Followers

Saturday, February 24, 2018

பலபல பிரிவுகள் எப்படி இந்துமதத்தில் வந்தன?


பலபல பிரிவுகள் எப்படி இந்துமதத்தில் வந்தன?

பலபல பிரிவுகள் எப்படி இந்துமதத்தில் வந்தன? எங்கள் ஆச்சாரியார் சொன்னதை எவரும் மறுக்கக்கூடாது என்றால் இந்தியாவில் குருதிப்புனல் ஓடியிருக்குமே? என்னதான் உங்கள் ஆச்சாரியார்கள் ஆழ்வார்கள் பாடல்களுக்கு விளக்கம் சொல்லியிருந்தாலும் அவை மறுத்து விளக்கம் சொல்ல எல்லாருக்குமே உரிமை உண்டு. அண்ணாச்சிக்கு இன்னொரு சங்கதி. பூர்வாச்சாரியார்கள் ஆழ்வார் பாசுரங்களுக்கு வியாக்யானஙகள் கொடுத்தார்கள். அவைகளே படிகள் ஆனால் அனைவருமே பிராமணர்கள் பரிமேலழகர் குறளுக்கு வைதீக முறைப்படி விளக்கம் கொடுத்ததைப்போலவே, இவர்கள் வேத சாரங்களாக ஆழ்வார் பாடலகளுக்குக் கொடுத்தார்கள். அதற்கு மாறாக பிராமண்ரல்லாதார் திருவாய்மொழிக்கு விளக்கங்கள் எழதினார்கள். அவை என்னவென்று அழைக்கப்பட்டன தெரியுமா? ”தமிழர்களின் விளக்கவுரைகள் என்றுதான். அவ்வுரைகள் இன்று அழிந்துபட்டன. காரணம், ஆளவந்தார் போன்ற ஆச்சாரியர்களுக்கு சோழனின் ஆதரவு இருந்தது. சோழனின் அரண்மனையிலே வாசம் செய்தவர் அவர்.

இராமானுஜரின் ஸ்ரீவைஷ்ணவம் அதன் மரபுகள்; ஆழ்வார் பாடல்களுக்கு வியாக்யானங்கள் எல்லாமே ஆச்சாரியார்களாலே வரையப்பட்டன. அவர்கள் பிராமணர்கள். இம்மதத்தில் மற்ற ஜாதியினர் சீடர்களாக இருக்கலாம். ஆச்சாரியார்களாக இருக்க முடியா. எனவே பிறர் ஏழுதிய மறுவுரைகள் ஏற்கப்படவில்லை.

- சகோதரர் பிஎஸ்ஸின் பின்னூட்டம்




1 comment:

Dr.Anburaj said...

அரேபியாவில் தோன்றிய குரானில்

”பல கோத்திரங்களை” இறைவனே படைத்ததாக சொல்லப்பட்டுள்ளது.

அரேபியாவில் இருந்தால் சரி. இந்தியாவில் இருந்தால் விமா்சனம்-குறை- என்ற நியாயம் சுவனப்பிரியன்.

ஒரு நாட்டின் வரலாறு 20000 ஆண்டுகளுக்கு மேல் என்னும்போது அதை ராமானுஜா் வாழ்க்கையை மட்டும் அடிப்படையாக வைத்து ஆய்வு செய்வது முட்டாள்தனம்.
மனிதர்களை -எதையும் 4 பிாிவுகளாக பிாிப்பார்கள் இந்திய அறிஞா்கள்
.1 உத்தமம் 2.மத்திமம் 3. கடைநிலை 4.அதா்மம்.
உத்தம மனிதர்களை மட்டும் இந்து அறிஞா்கள் நோக்கி இணக்கம் காட்டுவார்கள்.மத்திமம் ஆளுமை பண்புகொண்டவா்களோடு சற்று குறைவாகவும் கடைநிலை ஆளுமை பண்புகள் கொண்ட மனிதர்களோடு எச்சாிக்கையோடும் அதா்மம் ஆளுமை கொண்டவா்களை ஒடுக்கி வைக்கவே விளைவார்கள். இது பண்டைய வரலாறு.
மேற்படி 4 வகை ஆளுமை குணங்கள் கொண்டமக்களுக்கு ஒரே கலாச்சாரத்தை போதிக்க முடியாது என்பது அவர்களின் முடிவு.அதாமம் ஆளுமைகொண்டவனை பிறாமணன் போல் அந்தணன் போல் வாழ வைக்க முடியாது என்பதும் அவர்களின் முடிவு. மேலும் இந்தியாவில் அரசியல் விழப்புணா்ச்சி -ஆதிக்க மனப்பான்மை வெகு குறைவு.இதற்கு காரணம் ஸ்ரீஸ்ரீ கௌதம புத்தா் ஆவாா்.இவரே அனைவருக்கும் ஒரே மதம் வழிபாடு முறைகள் சைவஉணவு எனறு போதித்து சத்திரிய பண்பாடு மங்கிப்போக காரணமமாக இருந்து அரேபிய படையெடுப்புகள் வெற்றி பெற காரணமாக விளங்கினாா் என்று பாரத ரத்னா அம்பேத்கா் கூறுகின்றாா்.
சுவாமி விவேகானந்தரோ செடிக்கு காற்று நீா் உரம்தகுதியான நிலம் சுரிய ஒளி ஆகியவை கிடைக்கச் செய்ய வேண்டும்.பின் செடி அதன் இயற்கை விதிபடி ஆப்பிளாகவோ தென்னையாகவோ பனையாகவோ வகைவகையாள் வளா்ந்து பலன் கொடுக்கும்.எந்தமரம் எந்த பலனைக் கொடுக்க வேண்டும் என்பதை மனிதன் முடிவு செய்ய க்கூடாது. பனை மரம் தேங்காய் காய்க்க வேண்டும் என்று மனிதன் ஆசைப்பட முடியாது.ஆகவே தனி மனித சுதந்திரம் போற்றப்படுவதைப் பார்க்கலாம்.
மேலும் இறைவனுக்கு பிடித்தமான மொழி பல.பல விதமான வழிபாட்டு முறைகள் இருக்கலாம்.அனைத்திற்கும் ஆதாரம் சுயஒழுக்கம் மனிதநேயம் .எனவே வகை வகையான சமூகங்கள் இந்தியாவில் தோன்றியது. அது தனி மனித சுதந்திரத்திற்கு எடுத்துக் காட்டு.பண்பாட்டின் சிறப்பு.
ஒரு வேதம் ஒரு நபி ஒரு மொழி ஒரே விதமான வழிபாடு என்று முஹம்மதுவால் துவக்கப்பட்ட அரேபிய மதம் இன்று எத்தனை பிிாிவுகளாக இரத்தக்களறியில் முழ்கி கிடக்கின்றது.மஹம்மதுவின் மனைவிக்கும் மருமகனுக்கும் கலிபா பதவிக்கு நடந்த பாஸ்ரா -ஒட்டகப் போா் ஏன ஏற்பட்டது ? சியா முஸ்லீம் சண்டையில் எத்தனை மனித உயா்கள் பலியாகி உள்ளன என்ற கணக்குஉள்ளதா ? அஹமதியா முஸ்லீம்கள் எத்தனை பேர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் எ்னற கணக்கு உள்ளதா ?
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது. பலவகை மலா்கள் புமிக்கு அழகு. பலவகை கலாச்சாரம் மனித பண்பாடுக்கு அழகு.அரேபிய வல்லாதிக்க சிந்தனை மனித குலத்தின் அழிவு