ஜனாஸா நல்லடக்கம் - ரியாத் மண்டல சமுதாயப் பணி!
தஞ்சாவூர் மாவட்டம் திருநரையூர் (நாச்சியார் கோவில்) என்ற ஊரைச் சேர்ந்த சகோ: இஸ்மாத் பாட்சா அவர்கள் ரியாத் (ஸாத்) பகுதியில் பணிபுரிந்து வந்தார். திடீரென ''ஹார்ட் அட்டாக்' மூலமாக மரணத்தை தழுவினார். இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்.
அண்ணாரின் ஜனாஸா ரியாத்தில் நல்லடக்கம் செய்வது பற்றி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் மண்டல நிர்வாகத்தை, தாயகத்தில் உள்ள அன்னாரின் குடும்பத்தினர்கள் உதவி கோரினர்.
அதன் அடிப்படையில் அவருடைய ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு அனைத்துப் பணிகளும், இந்திய தூதரகத்தின் அனுமதி பெறுவதற்கு தேவையான ஆவணங்களும் ரியாத் மண்டல நிர்வாகம் சார்பாக ஆவணம் செய்து கொடுக்கப்பட்டது.
அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் நேற்று 02-07-2018 அன்று ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி அளித்தது.
அதன் அடிப்படையில் ஜனாஸாவைப் பெற்று ரியாத்தில் உள்ள ஒரு மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
---------------------------------------------------
ஒரு முறை எனது நண்பர் இறந்தவுடன் அவரை அடக்கம் செய்ய நஸீம் மையவாடிக்கு சென்றிருந்தேன். அடக்கம் செய்யும் நேரம் சில சவுதி நாட்டவர் வந்து 'உங்களுக்கு அதிகம் பழக்கமில்லை. நகர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் செய்கிறோம்' என்று சொல்லி உடலை வாங்கி குழிக்குள் வைப்பது பின்னர் மண் தள்ளுவதில் உதவி செய்வது என்று குடும்பத்தவர் போல் வேலை செய்தனர். சவுதிகளிடம் உள்ள சில நல்ல குணங்களில் இதுவும் ஒன்று. எந்த நாடு எந்த இனம் எந்த மொழி என்று பார்க்காமல் முஸ்லிம் என்ற ஒற்றை பார்வை பார்ப்பதால் நிகழும் அற்புதம் இது.
2 comments:
எந்த நாடு எந்த இனம் எந்த மொழி என்று பார்க்காமல் முஸ்லிம் என்ற ஒற்றை பார்வை பார்ப்பதால் நிகழும் அற்புதம் இது.
---------------------
பிறன மத மக்களை அழிக்க நினைப்பதும் இதனால்தானே.
முஸ்லீம்கள் மத்தியில் 73 க்கு மேற்பட்ட ஒன்றுக்கு ஒன்று அழிக்க துடிக்கும் பிரிவுகள் உள்ளது. இந்த உலகத்தில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கு அதுதான் அடிப்படை காரணம்ஆகும்.சிரயா வில் குரான் அமைதியை நிலை நாட்டவில்லை.ஆனால் மனிதாபிமான அடிப்படையில் கிறிஸ்தவ நாடுகள் சிரியாவில் இருந்து வெளியேறும் முஸ்லீம் அகதிகளை அன்புடன் ஆதரித்து பராமரிக்கின்றது.அங்கேயும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தயிருக்கின்றது அரேபிய மத காடையா்கள்.
Post a Comment