Followers

Sunday, February 11, 2018

ஏழைகளுக்கு உணவு.....


ஏழைகளுக்கு உணவு......

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு இராஜகிரி கிளை

நாள்: 10:02:18

மதிய உணவு: நெய் சோறு,  ஆட்டுக்கறி குறுமா,  முட்டை

பயனாளிகள்: 300 பேர்கள்
...

மறுமையின் தீர்ப்பைப் பொய்யாக்குபவனை நீர் பார்த்தீரா? அவன் தான் அநாதைகளை விரட்டுபவன். ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டாதவன். (107:1-3)



4 comments:

Dr.Anburaj said...


மூன்று ஆண்டுகளில் மோடி ஆட்சியில் என்ன நன்மை நடந்து விட்டது என்று இன்று இப்படி வாய் கூசாமல் வஞ்சகம் பேசும் நபர்கள் கொஞ்சம் உங்கள் வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் விலைவாசியை எவ்வளவு இறங்கி உள்ளது என்று பாருங்கள்

அன்று காங்கிரஸ் ஆட்சியில் ஒருகிலோ து.பருப்பு 180
இன்று மோடி ஆட்சியில் 80 ரூபாய் ..

அன்று காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ உ.பருப்பு 140ரூபாய்
இன்று மோடி ஆட்சியில் 78 ரூபாய்

அன்று காங்கிரஸ் ஆட்சியில் ஒருகிலோ பாசி பருப்பு 144 ரூபாய்
இன்று மோடி ஆட்சியில் 84.ரூபாய்கள் .

கட்டுமான பொருட்களை பாருங்கள்: விலைவாசி குறைந்து தான் உள்ளது உதாரணத்திற்கு அன்று.காங்கிரஸ் ஆட்சியில் ஒரு கிலோ இரும்பு 67 ரூபாய்கள்
இன்று மோடி ஆட்சியில் 43 ரூபாய்கள்

இது மாதிரி ஜவுளி விலைவாசியை பாருங்கள்: அன்று காங்கிரஸ் ஆட்சியில் ஒரு மீட்டர் ஜீன்ஸ் துணி விலை 600 ரூபாய் இன்று மோடி ஆட்சியில் ஒரு மீட்டர் ஜீன்ஸ் துணியின் விலை 400 ரூபாய் தான்

நமது செல்போன் விலை அன்று காங்கிரஸ் ஆட்சியில் 3G Samsung Cell 15 ஆயிரம் ரூபாய்க்கு க்குமேல் விற்றது

இன்று பாஜக மோடி அவர்களின் ஆட்சியில் 4G Samsung Cell 8 ஆயிரம் ரூபாய்க்கு விலை குறைந்துவிட்டது.

அன்று காங்கிரஸ் ஆட்சியில் ஒரு ஜிபி டேட்டா ஒரு மாதத்திற்கு 360

இன்று பாஜக மோடி ஆட்சியில் 30 ஜிபி டேட்டா ஒரு மாதத்திற்கு 175 ரூபாய்

மன் மோகன் ஆட்சியில் நூறு நாள் வேலை.. 100ரூபாய்கள் மட்டுமே சம்பளம்..தான் அன்று எவ்வளவு விலைவாசியை பாருங்கள் இன்று மோடி ஆட்சியில் நூற்றிஐம்பது நாள் வேலை.. 200ரூபாய்கள் சம்பளம்.

அன்று காங்கிரஸ் ஆட்சியில் சாதாரண கொத்தனார் சம்பளம் 350 ரூபாய்கள் தான் இன்று மோடி ஆட்சியில் 700 ரூபாய்கள்

அரசு ஊழியர்களுக்கு 50% முதல் 100% சம்பளம் பே கமிஷன் உயர்த்தி உள்ளது. பணம் வரவு அதிகம் சம்பளம் உயர்வு அதிகரித்து பொருட்கள் விலைவாசியும் குறைந்து இருக்கும் பாஜக மோடியின் ஆட்சி பொற்கால ஆட்சிதானே…

வீடு இல்லாத ஏழைகள் அனைவருக்கும் 1 கோடிவீடு, கழிப்பறை வசதி இல்லாத அனைவருக்கும் 12 ஆயிரம் ரூபாய்க்கு கழிப்பறை கட்டாயம் கட்டி தரப்படுகிறது முத்ரா கடன் திட்டத்தில் நியாயமான தொழில் கடன் கொடுக்கப்படுகிறது.

தினம் ஒரு ரூபாய் வீதம் வருடத்திற்கு வெறும் 360 ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது.

மாதம் ஒரு ரூபாய் வீதம் வருடத்திற்கு வெறும் 12 ரூபாய்க்கு விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு உண்மையில் பயிர் விளைவித்து பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு உரிய பயிர் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது ( போலி விவசாயிகள் கடனுக்கு தள்ளுபடி இல்லை )

மத்தியரசு வேலைவாய்ப்பு உருவாக்க தொழில் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு அந்த அந்த நாட்டிற்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று உரிய சம்பளம், உயிர் பாதுகாப்பு, ஆயுள் காப்பீடு இழப்பு தொகை, விபத்து காப்பீடு இழப்பு தொகை, சம்பந்தமாக ஒவ்வொரு நாட்டிலும் ஒப்பந்தம் போட்டு நமது இந்தியர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

வெளிநாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்க பிரதமர் மோடி இதுவரை முயற்சி செய்து பல நபர்கள் மீட்டுள்ளார்.

அன்று தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி தமிழர்கள் படுகொலை நடத்தினார்கள் இன்று பாஜக ஆட்சியில் அந்த பயங்கர மீனவர்கள் படுகொலைகளை பிரதமர் மோடியால் தான் தடுக்கப்பட்டது.

இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்க்கை முன்னேற்றம் மேம்படுத்தும் நடவடிக்கையை பிரதமர் இலங்கையில் நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உணவு மருத்துவ வசதி இதையெல்லாம் உடனடியாக செய்தார். தமிழர்களுக்கு ஒரு லட்சம் குடியிருப்பு வீடுகளையும் இலவசமாக கட்டி தந்துள்ளார். பள்ளிக்கூடங்கள் கட்டி தந்துள்ளார் மருத்துவமனைகள் கட்டி தந்துள்ளார். மேலும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு கடுமையாக கட்டுபாடு உருவாக்கி தமிழர்களின் உயிருக்கும் தமிழர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு
உரிய உத்தரவாதம் உருவாக்கியவர் நமது பிரதமர் மோடி அவர்கள் தான்.

Dr.Anburaj said...

நான்கு பேர் கேட்க சிரிப்பது பெண்களுக்கு அழகல்ல!, இதற்காக பெண்களின் உரிமை பறிக்கப்படுவதாக எண்ணி பெண்ணியம் பேசுகிறார்கள். நமது கலாச்சாரத்தில் ஆண்களை விட பெண்கள் வணக்கத்திற்கு உரியவர்கள், இதற்காக எந்த பெண்ணியவாதியும் பெருமை கொள்வது இல்லை. ஆணும் பெண்ணும் சமம் என்பார்கள், அப்படியே 33% இட ஒதுக்கிடும் கேட்பார்கள். இந்த சமூகத்தில் உரிமைமைகளை மட்டுமே கேட்பவர்கள் பெருகி விட்டார்கள், ஒரு சார்பு எடை கல்லுடனேயே அலைகிறார்கள். எனவேதான் காங்கிரஸ் பெண் எம்.பி ரேணுகா சௌத்திரி நாடே கேட்க சிரித்த போதும் கேள்வி கேட்காமல், அதற்கு சாதூரியமாக பதிலளித்த பிரதமர் மோடியை விமர்சிக்கிறார்கள்.

நடந்தது என்ன? 1998 இல் அத்வானி பார்லின்ட்டில் முதன்முதலாக ஆதாரைப் போன்ற அடையாள அட்டை அத்தியாவசியம் மிகவும் அவசியம் என்று பேசியது தான் ஆதாருக்கு அடித்தளம் இட்டது.

பின்னர் அரசால் நியமிக்கப்பட்ட அத்வானி கமிட்டி அடையாள அட்டையை வலியுறுத்தி அறிக்கை கொடுத்ததுபின்னர் காங்கிரஸ் அதே திட்டத்தை பலவிதக் குறைபாடுகளுடன் , ஊழல் செய்யும் வாய்ப்புடன் கொண்டுவந்ததை பாஜக எதிர்த்தது.
இதைப் பற்றி மோடி பாரளுமன்றத்தில் பேசும் போது ரேணுகா சௌத்திரி வெறிச் சிரிப்புடன் மிகவும் சத்தமாக சிரித்து அநாகரிகமாக நடந்து கொண்டார். பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை கேற்றிடாத அதிக ஓசை இது . பிரதமரின் உரைக்கும் இடையூறு தரும் வகையிலும் இருந்தது.

இதனால் கோபம் கொண்ட அவைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு. 'என்ன ஆயிற்று? உங்களுக்கு எதுவும் பிரச்சனை எனில் மருத்துவரிடம் செல்லுங்கள்' எனக் கூறி அவரைக் கண்டித்தார். அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் எனவும் நாயுடு எச்சரித்தார்.

இதைக்கேட்ட பிரதமர், 'தலைவர் அவர்களே! ரேணுகாஜியை எதுவும் கூறாதீர்கள். ராமாயாணம் தொலைக்காட்சி தொடருக்குப் பின் இதுபோல் ஒரு சிரிப்பைக் கேட்க அனைவருக்கும் ஒரு பாக்கியம் கிடைத்துள்ளது’ எனத் தெரிவித்தார். இதை அடுத்து அவை முழுவதிலும் உள்ள உறுப்பினர்கள் வாய்விட்டு சிரித்து பிரதமரின் கருத்தை மிகவும் ரசித்தனர். நேரத்துக்கு ஏற்ற, காலத்துக்கு ஏற்ற ஒப்புமையும் கூட. எதிர்கட்சி உறுப்பினர்களும் ரேணுகா சவுத்திரி செய்தது தவறு என்று உணர்ந்ததால் வாயடைத்து அமைதி காத்தனர்.

இப்போது என்னை சூர்ப்பனகையுடன் ஒப்பிடுவதா. இது உரிமை மீறல், பாஜக பெண்களுக்கு எதிரானது என்று பெண்ணியம் பேசுகிறார்.

இந்த பெண்ணிய வாதிதான் 2 வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் தனது குடும்பத்தாருடன் நட்ச்சத்திர விடுதியில் தன்னுடைய பணிப் பெண்ணாக செயல்பட்ட 10 வயது சிறுமியை தனது பக்கத்திலேயே நிறுத்தி பார்க்க வைத்து கொண்டு மூக்கு பிடிக்க உண்டு களித்தார். இவரது மனிதாபிமானமற்ற செயலை சமூக ஊடகங்கள் அதிகம் பகிர்ந்து மூக்கருத்தது. எனவே இவர் ஒரு பெண்ணியவாதியே அல்ல.



முதலில் என்டிஆர் முதல்வராக இருந்தபோது அவருடன் ஒட்டி கொண்டு எம்பி பதவியை பெற்று சுகவாழ்வு வாழ்ந்தார். பின்னர் உபேந்திரா கட்சி தொடங்கியவுடன் அந்த கட்சிக்கு ஓட்டம் பிடித்தார். பின்னர் சந்திர பாபு நாயுடுவுடன் சில காலம். அதன் பின்னர் தனது பரம வைரியான காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம் எனவே இவர் ஒரு சித்தாந்த வாதியும் அல்ல.

1993ம் ஆண்டு அன்றைய பிரதமரின் வாகன அணிவகுப்புக்குள் தனது வாகனத்தை விட மறுத்த தலைமை காவலரை தாக்கியவர். இதற்காக இவர்மீது வழக்கும் பதியப்பட்டது. 2015ம் ஆண்டு சட்ட மன்றத்தில் போட்டியிட சீட்டு வாங்கித்தருவதாக கூறி 1.2 கோடியை ஒருவரிடம் லஞ்சமாக வாங்கி ஏமாற்றியதாக கூறி ஒரு வழக்கும் உள்ளது. மிகப்பெரிய ஹவால புரோக்கரான ஹாசன் அலிகானிடம் இருந்து 1.5 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை பரிசாக பெற்றதாக ஒரு புகாரும் உண்டு. எனவே இவர் ஒரு சிறந்த சமூகவாதியும் அல்ல.

எனவே பிரதமர் நரேந்திர மோடி ரேணுகா சௌத்திரியை, ராமாயணத்தின் முக்கிய கதாப்பாத்திரமான சூப்பனகையுடன் ஒப்பிட்டரோ, இல்லையோ அது அவர் அவர் யூகமே. அப்படியே ஒப்பிட்டிருந்தலும் அது குறித்து கோபப்பட வேண்டியது ரேணுகா சௌத்திரி அல்ல, சூப்பனகையே!!.

Dr.Anburaj said...


மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை 80 ஆயிரம் ரூபாயாக உயர்வு

ஆராய்ச்சி மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும்வகையிலும், உள்நாட்டில் அவர்களுடைய திறமையை பயன்படுத்தும் வகையிலும், பிஎம்ஆர்எப்., எனப்படும் பிரதமர் ஆராய்ச்சி பெலோஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை, 80 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது. இந்ததிட்டத்துக்காக, 1,650 கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை ஒதுக்கியுள்ளது

ஐஐடி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம், ஐஐஎஸ்இஆர்., எனப்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிமையம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப மையம், ஐ.ஐ.எஸ்.சி., எனப்படும் இந்திய அறிவியல் மையம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள், ஆராய்ச்சி படிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். வெளிநாடுகளில் அவர்களுக்கு அதிகளவு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இவ்வாறு நம் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு செல்வதால், அவர்களுடைய திறமையை பயன் படுத்திக் கொள்ள முடிவ தில்லை. மேலும், ஆராய்ச்சிகள் இங்கு நடைபெறுவதும் தடைபடுகிறது. இதைதடுக்கும் வகையில்,

'ஆராய்ச்சி மாணவர்களுக்கான, பிரதமர் ஆராய்ச்சி பெலோஷிப் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும்' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி, பட்ஜெட்டில் அறிவித்து இருந்தார்.

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில், சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, 1,650 கோடி ரூபாயை ஒதுக்க, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்ததிட்டத்தின்படி, ஆண்டுக்கு, 3,000 பேர் தேர்ந்தெடுக்கப் படுவர். ஐஐடி., உள்ளிட்ட உயர் கல்வி மைய மாணவர்கள் இதற்கு விண்ணப் பிக்கலாம். வரும், 2018 – 19 கல்வியாண்டு முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, முதல் இரண்டு ஆண்டுகளில், ஒவ்வொரு மாதத்துக்கும், 70 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மூன்றாம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும், 75 ஆயிரம்ரூபாய் வழங்கப்படும். நான்கு மற்றும் ஐந்தாம் ஆண்டில், ஒவ்வொரு மாதமும், 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இதைத்தவிர, வெளிநாடுகளில் நடக்கும் கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்பதற்காக, ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து, ஆராய்ச்சி நிதியாக, இரண்டுலட்சம் ரூபாய் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் ஆராய்ச்சி பெலோஷிப் திட்டத்தில் சேருவதற்கு, பி.டெக்., ஒருங்கிணைந்த, எம்.டெக்., அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில், எம்.எஸ்சி., படிப்பை முடித்தவர்கள் அல்லது இறுதியாண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில் நுட்ப மையம், ஐஐஎஸ்இஆர்., எனப்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிமையம், என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப மையம், ஐ.ஐ.எஸ்.சி., எனப்படும் இந்திய அறிவியல்மையம் போன்ற உயர்கல்வி நிறுவன மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சி.ஜி.பி.ஏ., எனப்படும் ஒட்டுமொத்த தர பள்ளி சராசரி, 8.5 சதவீதம் இருக்க வேண்டும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில், நம் நாட்டின் மிகச்சிறந்த திறமையை, நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒரு புறத்தில் நாட்டின் முன்னுரிமைகளுக்கு ஏற்ற ஆராய்ச்சிகள் நடக்கும். அதேநேரத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் தகுதியுடைய ஆசிரியர்களும் கிடைப்பர்.
-பிரகாஷ் ஜாவடேகர், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பா.ஜ.,





Dr.Anburaj said...

பிரதமர் நரேந்திரமோடி அளித்த வாக்குறுதியின்படி ஜம்முவில் ஐஐஎம் கல்வி நிறுவனம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் அமைதியை உறுதிப்படுத்தவும் மக்களின் மேம்பாட்டுக்கும் சிறப்புத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். அதன்படி பல்வேறு மேம்பாட்டுத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன் அடுத்தக் கட்டமாக ஜம்முவில் நாட்டின் உயர்க்கல்வி நிறுவனமான ஐஐஎம் கல்வி நிறுவனத்தை தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்அளித்தது.

நடப்பு கல்வி ஆண்டு முதலே (2016-17) ஜம்முவில் ஐஐஎம் கல்விநிறுவனம் செயல்பட தொடங்கும். அதற்காக ஜம்முவில் உள்ள அரசுபொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் ஐஐஎம் கல்வி நிறுவனம் தற்காலிகமாக செயல்படத் தொடங்கும். விரைவில் ஐஐஎம் நிறுவனத்துக்கு புதியவளாகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்முவில் தற்காலிகமாக செயல்படும் ஐஐஎம் கல்வி நிறுவனத்துக்கு ரூ.61.90 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த நிதி 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டுவரை 4 ஆண்டுகளுக்கு செலவிடப்படும். தற்போது முதலாண்டு முதுநிலையில் (பிஜிடிபி) 54 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். படிப்படியாக 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 120 ஆக உயர்த்தப்பட உள்ளது. காஷ்மீரில் நிரந்தர ஐஐஎம் வளாகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப் பட்டுள்ளன என்று அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.