பயப்படுகிறதோ? என்னதான் மூடி வைத்தாலும் உண்மை ஒருநாள் வெளி வந்தே தீரும்.

ஆதிச்சநல்லூர் என்பது ஆதி முதல்வனாகிய ஆதமின் நினைவாக அமைக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.. ஆத அச்ச நல்லூர் என்று இது முற்காலத்தில் அழைக்கப்பட்டிருக்கலாம். அச்சன் என்ற சொல் தந்தை என்ற பொருள் கொண்டது. கேரளத்தில் இன்றும் தந்தையை அச்சன் என்றே அழைக்கிறார்கள். எதையாவது கைதவறிப்போட்டுவிட்டால் அச்சச்சோ என அழைப்பது இன்றும்கூட நிகழ்கிறது. அச்சம் என்ற சொல்லின் வேரே இதுதான். தந்தையிடம் உருவாகும் உணர்வுக்கே பழந்தமிழர் அச்சம் என்ற சொல்லை அளித்தனர். ஆதம் நபியும் அவரது குடும்பத்தவரும் பேசிய மொழியும் தமிழ் மொழிதான் என்ற கருத்தும் உள்ளது. இலங்கையில் இன்றும் 'ஆதம் மலை' என்று இன்றும் அழைக்கின்றனர். இதிலெல்லாம் எந்த அளவு உண்மை இருக்கும் என்பது ஆய்வுகளில்தான் தெரிய வரும்.




No comments: