பத்மாவதியில் ராஜகுருவின்
தாய் நாட்டு துரோகம்!
நேற்று பத்மாவதி படம்
பார்த்தேன். அதில் வரும் ராஜகுரு பத்மாவதி மேல் மோகம் கொள்கிறான். ஆனால் அதனை பத்மாவதி
வெறுக்க மன்னர் ராஜ குருவை நாடு கடத்துகிறார். இந்த ராஜ குரு மன்னர் அலாவுதீன் கில்ஜியிடம்
மண்டியிட்டு தனது சொந்த நாட்டையே காட்டிக் கொடுக்கிறார். பத்மாவதி அழகை அலாவுதீனிடம்
கூறி படை எடுக்க தூண்டுகிறார். ராஜகுரு வின் ஜோதிடத்தை நம்பி அலாவுதீன் படை எடுக்கிறார்.
பிரதாப் சிங் போரில் இறந்து அலாவுதீன் மேவார் நோக்கி வருவதை அறிந்து பத்மாவதி பல பெண்களோடு
சேர்ந்து தீக்குளிப்பதாக கதை முடிகிறது.
இங்கு உயர் குலத்தவரான
ராஜகுருவின் பெண்ணாசை வெளிப்படுகிறது. அது கிடைக்காததால் தனது நாட்டையே காட்டிக் கொடுக்கவும்
தயங்கவில்லை. இந்த செய்திதான் சங்பரிவாரத்துக்கு தலைவலியாகப் போக போராட்டத்தை அறிவித்தனர்.
மேலும் அலாவுதீன்
கில்ஜியை இதில் கோமாளியாக காட்டியுள்ளார்கள். ஆனால் உண்மையில் சிறந்த நிர்வாகியாகவே
அறியப்படுகிறேன். அவர் பற்றிய உண்மையான வரலாற்றை தேடிக் கொண்டுள்ளேன். நண்பர்களிடம்
இருந்தால் லிங்க் தரவும்.
3 comments:
இத்திரைப்படம் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
- பாஹிம், இந்தோனேசியா
இத்திரைப்படம் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
- பாஹிம், இந்தோனேசியா
வரலாற்றில் துரோகங்களை தாராளமாக படிக்கலாம். முஹம்மது இறந்த பின் நடந்த பதிவி சண்டை அனைத்திலும் மனித துரோகங்களைக் காண முடியும். எப்படி அஹ்குலபித்கள் எப்படி படிப்படியாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதைக் காண முடியும்.பாவம் முஹம்மதுவின் மருமகன் . முஹம்மதுவின் அருமை மகள் பாத்திமா .அபுபக்கா் கலிபா ஆக பதவியேற்றதற்கு பாத்திமா ஒப்புதல் அளிக்கவில்லை.எனவே பாத்திமாவின் வீடு தீவைக்கப்பட்டது.கா்ப்பிணி பாத்திமா தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்டார். உபயம் இரண்டாம் கலிபா உமா்.
Post a Comment