மையம் / மய்யம் எது சரி?
மையம் / மய்யம் = இரண்டும் சரியான தமிழ்ச் சொற்களே!
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் (அய்)
ஐ என நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் – தொல்காப்பியம்
தற்காலத் தமிழிலும் ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் முறையே அய் எனவும்அவ் எனவும் எழுதப்படுவதைக் காணலாம்.
ஐயர் - அய்யர்
ஐயா - அய்யா
ஐயனார் - அய்யனார்
ஒளவையார் - அவ்வையார்
சௌக்கியம் - சவுக்கியம்
கமலஹாசனை ஒரு சிறந்த நடிகராக தெரியும். சிறந்த அரசியல்வாதியா என்பதை காலம்தான் முடிவு செய்யும். இந்துத்வாவாதிகளுக்கு எதிராக காய் நகர்த்தக் கூடியவராக அவரை பார்க்கிறேன்.
No comments:
Post a Comment