Followers

Saturday, February 17, 2018

சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?


சூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா?


மாம் ஹி பார்த்த2 வ்யபாஶ்ரித்ய 
யேSபி ஸ்யு: பாயயோனய: 
ஸ்த்ரியோ வைஶ்ய: ததா2 ஶூத்ரஸ்-
தேSபி யாந்தி பராம் 3திம். 
பகவத் கீதை (9.32) 

மாதராக இருந்தாலும், வைசிய சூத்திரராக இருந்தாலும் கூட என் பாதம் பணிந்தால் முக்தி என்று பொருள் என்றால் வைசிய சூத்திரர் மற்றும் பெண்கள் கீழானவர் என்றுதானே பொருள் வருகிறது? அது என்ன இருந்தாலும் கூட என்று கேட்கத் தோன்றாதா என்ன? பிராமண க்ஷத்ரியர்களை, ஆண்களை ஏன் குறிப்பிடவில்லை, வைசிய சூத்திரர் மற்றும் பெண்களை குறிப்பாக சொல்ல என்ன தேவை என்று கேள்வி எழாதா? பாவிகள் என்று அவர்கள்தான் சொல்லப்படுகிறார்கள் என்று பொருள் கொள்ளலாம்.


(
பார்த்த2) பார்த்தா! (ஸ்த்ரிய:) பெண்களும் (வைஶ்யா:) வைசியர்களும் (ததா2) அவ்வாறே (ஶூத்3ரா:) சூத்திரர்களும் (பாயயோனய: யேSபி ஸ்யு:) பாவப்பிறவியினராக எவர்களுண்டோ (தேSபி) அவர்களும் கூட (மாம்) என்னை (வ்யபாஶ்ரித்ய) சரணடைந்து (பராம் 3திம்) உயர்ந்த நிலையை (யாந்தி ஹி) அடைகின்றனர் அன்றோ?

மாதராக இருந்தாலும், வைசிய சூத்திரராக இருந்தாலும் கூட என் பாதம் பணிந்தால் முக்தி என்று பொருள் என்றால் வைசிய சூத்திரர் மற்றும் பெண்கள் கீழானவர் என்றுதானே பொருள் வருகிறது? அது என்ன இருந்தாலும் கூட என்று கேட்கத் தோன்றாதா என்ன? பிராமண க்ஷத்ரியர்களை, ஆண்களை ஏன் குறிப்பிடவில்லை, வைசிய சூத்திரர் மற்றும் பெண்களை குறிப்பாக சொல்ல என்ன தேவை என்று கேள்வி எழாதா? பாவிகள் என்று அவர்கள்தான் சொல்லப்படுகிறார்கள் என்று பொருள் கொள்ளலாம்.

உலக மக்கள் அனைவரையும் படைத்த இறைவன் இவ்வாறு மனிதர்களை பிறப்பால் தாழ்த்தி சொல்ல முனைவானா? இந்த வசனங்களானது ஒரு குறிப்பிட்ட சாதியினரை மேன் மக்களாக நினைக்க வைக்க மனிதர்களால் உண்டாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. இதற்கு என்னதான் பல விளக்கங்களை கூற முற்பட்டாலும் படிக்கும் எவருமே மிக இலகுவாக புரிந்து கொள்ளும் வகையிலேயே இதன் கருத்து உள்ளது. இறைவனின் பெயரால் மனிதர்கள் இட்டுக் கட்டிய வார்த்தைகளே இவை என்பதை நாம் விளங்கலாம்.

ஜடாயு போன்றவர்கள் இந்த காலத்திலும் மனிதனை மனிதன் அடிமையாக்கும் வர்ணாசிரம கோட்பாட்டை தூக்கிப் பிடிப்பதை பார்த்தால் இன்னும் இருபது வருடத்தில் இந்தியா வில் பெரும் மத மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.

பிஎஸ், ஆர்வி போன்றவர்கள் இந்து மதத்தில் பெருக ஆரம்பித்தால் இந்து மதம் இன்னும் சில காலம் நிலைத்திருக்கும்.

ஜடாயு, க்ருஷ்ணகுமார் போன்றவர்கள் இந்து மதத்தில் பெருக ஆரம்பித்தால் அங்கு தான் இஸ்லாம் அசுர வேகத்தில் பெருக ஆரம்பிக்கும். என்னை பொருத்த வரையில் இஸ்லாமிய வளர்ச்சிக்கு இவர்களே உறு துணையாக இருக்கிறார்கள்.

வாழ்க ஜடாயு, க்ருஷ்ணகுமார் :-)

 பகவத் கீதையின் இந்த வசனம் சம்பந்தமாக இந்து மதத்தில் பற்றுள்ள  சகோதரர் பிஎஸ் எழுதிய பின்னூட்டத்தையும் அடுத்து பார்போம்



பாரதியார் //ஈனப்பறையர்களேயாயினும் அவர் எம்மிடம் வாழ்பவரன்றோ//

நம்மாழ்வார் // சண்டாள சண்டாளர்களேயாயினும்…”

தொண்டரிப்பொடியாழ்வார்// குடிமையில் கடமைப்பட்ட குக்கரில் பிறப்பரேயாயினும்,//

இவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். இவையெல்லாம் இவ்வரிகளில் சொல்லப்பட்டவர்கள் பிறப்பினிலேயே இழிசனர்கள் என்றே கொள்கிறது. புலையர் என்பது ஒரு இழிசனர்களில் ஓர் குலம். அதில் பிறந்தவரே நந்தனார். பின்னாள் வந்த வரிகள் நேரெதிராக இருக்கின்றன. ஆனால் அந்த நேரெதிர்மை, முன்னால் சொல்லப்பட்ட மக்களைப் பற்றிச் சொன்னதை அவர்கள் இழிபிறப்பை மாற்றவேயில்லை. பிறப்பை எவராலும் மாற்ற முடியாது. நாம் யாருக்குப் பிறந்தோமென்பதை மாற்ற முடியுமா? ஆனால் பிறப்பினால் வரும் தொல்லைகளைக் களையலாம். அதை எப்படி செய்வது என்பதைக்காட்டுவதே இவ்வரிகளின் நோக்கம்.

இப்பாடல்களில் பொருள் என் புரிதல்படி: சண்டாளர்கள் (கீழ்சாதியில் பிறந்த மக்களுக்கு சமஸ்கிருதம்) நம்மாழ்வார் பயனபடுத்துவது; பறையர்கள் (பாரதியார்); குக்கர்கள் (தொண்டரிப்பொடியாழ்வார்); புலையர்கள் இவர்களெல்லாரும் பிறப்பினால் இழிந்தோரே. அவ்விழித்தன்மையிருந்தாலும் அவர்கள் பக்தர்களாயின் அவர்கள் தம் இழித்தன்மையை இழக்க வாய்ப்புண்டு. எப்படி எனபதை சொல்லவே எழுதப்பட்டவை இவை.

இப்படிப்பட்ட சொல்லாடல்கள் ஏன் தேவையாயின? எழுதப்பட்ட காலத்தில் மேற்சாதியினருக்கு எடுத்த பாடங்களே இவை. நீங்கள் பிறப்பினால் உயர் ஜாதியினர். ஆனாலும் அப்பிற்ப்புயர்வு நாத்திகராயின் அல்லது ஒழுக்கங்கெட்டால் நீர்த்து விடும். அதே போல அவர்களை பிறப்பினால் கீழானவரே; ஆனால் அக்கீழ்மையை மாற்ற முடியும் எனவே என்றுமே அவர்களை இழிசனர்களாக நீங்கள் கொள்ள முடியாது. அவர்கள் பக்திமானகாக ஆயின் அவர்கள் உம்நிலையை அடைவர் என்ற கருத்தை உயர்ஜாதியினருக்கு ஊட்டவே இவைகள் எழுதப்பட்டன. மேலும், இழிசனர்கள் எனப்து சங்கப்பாடற்சொல். இழிசனர்கள் என்பவர் கீழ்பிற்ப்பாளர்கள். இப்பாடல்கள் எழுதப்பட்ட காலங்களில் கீழ்சாதி மக்களுக்கு எழுத்தறிவே கிடையாது. எனவே அவர்கள் இப்படிப்பட்ட பாடல்களைப்படிக்க முடியாது என்பது எழுதியவர்களுக்குத் தெரியும். உயர்ஜாதியினருக்காகவே இப்பாடம் எடுக்கப்பட்டது.

இன்று கேள்விக்குறிகளாகக் காரணம் அன்றைய இழிசனர்களும் அவர்களுக்குச் சாதகம் பேசும் சூத்திரர்களும் கல்வி அறிவு பெற்றதனால் வந்த வினைகளே. தலித்துக்கள் இடையே முற்றிலும் கல்வி அறிவு பெருகினால், அவர்கள் முன்னால் நம்மைப் பற்றி என்ன சொன்னார்கள் என ஆராய்வார்கள். எப்படி தடுக்க முடியும்?

That’ why I suggested that certain verses from the scriptures should be removed. For this suggestion, I was called names by Jatayu. This reformation should be undertaken immediately. Whatever justification you give – as this article attempts to do – won’t pass muster among dalits. Expunge is their only demand. Before they ask for it, remove. Remove means in future editions, such verses should not be there. After a century, people will forget these incendiary verses completely.





2 comments:

vara vijay said...

Kaafir mumin?

Dr.Anburaj said...

முற்றிலும் தவறான வறட்டு வாதம்.