விக்ரம் கோத்தாரி 800 கோடி பெற்று தலைமறைவு!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரு11,360 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு
வந்திருக்கும் நிலையில் ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் இந்திய பொதுத்துறை
வங்கிகளில் ரூ.800 கோடி ரூபாய்க்கும் மேல் கடன்பெற்றுவிட்டு அதைத்
திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளிவந்துள் ளது.
ரோட்டோமேக்
பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி ஐந்து பொதுத்துறை வங்கிகளிலிருந்து ரூ800 கோடிக்கும் மேல் கடன் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அலகாபாத்
வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட
வங்கிகள் இவருக்கு கடன் வழங்கி இருக்கின்றன. தங்களது விதிமுறைகளில் மாற்றங்களைக்
கொண்டுவந்து இவருக்கு கடன் வழங்கியதாகவும் தெரிகிறது.
அசல், வட்டி செலுத்தவில்லை
யூனியன் பேங்க்
ஆஃப் இந்தியாவிலிருந்து ரூ485 கோடியும், அலகாபாத் வங்கியிலிருந்து ரூ352 கோடியும்
விக்ரம் கோத்தாரி கடனாகப் பெற்றுள்ளார். ஒரு வருடத்துக்குப் பிறகும் கடன் மற்றும்
வட்டியைக்கூட கோத்தாரி கட்டவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கான்பூரிலுள்ள
விக்ரம் கோத்தாரியின் அலுவலகம் பூட்டிக் கிடக்கிறது.
கோத்தாரி எங்கே
இருக்கிறார் என்ற தகவலும் இதுவரை தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து
தெரிவித்த அலகாபாத் வங்கி மேலாளர் ராஜேஷ் குப்தா கோத்தாரியின் சொத்துக்களை
விற்பதன் மூலம் கடன் தொகையை ஈடு செய்யமுடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
45 ஆண்டுகளாக தொழிலில் இருந்து வரும் விக்ரம் கோத்தாரி தற்போது தலைமறைவாகி
இருப்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ
19-02-2018
மோடி ஆட்சியின் அவலங்கள் தொடர்கின்றன.
பண முதலைகள் மேலும் மேலும் மக்களின் வரிப் பணத்தை கபளீகரம் செய்கின்றனர். ஏழைகள் மேலும்
ஏழைகளாகிக் கொண்டுள்ளனர்.
வரி ஏய்ப்பு செய்து வங்கிகளில்
கொள்ளையடித்த அனைவரும் இந்துத்வாவோடு தொடர்புடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாரத் மாதா கீ ஜே! :-)
2 comments:
வரி ஏய்ப்பு செய்து வங்கிகளில் கொள்ளையடித்த அனைவரும் இந்துத்வாவோடு தொடர்புடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்துக்களை கருவருக்க வேண்டும் என்பது தங்களின் திட்டம்.எழுதுங்கள்.
தொழில் செய்து நட்டம் அடைந்திருக்கலாம்.விசாரணை வேண்டும்.
சொர்கத்துக்கு வழி
சொர்கத்துக்குப் போவோரின் நான்கு அடையாளங்கள் பூமியிலேயே
அவர்களின் செயல்பாட்டில் தெரிந்துவிடும் அவை யாவன:
அறப் பண்பு (தர்ம சிந்தனை), இனிய பேச்சு, கடவுள் வழிபாடு, பிராமணர்களுக்கு அன்னமிடுதல்
ஸ்வர்க ஸ்திதானாம் இஹ ஜீவலோகே
சத்காரி சின்னானி வசந்தி தேஹே
தானப்ரஸங்கோ மதுரா ச வாணீ
தேவார்ச்சனம் ப்ராஹ்மணதர்பணம் ச
சாணக்கிய நீதி 7-16
Post a Comment