Followers

Friday, February 23, 2018

கேரளா அட்டப்பாடியில் நடந்த கொடூர சம்பவம்


கேரளா அட்டப்பாடியில் நடந்த கொடூர சம்பவம்

கேரளா அட்டப்பாடியில் நடந்த கொடூர சம்பவம். ஆதிவாசியான இவர் மனநலம் பாதிக்கப்பட்டவரும் கூட. பசிக் கொடுமையால் திருடி விட்டதாக கூறி இவரை அடித்து செல்பியும் எடுத்துள்ளனர் இந்த காட்டுமிராண்டிகள். மனநலம் பாதிக்கப்பட்டவர் அடி தாங்காமல் இறந்து விட்டார். செல்பி எடுத்து ரசிப்பவன் பெயர் உபைது. இவனையும் இவனது நண்பர்களையும் தற்போது காவல்துறை சிறையில் அடைத்துள்ளது. எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும் சட்டத்தை கையிலெடுக்க எவருக்கும் உரிமையில்லை. பெயர் அரபியில் இருப்பதால் மட்டுமே ஒருவன் இஸ்லாமியனாகி விட முடியாது. வறியவருக்கு இரங்காதவனை இறைவன் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

இறைவன் மறுமை நாளில் சில மனிதர்களைப் பார்த்து "ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்க வில்லை'' என்பான். அதற்கு அவன், "என் இறைவா! நான் எப்படி உனக்கு உணவளிக்க முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!'' என்பான். அதற்கு அல்லாஹ், "இந்த என் அடியான் உன்னிடம் உணவை வேண்டினான்; ஆனால் நீ அவனுக்கு உணவளிக்கவில்லை என்பதை நீ அறியமாட்டாயா? அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அந்த இடத்தில் என்னைக் கண்டிருப்பாய்'' என்பான்.

"ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் வேண்டினேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் புகட்டவில்லை'' என்று இறைவன் கூறுவான். அதற்கு அவன், "என் இறைவனே! உனக்கு எப்படி நான் தண்ணீர் புகட்ட முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!'' என்பான். அதற்கு அல்லாஹ், "இந்த என் அடியான் உன்னிடம் தண்ணீர் கேட்டான். அவனுக்கு நீ தண்ணீர் புகட்டியிருந்தால் அந்த இடத்தில் என்னைக் கண்டிருப்பாய்'' என்று அல்லாஹ் பதிலளிப்பான். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4661

"ஆதமின் மகனே! நீ மற்றவர்களுக்காகச் செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 53524 comments:

Dr.Anburaj said...


இந்திய அரசு 20 ஆண்டுகளுக்கு முன்னா் வெளியிட்ட மனநலம் குறித்த ஆய்வறிக்கையில் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினா் சிறய அளவிலாவது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.One third of our adult populationsuffers from elicially undefinable psychosis.

- உண்மைதான்

Dr.Anburaj said...

நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்: வி.ஆர்.கிருஷ்ணய்யர்

“அவரது அரசியல் ஒரு புறம் இருக்கட்டும். ஒரு சுதந்திரமான தனி நபராக, அவர் பெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். தேசிய சிந்தனை மற்றும் உலகனத்தையும் அரவணைக்கும் அளவு நட்புணர்வு ஆகிய நேர்மறைப் பண்புகளின் உறைவிடமாக அவர் உள்ளார் என்று கருதுகிறேன்.

இந்தியாவில் அணுமின் சக்தியை நாம் பயன்படுத்தவே கூடாது என்பது எனது கருத்து. ‘வேண்டாம் அணு மின்சக்தி, என்றும் தேவை சோலார் மின்சக்தி’ என்பது எனது கொள்கை. சுனாமி, அணு உலைக் கசிவுகள் பூகம்பங்கள் ஆகிய அபாயங்களால் பாதிக்கப் பட்ட ஜப்பான் நாடு, தனது கடைசி அணு உலைத் திட்டத்தையும் இழுத்து மூடிவிட்டது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ‘சோலார் மின்சக்தி’ என்பதன் அடையாளமாகவே நரேந்திர மோடி இருக்கிறார். மோடியின் குஜராத் போல வேறு எந்த மாநிலமும் மிகப் பெரிய, பிரம்மாண்டமான அளவில் சோலார் மின்சக்தி உற்பத்தியை வளர்த்தெடுக்கவில்லை.

மகாத்மா காந்தி குடிப்பழக்கத்திற்கு எதிரானவர். இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் கூட. குடிப்பழக்கம் பல்வேறு தீமைகளின் உறைவிடமாக, இந்திய மக்களை நாசமாக்குகிறது. மதுவிலக்கை முழுமையாக வலியுறுத்தி, அதை நடைமுறையிலும் செயல்படுத்தும் ஒரே மாநிலம் நரேந்திர மோடியின் குஜராத்.

நான் அறியவந்தபடி, குஜராத்தில் பொதுவாழ்வில் ஊழல் என்பது முற்றிலுமாகக் களையப் பட்டு விட்டது. ஒரு தனிமனிதராக, நரேந்திர மோடி அவர்களது நேர்மை பெரும் போற்றுதலுக்குரியது. ஒட்டுமொத்தமாக, அவரது நிர்வாகத் திறன் தேசிய அளவில் ஆதரிக்கப் படவேண்டியது. அவர் சுயராஜ்ய கொள்கைகளை முழுமையாக நடைமுறைப் படுத்துவார். வறுமையை ஒழிப்பார். எனவே, இந்தியாவின் பிரதமாக ஆவதற்கான அபூர்வமான வாய்ப்பை அவர் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நான் ஒரு பூரண சமூகநலவாதி (சோஷலிஸ்ட்). மோடியும் ஒரு சமூகநலவாதி, மனித உரிமைகளின் பக்கம் நிற்பவர், இந்திய ஒற்றுமை மற்றும் காந்திய அடிப்படையிலான சமூக, பொருளாதார, அரசியல் நீதி நெறிகளைப் பேணுபவர் என்ற புரிதலுடன் அவருக்கு எனது ஆதரவைத் தெரிவிக்கிறேன்.”

இவ்வாறு 24 செப்டம்பர் 2013 அன்று வெளியிட்ட அறிக்கையில் திரு.நீதியரசா் வி.ஆர்.கிருஷ்ணய்யர் தெரிவித்துள்ளார்

Dr.Anburaj said...

HONEST MAN" on September 26, 2013 at 2:28 pm
———————————-யார் யார் மோடிக்கு வாகளிக்கவேண்டும்?————————–

1. ஊழல் ஒழியவேண்டும் என்ற நல்ல எண்ணம் உள்ள நல்லவர்கள் அனைவரும் (குஜராத்தை பார்த்து) மோடிக்கு ஒட்டு போட வேண்டும். அன்னா ஹசாரே போன்றவர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் (அவர்களுக்கு உண்மையிலேயே ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தால்)

2. அணு உலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் வேண்டாம் என்று நினைக்கிறவர்கள் மற்றும் போராடுகிறவர்கள் அனைவரும் (உதயகுமார் உட்பட)
(குஜராத்தின் சோலார் மின்சக்தியை பார்த்து) மோடிக்கு ஒட்டு போடவேண்டும்.

3. மதுவிலக்கு வேண்டும் என்று கருதுவோர் அனைவரும் (குஜராத்தை பார்த்து)
மோடிக்கு ஒட்டு போடவேண்டும்.

4. மின்சார பற்றாகுறையால் கஷ்டப்பட்டவர்கள் மற்றும் நொடிந்து போனவர்கள் அனைவரும் (குஜராத்தை பார்த்து) மோடிக்கு ஒட்டு போட வேண்டும்.

5. குஜராத் கலவரம் பற்றி கூறி “மோடிக்கு ஒட்டு போட வேண்டாம்” என்று உங்களை எவரேனும் தடுத்தால் நீங்கள் அவர்களுக்கு டெல்லி கலவரங்கள் பற்றி கூறுங்கள். ( 11.5.2005 அன்று பாராளுமன்ற உள்துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் கொடுத்த தகவலின்படி 2002 ல் நடந்த குஜராத் கலவரத்தில் 790 முஸ்லிம்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர். ஆனால் 1.11.1984 ல் டெல்லியில் நடந்த கலவரத்தில் 2733 பேர் (டெல்லியில் மட்டும் இந்த figure) கொல்லப்பட்டனர். மேலும் Blue operation ன் போது சுமார் 1000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.அதுமட்டுமல்ல 1969 செப்டெம்பரில் அகமதாபாத் நகரில் (இது குஜராத் மாநிலத்தில் உள்ளது) 25 இடங்களில் நடந்த வகுப்பு கலவரத்தில் 512 பேர் கொல்லப்பட்டனர். அப்போது காங்கிரஸ் அம்மாநிலத்தில் ஆண்டுகொண்டிருந்தது. இந்த கலவரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெக்மோகன் ரெட்டி தனது அறிக்கையில் “நடந்த வகுப்பு கலவரங்களில் பெரும்பாலான காங்கிரஸ்காரர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டனர்” என்று கூறியிருந்தார்.)

6. மோடி கட்சி ஒரு பிராமணர் கட்சி என்று கூறுவார்கள்.அவர்களுக்கு நீங்கள் பதிலடி கூறுங்கள். “மோடி, அத்வானி, கல்யாண் சிங், உமா பாரதி வசந்தரா ராஜே, கோபிநாத் முண்டே, சுசில் மோடி, MP முதல்வர் சௌகான், பொன் ராதாக்ருஷ்ணன், தமிழிசை, Chief Minister ராமன் சிங் இன்னும் பலர் எல்லாம் பிராமணர்களா? என்று கேளுங்கள். எல்லா கட்சியிலும் பிராமணர்கள் உள்ளது போல பிஜேபி யிலும் உள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள ராமகிருஷ்ணன்,சீதாராம் யச்சுரி, புத்தா தேப் பட்டாச்சார்யா,இன்னும் பலர் இவர்களெல்லாம் யாராம்? காங்கிரஸ் கட்சியிலும் பிரணாப் முகர்ஜி, டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித், மணி சங்கர் ஐயர், ஜெயந்தி நடராசன், ஜெயராம் ரமேஷ், சி.பி. ஜோஷி இன்னும் பலர் இவர்களெல்லாம் யாராம்? அவர்களின் yardstick ன் படி பார்த்தால் இந்த கட்சிகளும் பிராமணர் கட்சி தானே! (பிஜேபி யில் முஸ்லிம் சகோதர்கள், சீக்கிய சகோதர்கள், கிறிஸ்தவ சகோதரர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் எல்லாம் இருப்பது போல பிராமணர்களும் இருக்கின்றனர்)

7. RSS காந்தியை கொன்ற கட்சி என்றொரு குற்றசாட்டை வைப்பார்கள்.
அவர்களிடம் கூறுங்கள். “ஜஸ்டிஸ் கபூர் கமிசன்” தனது அறிக்கையில் காந்தி
கொலைக்கு RSS காரணமல்ல என்று கூறியுள்ளார். இந்த அறிக்கையை ஏற்று உச்சநீதி மன்றம் காந்தி கொலைக்கும் RSS க்கும் சம்பந்தமில்லை என்று தீர்ப்பு கூறி RSS மீது நேரு அரசால் 4.2.1948 அன்று விதிக்கப்பட்ட தடையை நீக்கியது. என்று கூறுங்கள்.

8. பிஜேபி ஒரு பிரிவினைவாதகட்சி. ஆனால் காங்கிரஸ் ஒரு மகத்தான மதசார்பற்றகட்சி என்று மனசாட்சி என்பதே சிறிதும் இல்லாமல் கூறுவார்கள். “தான் திருடி மாற்றவர்களை பார்த்து திருடி என்று கூறுமாம்” என்றொரு பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. அசல் வேசி ஒருத்தி ( a whore of first water ) ஒழுக்கமானவள் ஒருத்தியைப் பார்த்து “அடி போடி வேசி” என்றாளாம். அதற்கு அந்த ஒழுக்கமானவள் வேசிக்கு சரிக்கு சரியாக பதில் ஏதும் பேசாமல் போய்விட்டாளாம்! “அந்த” தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு தான் அது போன்ற வார்த்தைகள் சரமாரியாக வாயிலிருந்து வரும். நல்லவர்கள் வாயிலிருந்து சுட்டு போட்டாலும் வரவே வராது. அதுமட்டுமல்ல அந்த வார்த்தைகளை கேட்டாலே காது கொடுத்து கேட்காமல் ஓடி போய்விடுவார்கள். இதை நாம் போது இடங்களில் பலமுறை கண்கூடாக பார்த்து இருக்கிறோம். அது போல “Divide and rule ” என்ற பிரிட்டிஷ்காரன் கற்று கொடுத்த மோசமான கொள்கையின் அடிப்படையில் ஆண்டுவரும் காங்கிரஸ் கட்சி (வேசியை போல) பிஜேபியை பார்த்து “அது ஒரு divisive force ” என்று (ஒழுக்கமுள்ள பெண் மீது போடுவது போல) வீண் பழி போடுகிறது.
thanks : tamilhindu

Dr.Anburaj said...

1. அந்த பாம்பு கடித்தால் உடனே விஷமேறி மரணம் நிகழும்.. ஆனால் அதற்கு பெயர் “நல்ல பாம்பு”
2. வெறும் 27 தீவுகள்தான் இருக்கின்றன. ஆனால் அதற்கு பெயர் “லட்சத தீவுகள்”
3.கோவில் வாசலில் பிச்சை எடுத்து கொண்டிருப்பான் ஆனால் அவனுக்கு பெயர் “கோட்டீஸ்வரன்”
4. விமானம் மோதி விபத்து ஏற்பட்டால் அதை BLACK BOX பதிவு செய்யும். ஆனால் அதன் உண்மையான நிறம் orange .
5. ஹிந்து என்றால் திருடன் என்று நிதி ஒன்றே கதி என இருக்கும் 2 G புகழ் கருணாநிதியும் கூறுகிறார்.
6. இஸ்லாம் என்றால் “அமைதி” என்று கூறுகிறார்கள். வரிசை எண் 1 முதல் 4 வரை எப்படி பெயருக்கும் அதன் உண்மை தன்மைக்கும் தொடர்பு இல்லையோ அதே போல வரிசை என் 5 மற்றும் 6 ஆகியவற்றிலும் உள்ள பெயர்களுக்கும் அவற்றின் உண்மை தன்மைக்கும் சம்பந்தம் இல்லை. எப்படி என்று கேட்கிறீர்களா?

17 முறை படை எடுத்து வந்து குஜராத்திலுள்ள சோமநாதபுர கோவிலை கொள்ளை அடித்தது யார்? இதுபோல பல கோவில்களை கொள்ளை அடித்து தன நாட்டுக்கு கொண்டு சென்ற படைஎடுப்பாளர்கள் யார்? இப்படி அநியாயமாக கொள்ளை அடித்தவனை “திருடன்” என்று கூறாமல் அந்த கோவில் சொத்துக்களை இழந்த இந்துக்களை பார்த்து திருடன் என்று கூறுகிறார்கள். தினம் செய்திதாளை திருப்பினால் குண்டு வெடிப்பு செய்தி இல்லாமல் இருக்காது. (ஈராக்கில் தீவிரவாதிகள் தாக்குதலில் 14 பேர் மரணம் – இது 26.9.13 தேதிய செய்தி.——-பாக்தாத்தில் குண்டு வெடித்து 25 பேர் மரணம் – இது 27.9.13 தேதிய செய்தி) இப்படி உலகை ஒரு கொலைக்களமாக மாற்றுபவர்கள் யார்? அவர்களுக்கு அந்த மதம் அப்படித்தான் கற்று கொடுத்திருக்கிறது. ஆனால் அதை “அமைதி மதம்” என்கிறார்கள். இப்படி நல்லவனை கெட்டவன் என்பதும் கெட்டவனை நல்லவன் என்பதும் மதவாதியை மதச்சர்பின்மைவாதி என்பதும் மதசார்பின்மைவாதியை மதவாதி என்பதும் இந்த நாட்டில் நடக்கும் கொடுமை. இந்த கொடுமைக்கு ஒரு முடிவு கட்ட புறப்படுங்கள் சகோதரர்களே! நம்மை நிச்சயம் அந்த “கருமேக வண்ணன்” KANNAN காப்பாற்றுவான்.