Followers

Wednesday, July 11, 2018

ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு பல கோடி நிதியுதவியால் சர்ச்சை

ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு பல கோடி நிதியுதவியால் சர்ச்சை
தொடங்கப்படாமல் ‘பேப்பர்’ அளவில் மட்டுமே உள்ள ஜியோ இன்ஸ்டி
டியூட்டுக்கு மத்திய அரசு தலைசிறந்த கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரம் வழங்கி, பல கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 3 நிறுவனங்கள் மத்திய அரசால் நடத்தப்படுபவை. எஞ்சிய 3 நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமானவை
இந்த நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளும், அடுத்த 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் நிதியுதவியும் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ இன்டிடியூட்டுக்கு தலைசிறந்த கல்வி நிறுவனம் என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பு வெளியான உடன், அந்த நிறுவனங்கள் குறித்த விவரங்களை இணையதளங்களில் பலர் தேடினர். அப்போது, ஜியோ இன்ஸ்டிடியூட் இன்னமும் தொடங்கப்படவில்லை என்ற விவரம் தெரிய வந்தது. வெறும் திட்ட அளவில்தான் இருப்பதாகவும் இணையதளங்களில் விவரங்கள் வெளியாகின.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
11-07-2018
மக்களின் வரிப் பணம் இந்த கையாலாக அரசால் எப்படி எல்லாம் வீணடிக்கப்படுகிறது?

1 comment:

Dr.Anburaj said...

சா்வதேச தரத்தில் மிக பிரமாண்டமாக அமைய விருக்கும் இந்த பல்கலைக்கழங்கங்களின் மொத்த முதலீடோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்திய அரசு அளிக்க முன்வந்திருக்கும் தொகை அல்பம்.மிக தரமான பட்டதாரிகளை உருவாக்கக் கூடிய இந்த கல்விநிறுவனங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் நியாயமானதே. தங்கள் கோணல் புத்தியை காட்டீவிட்டீரே.