Followers

Monday, February 19, 2018

நாச்சியார் - திரைப்பட விமர்சனம்


நாச்சியார் - திரைப்பட விமர்சனம்

பொதுவாக திரைப்படங்கள் அதிகம் பார்பதில்லை. பாலசந்தர், பாலா, பாரதிராஜா, பாலு மகேந்திரா என்று குறிப்பிட்ட இயக்குனர்களின் படம் என்றால் கொஞ்சம் பொறுமையோடு பார்பேன். அந்த வகையில் நேற்று பாலாவின் 'நாச்சியார்' படம் பார்தேன். அது பற்றி சில கருத்துக்கள்.

படத்தின் கதாநாயகியும் கதாநாயகனும் கூலி வேலை செய்பவர்களாக காட்டப்படுகிறார்கள். ஒரு பணக்கார இஸ்லாமியர் வீட்டு திருமணத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் வேலை செய்ய வருகின்றனர். அங்கு இருவருக்கும் பழக்கம் ஏற்படுகிறது. அந்த திருமணத்தில் நாகூர் அனீஃபாவின்  பாடல்களை சிலர் பாடிக் கொண்டிருப்பதாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பாடல் 'அருள் மணக்குது: அறம் மணக்குது அரபு நாட்டிலே' என்ற ஹனீஃபாவின் பழைய பாடல் ஒலிபரப்பாகும். அப்போது 'அப்போ எல்லோரும் அரபு நாட்டுக்கே போய் விட வேண்டியதுதானே' என்று ஒரு குரல் ஒலிக்கும். நம் நாட்டு இந்துத்வாவாதிகள் அடிக்கடி 'பாகிஸ்தானுக்குப் போ... அரபு நாட்டுக்குப் போ' என்று சொல்கிறார்கள் அல்லவா? அதனையே பாலாவும் பிரதிபலிக்கிறார். இது பற்றி சற்று விரிவாகவே பார்போம்.....

1400 ஆண்டுகளுக்கு முன்னால் அரபு நாடுகளின் அன்றைய நிலையை எண்ணிப் பார்போம். பெண் குழந்தை பிறந்தாலே உயிரோடு புதைத்து விடுவர். பல வருடங்கள் சேமித்து வைத்த மதுவை பருகும் பழக்கம் கொண்டிருந்தனர். விபசாரம் தலை விரித்தாடியது. வட்டியில் அந்த சமூகம் மூழ்கியிருந்தது. மேல் சாதி கீழ் சாதி பாகுபாடு நிறைய பார்க்கப்பட்டது. சாதி சண்டைகள் பல வருடங்கள் வரை கூட நீளும். மனிதனை அடிமைகளாக விற்றுக் கொண்டிருந்தனர். சாதி மாறி திருமணம் முடித்தால் கொலை செய்யவும் தயங்காதவர்களாக அன்றைய அரபுகள் இருந்தனர். இவை அனைத்தும் வரலாறுகளில் தெளிவாக பதியப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில்தான் அந்த சமூகத்தில் பிறந்த நபிகள் நாயகத்தை இறை தூதராக இறைவன் அனுப்புகிறான். குர்ஆன் இறங்குகிறது. அந்த சட்டங்களை சிறிது சிறிதாக அந்த மக்களுக்கு நபிகள் நாயகம் அறிமுகப்படுத்துகிறார். பல இன்னல்களை சந்திக்கிறார். அவரை கொலை செய்யவும் ஒரு கூட்டம் வருகிறது. முடிவில் உண்மை வெல்கிறது. அந்த மக்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றனர்.

தற்போது ஒரு பெண் குழந்தை பிறந்தால் சந்தோஷத்தில் பார்ட்டி கொடுக்கும் பல அரபுகளை நான் பார்த்திருக்கிறேன். இஸ்லாமிய மார்க்கத்தை இந்த அரபுகள் ஏற்றவுடன்  மது ஒழிக்கப்பட்டது: வட்டி தடை செய்யப்பட்டது: விபசாரம் தடை செய்யப்பட்டது: சாதி விட்டு சாதி திருமண உறவும் தடையின்றி நடைபெற்றது. ஈரான், ஆப்ரிக்காவிலிருந்தெல்லாம் வந்த நபி தோழர்களுக்கு தங்கள் பெண்களை அந்த அரபுகள் மணமுடித்துக் கொடுத்தனர். பல இந்திய ஆண்களை அரபு பெண்கள் தற்போதும் மணமுடித்துள்ளதை பார்க்கிறேன். கவுரவ கொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் ஹனீ'ஃபாவின் அந்த பாடல் 'அருள் மணக்குது.... அறம் மணக்குது....' என்று வருகிறது. நமது நாட்டில் அருள் மணக்கவில்லையா? அறம் மணக்கவில்லையா? என்று பாலா கேட்கலாம்.

சாராயத்தை அரசாங்கமே நடத்தி மக்களுக்கு ஊற்றிக் கொடுக்கிறது: மொபைலில் அழைத்தால் வீடு தேடியே அரசாங்கம் சாராயத்தை சேர்ப்பிக்கும். பெண் குழந்தையை கள்ளிப் பால் கொடுத்து கொல்லும் வழக்கம் இன்றும் தமிழகத்தில் உள்ளது. சாதி விட்டு சாதி திருமணம் முடித்தால் பெற்றோர்களே 'கவுரவ கொலை' என்று பெயர் வைத்து கொல்லும் பழக்கம் இன்றும் உள்ளது. கந்து வட்டி தொழிலானது ஏழைகளை சகச்சி பிழிகிறது. நீரவ் மோடி, விக்ரம் கோத்தாரி, விஜய் மல்லையா, அம்பானி போன்றவர்களுக்கான நாடாக என்றோ மாறி விட்டது இந்தியா: தமிழகமும் இதற்கு விதி விலக்கல்ல.

இந்த நிலைகள் எல்லாம் மாறினால் 'அறம் மணக்குது: அருள் மணக்குது தமிழ நாட்டிலே' என்று பாலாவோடு சேர்ந்து நானும் பாடுகிறேன். 



5 comments:

Dr.Anburaj said...


மீண்டும் சொல்கின்றேன்.

ஆஸிஃபா கான் சாஹிபா (Ms. Asifa Khan) :-

முஸல்மாணிய மற்றும் ஹிந்து இளைஞர் சமுதாயம் மோதி அவர்களின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் தனியொரு கட்சியாக பாஜக அறுதிப்பெரும்பான்மை பெற்றது இந்த உத்சாஹமிகுந்த சமுதாயத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் தான். இப்போது அந்த நம்பிக்கையை அமல் செய்ய வேண்டும் என்ற படிக்கு மோதி சர்க்காருக்கு பொறுப்பு இரு மடங்கு ஆகிவிட்டது. இன்ஷா அல்லாஹ்!

நான் மோதி அவர்களுடன் பணி செய்கையில் மதத்தின் அடிப்படையில் எந்த வேறுபாட்டையும் சந்தித்ததில்லை. மோதி அவர்கள் அனைத்து ஹிந்துஸ்தானியரையும் அரவணைத்து தேசத்தை வளர்ச்சிப்பாதையில் முன்னெடுத்துச் செல்ல விழைகிறார் என்று உறுதியாகச் சொல்லுவேன்.

ஸ்ரீ ரஜத் ஷர்மா :-

நமது முஸல்மாணிய சஹோதரர்கள் அரசியல் என்று மட்டுமின்றி லையன்ஸ் க்ளப், ரோட்டரி க்ளப், மருத்துவ சேவை சார்ந்த சங்கங்கள் என சமூஹத்திற்குப் பங்களிக்கும் அனைத்து துறைகளிலும் பங்கேற்க விழைய வேண்டும். அப்படிப் பங்கேற்றாலே நாம் முழுமையான மற்றும் துரிதமான வளர்ச்சியை நோக்கிச் செல்ல முடியும்

4:56 AM Delete

Dr.Anburaj said...

நடைப் பயிற்சியே நல்ல மருந்து” – ஹிப்போக்ரேடஸ்!





1

ஓடலாமா?

குதித்துக் குதித்துப் போகலாமா?

தாவித் தாவிப் பார்க்கலாமா?

சைக்கிளை எடுத்து ஓட்டலாமா?

ஸ்கேடிங் செய்யலாமா?

ஆயிரம் யோசனைகள் -ஆரோக்கிய மேம்பாடு அடைய என்ன செய்யலாம் என்று.

இவை அனைத்தையும் விட எளிமையான வழி ஒன்று உண்டு.

அது தான் நடைப் பயிற்சி.

மேலே கூறிய எதுவும் தராத அருமையான பலன்களைத் தருவது

நடைப் பயிற்சியே!

அப்படி நடந்தால் – நடைப் பயிற்சியை மேற்கொண்டால் – நாம் அடையும் நன்மைகள் என்னென்ன?







2

‘ஜாக்கிங்’ (Jogging) செய்வதன் மூலம் எவ்வளவு கலோரிகளை உடலிலிருந்து செலவழிக்க – எரிக்க – முடிகிறதோ அவ்வளவு கலோரி எரிப்பை நடைப் பயிற்சியே தருகிறது.

முதுகு வலியைப் போக்குகிறது.

இடையளவைக் குறைக்கிறது. (பார்க்க அழகு தான்!)

இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது.

மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

உடல் வலுவையும், ஆற்றலையும் கூட்டுகிறது.

மன அழுத்தத்தையும் மன இறுக்கத்தையும் குறைக்கிறது.

சிந்தனை ஆற்றலைக் கூட்டுகிறது.

தசைகளை மேம்படுத்துகிறது.

மூட்டுகளை வலுவாக்குகிறது.

Dr.Anburaj said...

ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று அடிக்கடி ஏற்படும் உணர்வைக் கட்டுப்படுத்துகிறது.

ஏரோபிக் (Aerobic capacity) திறனை அதிகப்படுத்துகிறது.

சிறிது சிறிதான அளவில், அவ்வப்பொழுது நேரம் கொடுத்து நமது சௌகரியத்திற்கேற்ப செய்ய முடியக்கூடியது.

Osteoporosis bone loss – எலும்பு மெலிதலால் ஏற்படும் எலும்பு அடர்த்திக் குறைவைத் தவிர்க்கிறது.

அவ்வப்பொழுது பயணம் மேற்கொள்வோராலும் கூட, எங்கிருந்தாலும் சிறிது நேரத்தை ஒதுக்கிச் செய்ய முடிவது.

இவ்வளவு நன்மை போதுமா?

இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

இருக்கிறது இன்னும் பல நன்மைகள்.
3

பாதுகாப்பானது!

நடைப் பயிற்சியைப் போல பாதுகாப்பானது எதுவுமே இல்லை.

இதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை.

பயிற்சியாளரின் உதவியும் தேவையில்லை.

இப்படிப்பட்ட உடல் தகுதிகள் தேவை என்ற நிபந்தனைகள் எதுவும் இல்லை.

உடல் வலி மற்றும் இதர உபாதைகளோ அல்லது பக்க விளைவுகள் எதுவுமோ இல்லை.

எந்த சாதனத்தின் உதவியும் தேவை இல்லை.

செலவே இல்லை.

ஓடுவது, தாண்டுவது, குதிப்பது, புரள்வது போன்ற எந்த வித செய்கையையும் எடுத்துப் பார்த்தால் அதை விட மிக எளிதானது.

அதிர்ச்சி விளைவு எனப்படும் Shock Impact ஐ எடுத்துக் கொண்டு பார்த்தால் அது ஓடுகின்ற போது ஓடுபவரின் எடையை விட 3 அல்லது நான்கு மடங்கு கூட இருக்கிறது.

ஆனால் நடப்பவருக்கோ இந்த அதிர்ச்சி விளைவு ஒன்றரை மடங்கு மட்டுமே இருக்கிறது.

பேஸ்கட் பால் போன்ற இதர விளையாட்டுக்கள் உடல் எடையைப் போல ஏழு மடங்கு அதிகமாக இந்த ஷாக் இம்பேக்டைத் தருகிறது.

Dr.Anburaj said...

நடைப் பயிற்சி உங்கள் உடலுக்கு உகந்தது. எளிமையானது.

ஓடினால் ஏற்படக்கூடிய அதே எடைக் குறைவை இதுவும் நல்குகிறது!

ஒரு மணி நேரத்திற்கு ஐந்து மைல் என்ற வேகத்தில் நீங்கள் ஓடுவதாக வைத்துக் கொண்டால், 30 நிமிடங்களில் நீங்கள் 285 கலோரிகளை எரிக்க முடியும்.

ஒரு மணி நேரத்திற்கு நான்கு மைல் என்ற வேகத்தில் நீங்கள் நடப்பதாக வைத்துக் கொண்டால், அதே 30 நிமிடங்களில் நீங்கள் சமமான தரையில் (தளத்தில்) நடந்தால் 165 கலோரிகளை எரிக்க முடியும். சற்று சாய்வான தளத்தில் – அதாவது 5 % சாய்வில் – 225 கலோரிகளை எரிக்க முடியும்.

பத்து % சாய்வான தளத்தில் 360 கலோரிகளை எரிக்க முடியும்!

விலை உயர்ந்த வீடியோ சாதனங்களை வாங்க வேண்டாம்.

கம்ப்யூட்டர் புரோகிராம் எதுவும் தேவையில்லை.

தனி இடம் தேவை இல்லை.

ஆப்ஸ் எதுவும் தேவை இல்லை.

வழிகாட்டி – கையேடு – எதுவும் தேவையில்லை.

இயற்கையாக நடக்கலாம்.

சந்தோஷத்துடன் நடக்கலாம்.

உங்கள் விருப்பப்படி நடக்கலாம்.

உங்களுக்கு உகந்த நேரத்தில் நடக்கலாம்.

நடைப் பயிற்சியில் உங்களுக்கு உதவ, நன்மைகளை அதிகம் அடைய சில எளிய – அனுபவக் குறிப்புகள் உள்ளன.

அவை யாவை? இதோ பார்ப்போம்.

நடைப் பயிற்சியின் முழுப் பலனையும் அடைய Posture எனப்படும் தோற்ற அமைவு மிக முக்கியமானது.

தலையை நிமிர்த்தி வைத்துக் கொள்ளுங்கள்.

முதுகெலும்பை நேராக நிமிர்த்தி நடத்தல் வேண்டும்.

கைகளையும், தோளையும் சற்று தளர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

நேராகப் பார்வையைச் செலுத்துங்கள்.

அதற்காக எங்காவது குழியில் விழுந்து விடாதீர்கள். நமது சாலைகளைப் பற்றியும் பிளாட்பாரங்களில் ஆங்காங்கே இருக்கும் குழிகளையும் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

பள்ளங்களில் மாட்டிக் கொண்டு மருத்துவ மனைகளுக்குச் சென்று விடக் கூடாது.

ஆகவே அவ்வப்பொழுது சாலை அல்லது பிளாட்பாரத்தின் கோலத்தை அல்லது அலங்கோலத்தையும் மதிப்பீடு செய்யத் தவறாதீர்கள்.

இது தவிர ஆங்காங்கே இருக்கும் சாலைத் தடைகள் – Road Blocks – பற்றியும் கவனம் கொள்ளுங்கள்.

*

ஆழ்ந்த மூச்சை சீரான இடைவெளியில் விடுங்கள்.

நடவுங்கள், ஓடாதீர்கள். அதாவது சுறுசுறுப்பான காலடிகளை எடுத்து வைக்க வேண்டும், அவ்வளவு தான்! வேகமான அடிகளை அல்ல!!

நீங்கள் தினமும் நடக்க ஆரம்பித்தவுடன் உங்களுக்கே நீங்கள் எப்படி நடக்கலாம் என்பது தெரிய வரும்.

மூச்சு விட சற்று சிரமமாக இருந்தால் மெதுவாக நடக்க ஆரம்பியுங்கள்.

Dr.Anburaj said...

உங்கள் உடல் தரும் செய்தியைக் கேளுங்கள்.

அட, பிரமாதமாக இருக்கிறதே, நடைப் பயிற்சி முடிந்தவுடன் ஒரு புதிய தென்பு, உற்சாகம் வந்து விட்டதே என்று நீங்கள் நினைத்தால் அது தான் நல்ல நடை!

சற்று வலியோ அல்லது அசதியோ அல்லது வசதிக் குறைவோ, உற்சாகமின்மையோ தோன்றினால் உங்கள் நடைப் பயிற்சியைச் சற்று மாற்றி அமையுங்கள்.

நீங்களே உங்களுக்கு நீதிபதி. அவ்வளவு தான்!

எப்படிப்பட்ட அடிகளை எடுத்து வைக்க வேண்டும்? சீரான, நீளமான காலடிகளை எடுத்து வையுங்கள். உங்கள் நடை பிரயத்தனமின்றி இயல்பான ஒன்றாக இருக்க வேண்டும்.

பகீரதப் பிரயத்னம் என்பது நடைப் பயிற்சியில் இல்லவே இல்லை.

கைகளை ஆட்டினால் அது உங்கள் உடல் பாலன்ஸை அனுசரித்து இருக்க வேண்டும்.

எதையும் வலியச் செய்ய வேண்டாம்.

அட, எளிய நடைப் பயிற்சியில் இவ்வளவு இருக்கிறதா,