Followers

Tuesday, February 13, 2018

சீரழிந்து வரும் இன்றைய இளைஞர்கள்!


சீரழிந்து வரும் இன்றைய இளைஞர்கள்!

கைது செய்யப்பட்டவர் விருகம்பாக்கம் மீனாட்சியம்மன் நகரைச் சேர்ந்த ஹரீஷ் (19). மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை சிங்கப்பூரில் உள்ளார். கப்பலில் வேலை செய்கிறார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ஹரீஷ் மதுரவாயலில் சாலையோரம் நின்ற பைக் ஒன்றை திருடி உள்ளார். பின்னர் அங்கிருந்து தாம்பரம், மீனம்பாக்கம் வழியாக வரும் வழியில் சாலையோரம் செல்போனில் பேசிக் கொண்டு சென்றவர்களின் செல்போன்களை பறித்துள்ளார்.

இப்படி இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை 4 மணி நேரத்தில் 14 செல்போன்களை தொடர்ந்து பறித்துள்ளார்.

பின்னர், அனைத்து செல்போன்களையும் பாரிமுனையில் விற்றுள்ளார். ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன்களை ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்துள்ளார். அவரை பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் கைது செய்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆடம்பர வாழ்க்கை
கைது செய்யப்பட்டுள்ள ஹரீஷ் போலீஸாரிடம் கூறியதாவது:

திருடிய செல்போன்களை விற்பனை செய்த பணத்தில் நண்பர்களுடன் ஆடம்பரமாக செலவு செய்வேன். ஹோட்டலில் விதவிதமான உணவருந்துவோம். விலை உயர்ந்த ஆடைகளை வாங்குவோம். என்னுடைய செலவுக்கு தாய், தந்தை பணம் தருவதில்லை. எனவே செல்போன்களைத் திருடி அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டோம். கல்லூரிக்கு செல்லும்போது, செல்போன் பறிப்பது குறித்து நண்பர்களுடன் ஆலோசிப்போம். பின்னர், நண்பர் வீட்டுக்குச் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு செல்போன் பறிக்கச் சென்று விடுவோம். கிடைக்கும் பணத்தில் சொந்தமாக பைக் வாங்க திட்டமிட்டிருந்தேன். அந்த திட்டம் நிறைவேறாமல் போய்விட்டது” என்று கூறியுள்ளார்.

ஹரீஷின் தாயார், “மகன் தினமும் கல்லூரிக்குத்தான் செல்கிறான் என்று நம்பியிருந்தேன். அவன் படித்து பெரிய வேலையில் சேர்ந்து எங்களுக்கு கவுரவத்தை ஏற்படுத்தி கொடுப்பான் என நினைத்தேன். ஆனால், எங்கள் குடும்பத்தை தலைகுனிய வைத்து விட்டான்” என கண்ணீர் விட்டு கதறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் ஹரீஷின் கூட்டாளிகளான கோவூரைச் சேர்ந்த ஆகாஷ்(20) மற்றும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயதுள்ள கல்லூரி மாணவர் ஒருவர், சிறுவர் ஒருவர் என மொத்தம் 4 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்.






9 comments:

Dr.Anburaj said...

முறையான சமய கல்வி மற்றும் கலாச்சார பயிற்சி அளிக்காவிட்டால் இந்து சமூகம் இன்னும் கடுமையான சீரழிவை சந்திக்கும்.இந்து இளைஞா்கள் பண்பாடு அடைய விடக் கூடாது.இந்து சமூகம் அழிய வேண்டும் என்பவன்தான் மதசார்பற்ற தன்மை என்று பேசி சீரழிவை போற்றி வருகின்றான்.

தமி்ழ்நாடு கழகங்களின் ஆட்சியில் சீரழிந்துான் போயிருக்கின்றது என்பது இந்த கட்டுரை படி உண்மை.

Dr.Anburaj said...

அவ்வையாரும் சாணக்கியனும்- பாரதீய சிந்தனை ஒன்றே
(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்; கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

பெரியோர் சிந்தனை ஒன்றே (Great men think alike) என்று ஆங்கிலத்தில் சொல்லுவர். ஆனால் பாரத நாட்டில் இமயம் முதல் குமரி வரை , காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை, 3000 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே சிந்தனை இருப்பது உலகம் காணாத புதுமை. ‘தூது’ என்ற தலைப்பில் வள்ளுவன் செப்பியதும், ‘விருந்தோம்பல்’ என்று அவன் உரைத்ததும், காமத்துப் பாலில் அவன் பாடியதும், ‘கொல்லாமை’யை அவன் போற்றியதும் சம்ஸ்க்ருதச் செய்யுட்களில் அப்படியே உள்ளது. கௌடியர் எனப்படும் சாணக்கியன் எழுதிய அர்த்தசாஸ்திரப் பொருளாதாரக் கருத்துக்கள் வள்ளுவனின் பொருட்பாலில் உள. ஒருவரை ஒருவர் ‘காப்பி’ அடித்தாரோ என்று வியக்க வேண்டியதில்லை. பாரத நாட்டின் சிந்தனைப் போக்கு ஒன்றே .உலகத்துக்கெல்லாம் மூலாதாரமான கருத்துகள் அவை. கொடி ஆனாலும், கடவுளின் வாஹனம் ஆனாலும் புறநானூற்றில் உள்ள விஷயங்கள் சம்ஸ்க்ருத நூல்களிலும் காணக்கிடக்கின்றன.
அவ்வைப் பாட்டியை அறியாத தமிழன் இல்லை. ஆனால் இறைவனை நாடி அறம் பாடிய முதுமைப் பெண்கள் எல்லோரையும் அவ்வையார் என்று அழைத்ததால் தமிழில் ஆறு அவ்வையார்கள் இருந்ததாக ஒருவர் புத்தகம் எழுதியுள்ளார். ஆனால் எனது மொழியியல் ஆராய்ச்சியின் படி குறைந்தது மூன்று ஔவையார் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. இந்தக் கட்டுரையில் சொல்லப்படும் பாடல்கள் இடைக் கால அவ்வையாரின் பாடல்கள்தான்; சங்க கால அவ்வையார் அல்ல.

சாணக்கியன் பகர்வான்

காகம் கருடன் ஆகுமா?

குணருத்தமதாம் யாதி நோச்சைராஸன ஸம்ஸ்திதஹ

ப்ராஸாத ஸிசிகரஸ்தோபி காகஹ கிம் கருடாயதே

அத்யாயம் 16, ஸ்லோகம் 6

ஒருவன் குணத்தினால் உயர்கிறானே தவிர பதவியாலோ அந்தஸ்தினாலோ அல்ல;

அரண்மனையின் உச்சியில் உட்காருவதால், காகம் கருடன் ஆகி விடுமா?

அவ்வையார் மொழிவார்

கான மயிலும் வான் கோழியும் ஒன்றா?

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் — தானுந்தன்

பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கவி –

மூதுரைப் பாடல்/வாக்குண்டாம்


(மூதுரை என்பதும் வாக்குண்டாம் என்பதும் ஒரே நூல்தான்)


Dr.Anburaj said...

முறையாக யாப்பிலக்கணம் கற்காதவன், கற்றறிந்தோர் சபையில் கவி பாடுவதானது, காட்டில் உள்ள மயில் தன் அழகிய தோகையை விரித்தாடியதைக் கண்ட வான் கோழி, தன்னையும் அந்த மயில் என்று எண்ணிக் கொண்டு, அதுவும் தன் அழகில்லாத சிறகுகளை விரித்தாடியது போலாகும்.

கல்லாதவன்= வான் கோழி

கற்றவன்= கான மயில்



தவறான கவிதைகள் = வான் கோழிச் சிறகு

இலக்கணக் கவிதைகள்= மயில்தோகை



xxx

சாணக்கியன் புகல்வான்



த்யஜ துர்ஜன ஸம்ஸர்கம் பஜ சாது ஸமாகமம்

குரு புண்ய மஹோராத்ரம் ஸ்மர நித்யம் அநித்யதாம்

சாணக்கிய நீதி,அத்யாயம்14 ஸ்லோகம் 20



தீயவரைத் தீண்டாதே

நல்லவரை நாடித் தேடி ஓடு

நன்றே செய்க, இன்றே செய்க

நிலையாமையை எப்போதும் தப்பாமல் நினை.



துராசாரீ ச துர்த்ருஷ்ட்டி த்ராவாஸீ ச துர்ஜனஹ

யன் மைத்ரீ க்ரியதே பும்பிர்நரஹ சீக்ரம் விநஸ்யதி



சாணக்கிய நீதி, அத்யாயம் 2 ஸ்லோகம் 19



தீயவர்களுடன் சேர்ந்தாலோ

தீயதைக் கண்டாலோ

தீயோர் இடைடயே வசித்தாலும்

தீயவன் தீமையே அடைவான்; அழிவான்



அவ்வைப் பாட்டி சொல்லுவார்

அவ்வையாரோ இதற்கும் ஒரு படி மேலே போகிறார்; காந்திஜியின் குரங்கு பொம்மை இதிலிருந்து தோன்றியதே என்று முன்னரே ஒரு கட்டுரையில் சொன்னேன்:–



தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதேயாம் – தீயார்

குணங்களுரைப்பதுவும் தீதே யவரோ

டிணங்கி யிருப்பதுவுந் தீதே – வாக்குண்டாம், அவ்வையார்.

Dr.Anburaj said...

சாணக்கியன் புகல்வான்


சகடம் பஞ்ச ஹஸ்தேன தச ஹஸ்தேன வாஜினம்

ஹஸ்தினம் சத ஹஸ்தேன தேசத்யாகேன துர்ஜனம்

7-8

மாட்டுவண்டி வந்தால் ஐந்து முழம் தள்ளிப்போ

குதிரை வந்தால் 10 முழம் தள்ளிப்போ

யானை வந்தால் 100 முழம் தள்ளிப்போ

துஷ்டனைக் கண்டால் தூரப் போய்விடு (கண்காணாத வரை)



நீதி வெண்பா என்ற அருமையான நூலில் 100 பாடல்கள் உள்ளன. விவேக சிந்தாமணி என்ற நூலைப் போலவே இதை எழுதிய ஆசிரியர் பெயரும் கிடைக்கவில்லை. அதில் ஒரு அருமையான பாட்டு:-

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்கு ஆயிரம்தான் வேண்டுமே – வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. (பாடல் 20, நீதி வெண்பா)

கொம்பு இருக்கும் மாடு முதலிய மிருகங்களுக்கு அருகில் போகாதீர்கள். குறைந்தது ஐந்து முழமாவது தள்ளி நில்லுங்கள். குதிரைக்கு பத்து முழ தூரத்தில் நின்றால் பாதுகாப்பாக இருப்பீர்கள். யானைக்கு ஆயிரம் முழம் தள்ளி நில்லுங்கள். திடீரென்று மதம் பிடித்து ஓடிவந்தால் அதை உங்களால் முந்தமுடியாது. ஆகையால் 1000 முழமாவது தள்ளி இருங்கள். ஆனால் தீயோரைக் கண்டால் – துஷ்டர்களைக் கண்டாலோ, கண் காணாத தூரத்துக்கு ஓடிப் போய்விடுங்கள். அப்படிப்பட்ட ஆள் வருகிறான் என்றால் அந்தப் பக்கமே போகாதீர்கள். அவர்களை போலீசாரும், நீதித் துறையும் கவனித்துக்கொள்ளும். இது நல்லதொரு புத்திமதி.

சாணக்கியன் நுவல்வான்

சின்னோபி சந்தனதருர்ன ஜஹாதி கந்தம்

வ்ருத்தோபி வாரணபதிர்ன ஜஹாதி லீலாம்

யந்த்ரார்பிதோஒ மதுரதாம் ந ஜஹாதி சேக்ஷுஹு

க்ஷீர்ணோபி ந த்யஜதி சீலகுணான் குலீனஹ

சாணக்கிய நீதி,அத்யாயம்15 ஸ்லோகம் 18

அரைக்கும் சந்தனம் தன் மணம் குன்றா

யானை வயதானாலும் விளையாடுவதை விடுவதுண்டோ

யந்திரத்தில் நசுக்கினும் கரும்பு இனிக்குமன்றோ

வறுமையில் வீழ்ந்தாலும் உயர் குணதோன் தன் நற்குணங்களில் இருந்து நழுவுவதில்லை; வழுவுதல் இல்லை.

Dr.Anburaj said...

அடினும் ஆவின்பால் தன் சுவை குன்றாது

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை


அதிவீர ராம பாண்டியனுக்கு (வெற்றி வேற்கை)முன்னரே இதே கருத்தை அவ்வையாரும்

வாக்குண்டாம் என்னும் பாடலில் கூறுகிறார்:


அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவாய்

நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் நன்னுதால்

கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு

சுட்டாலும் வெண்மை தரும் – வாக்குண்டாம்

சான்றாண்மை என்னும் அதிகாரத்தின் கீழ் வள்ளுவர் முத்து முத்தாகக் கருத்துகளைத் தொகுத்து அளிக்கிறார்:

ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படுவார் – குறள் 989


உலகம் அழியும் காலத்தில் பெரும் சுனாமி தாக்குதலில் கடல் கரை கடந்து நாட்டிற்குள் புகுந்தாலும், மேன்மக்கள், பாதை மாற மாட்டார்கள்.

சாணக்கியன் நுவல்வான்

யுகாந்தே சலதே மேருஹு கல்பாந்தே சப்த ஸாகராஹா

சாதவஹ ப்ரதிபன்னார்த்தான் ந சலந்தி கதாசன

சாணக்கிய நீதி,அத்யாயம்13 ஸ்லோகம் 19

யுக உடிவில் மேரு பர்வதமும் நிலை குலையுன்

கல்ப முடிவிலேழு கடல்களும் சுனாமியால் பொங்கி எழும்

நல்லோரோ தன் பாதையில் இருந்து எப்போதும் தப்பார்

நன்றி Tamil and Vedas

Dr.Anburaj said...

பாக்கிஸ்தானுக்கு நெற்றியடி நமது பிரதமா் திரு.மோடிஜி அவர்களின் சாணக்கியம்.பலுசிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசிய மோடிக்கு ஆப்கான் அதிபர் ஹமீத்கர்சாய் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் அனைத்து அத்துமீறல்கள் பற்றி பேசுவதற்கு இந்தியாவுக்கு முழுஉரிமையுள்ளது எனவும் கூறியுள்ளார்.

முன்னதாக பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில், பலுசிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் பாகிஸ்தானின் மனித உரிமைமீறல் குறித்து கேள்வி எழுப்பினார். பலுசிஸ்தான் மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என கருத்துதெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கான் அதிபர் ஹமீத்கர்சாய் கூறியபோது, “பாகிஸ்தான் அதிகாரிகள் ஆப்கனை பற்றியும், இந்தியாவை பற்றியும் வெளிப்படையாக கருத்துதெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல் முறையாக இந்திய பிரதமர் மோடி பலுசிஸ்தான் பற்றி கருத்துதெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பலுசிஸ்தான் விவகாரம்குறித்து பேசியதால்தான் அந்தமக்கள் மீது பாகிஸ்தான் செலுத்தும் அடக்கு முறைகள் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அளிக்கும் ராணுவ உதவிபற்றி அமெரிக்கா ஆதரவு அளித்தால் அதை வரவேற்கிறோம். ஆதரவு அளிக்க வில்லை என்றால் யாருடைய அனுமதிக்காகவும் இந்தியா காத்திருக்க தேவையில்லை. இந்திய தனது பிராந்திய நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறது” என்றார். மேலும் கடந்தகாலங்களில் அமெரிக்க பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவைப் பற்றியும் குற்றச்சாட்டினார். முன்னதாக இந்தவாரம் இந்தியா வந்த வங்கதேச அமைச்சர் ஹசானுல் ஹயு இனுவும் பலுசிஸ்தான் குறித்த மோடியின் பேச்சுக்கு தனது ஆதரவை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dr.Anburaj said...

மோடி பலுசிஸ்தானைப்பற்றி பேசியதும்… காஷ்மீர் விடுதலைக்கு காவடிதூக்கும் உள்ளூர் துரோகிகளுக்கு பெரியபதட்டமே வந்துவிட்டது…

அதெப்படி மற்ற நாட்டின் விவகாரத்தில் தலையிடலாம் என அரவிந்த் கேஜ்ரிவால், திக்விஜய்சிங் போன்றோருக்கு தங்கள் வாக்குவங்கி விசுவாசத்தை பொங்க செய்தனர்… ஆனால் அதற்கு பின் பெரிய அரசியலே இருப்பது இந்து மண்டூக மடையன்களுக்கு தெரிய வாய்ப்பில்லை… அதை மோடி நன்றாகவே அறிந்துள்ளார்!
‪#‎இனி_கேம்_ஸ்டார்ட்‬ நேரம் பார்த்து காத்திருந்தார் மோடி…

அதை எதிர்பார்த்து காத்திருந்தது அமெரிக்கா… பலுசிஸ்தான் பிரச்சனை கிட்டதட்ட காஷ்மீர் பிரச்சனை மாதிரிதான். பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் நடுவில் உள்ளது .. எட்டும் தொலைவில் ஈரான் உள்ளது. அதனால் ஈரானில் மாதிரியே இங்கும் ஷியா முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர்

காஷ்மீர் மாதிரியே மன்னராட்சி நடந்து வந்த பலுசிஸ்தான் 1947 ல்ஆகஸ்டு மாதம் 11 ம் தேதி ஆங்கிலேய ரிடமிருந்துவிடுதலை பெற்றது. காஷ்மீர் மாதிரியே பலுசிஸ்தானும் இந்தியாவுடனே இணைய விரும்பியது.

பலுசிஸ்தானைஆண்டு வந்த அகமத்யா கான் என்கிற ராஜா நம்ம காஷ்மீர் ராஜா ஹரிசிங் மாதிரி இந்தியாவுடன் இணைய வே விரும்பினார். பாகிஸ்தான் காட்டு மிராண்டி களின் சங்காத்தமே எங்களுக்கு வேண்டாம், இந்தியாவில் இணைகிறோம் என்று நேருவுக்கு கடிதம் எழுதினார்

ஆனால் ஆனால் நமது (நேரு) மாமா மறுத்து விடடார். நீங்கள் பாகிஸ்தானுடன் இருப்பது தான் நல்லது என்று சொல்லி உலகில் தான் பெரிய சமாதான புறா என்று காட்டி கொண்டார்.

பலுசிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவு உள்ளது ஏன் தெரியுமா ? இதற்கு பின்னால்இருக்கும் அரசியல் மிக தெளிவானது… பலுசிஸ்தான் மாநிலத்தில் குவாடர் துறைமுகம் உள்ளது. இந்த குவாடர் துறைமுகம் தற்பொழுது சீனாவின் கஸ்டடியில் உள்ளது. இதற்கு பலுசி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒரு வேளை பலூசிஸ்தான் தனி நாடு கோரிக்கையை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டால் அதன் பாதிப்பு பாகிஸ்தானை விட சீனாவுக்கு தான் அதிகம்.

பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக்கினால் வளைகுடா நாடுகளிலிருந்து பலுசிஸ்தான் வழியாக சீனாவுக்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுவது சிக்கலாகி விடும். பலுசிஸ்தானை சுற்றி சீனா பின்னியுள்ள வர்த்தக ரீதியிலான திட்டங்கள் அம்போவாகி விடும். இதனால் சீனா தன் 30% பொருளாதாரத்தை இழந்து விடும் அபாயம் உள்ளது….

வல்லரசு போட்டியில் பாய்ந்து செல்லும் சீனாவை தட்டி விட அமெரிக்காவும் நேரம் பார்த்து கொண்டு இருந்தது. இந்நிலையில் மோடி ஆட்சிக்கு வந்தார். பாகிஸ்தானும், சீனாவும் மற்ற ஆட்சியாளர்கள் போல் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டு இருந்தது. நேரம் பார்த்து காத்திருந்தார் மோடி

இந்நிலையில் பலுசிஸ்தான் பிரச்சனையை உலக அரங்கில் கொண்டு போவதாக கூறினார். இதைத் தான் அமெரிக்கா எதிர்பார்த்தது. பாக்கிஸ்தான் அலறியது, அலருகிறது. ஏனென்றால் இந்த மாகாணத்தை வைத்து தான் சீனா பாகிஸ்தானுக்கு உதவி செய்கிறது. இது தனி நாடானால் சீன பொருளாதாரம் மிகவும் பின் தங்கி விடும். பாகிஸ்தானுக்கு கடுகளவும் உதவி கிடைக்காது …

இந்த ராஜ தந்திரத்தை மோடி வேகமாக முன்னெடுக்க ஆரம்பித்து விட்டார். அமெரிக்கா இதற்கு பின்பலமாக தீவிரமாக செயல் படுகிறது. நேரு தட்டிவிட்ட பலுசிஸ்தானை மோடி மட்டும் விரும்புகிறார் என்றால் அதற்குள் ஆயிரம் அரசியல் காரணங்கள் உள்ளது.

அன்று மட்டும் நேரு பலுசிஸ்தானை நம்முடன் இணைத்து இருந்தால் இன்று சீனா அடையும் 30% லாபம் இந்தியா அடைந்திருக்கும். இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து விரைவில் பலுசிஸ்தானை தனி நாடாக அங்கீகரிக்கும் என்பதில் ஐயம் இல்லை. அப்போது பலுசிஸ்தான் இந்தியாவின் நட்பு நாடாகி விடும். அது ஆசியாவில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்க வழி வகுக்கும். மோடி அவர்களை பிரதமராக அடைந்தமைக்கு இந்தியர் ஒவ்வொருவரும் பெருமை கொள்வோம்.

Dr.Anburaj said...

பாகிஸ்தான் இராணுவத்தளபதி சமீபத்தில் சொன்ன வார்த்தைகள் "பாகிஸ்தான் இஸ்லாமின் பெயரால் உருவானது ,பாகிஸ்தானில் இருந்து இஸ்லாமை வெளியேற்ற இயலாது
----------------------------------------

Dr.Anburaj said...

சமயத்துறையில் சாதி என்பது கிடையாது. சாதி என்பது ஒரு சமுக ஏற்பாடே ஆகும்.மிக உயர்ந்த சாதியைச் சேர்ந்தவனும் மிக தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவனும் இந்த நாட்டில் துறவி ஆகலாம்.அப்போது இரண்டு சாதியும் சமமாகின்றன.

சாதி முதலிய நமது சமூக ஏற்பாடுகள் சமயத் தொடர்புடையனவாக வெளிக்குத் தோன்றினாலும் உண்மையில் அவை அத்தகையனவல்ல. நம்மை ஒரு தனி சமூகமாக காப்பாற்றி வருவதற்கு அந்த ஏற்பாடுகள் அவசியமாக இருந்து வந்திருகின்றன.தற்காப்புக்கு அவசியம் இல்லை என்னும்போது அவை இயற்கை மரணமடைந்து மறையும்.

கௌதம புத்தர் முதல் ராம்மோகன் ராய் வரையிலும் ( சீர்திருத்த்காரர்) எல்லோரும் ஒரு தவறு செய்திருகிறார்கள். அவர்கள் சாதியை சமயப் பிரிவு என்று கொண்டு சாதி, சமயம் எல்லாவற்றையும் சேர்த்து அழித்திவிட முயன்றார்கள். எனவே அவர்கள் அடைந்தது தோல்வியே ஆகும். ப்ரோகிதர்கள் என்ன பிதற்றினாலும் சரியே, சாதி என்பது ஒரு சமூக ஏற்பாடே என்பதில் சந்தேகமில்லை. அந்தப் பிரிவு தன்னுடைய வேலையை செய்த பின்னர் இப்போது அழுகி நாற்றமெடுத்திருக்கிறது. இந்திய ஆகாய வெளியில் அந்த நாற்றம் நிறைந்துள்ளது.

சாதி ஏற்பாடு வேதாந்த மதத்துக்கு விரோதமானது. சாதி என்பது ஒரு வழக்கமேயல்லாது வேறில்லை.நமது பெரிய ஆசாரியர்கள் எல்லோரும் அதைத் தாக்க முயன்று இருக்கிறார்கள்.புத்தர் காலத்தில் இருந்து சாதிக்கு எதிராக அநேகர் பிரசாரம் செய்து வந்தார்கள். ஆனால் ஒவ்வொரு முறையுலும் அது வலிமை பெற்று வந்ததேயன்றி வேறு பயனில்லை. இந்தியாவின் அரசியல் அமைப்புகளிருந்து வளர்ச்சி பெற்றதே சாதி ஆகும். அதை பரம்பரையான தொழிற் சங்க முறை என்று சொல்லலாம். ஐரோப்பாவுடன் நேர்ந்த தொழிற் போட்டியானது எந்தப் போதனையும் விட சாதியை அதிகம் தகர்த்து இருக்கிறது..

–சுவாமி விவேகானந்தர்