Followers

Saturday, February 15, 2020

இஸ்லாமிய சமையல் -14

இஸ்லாமிய சமையல் -14
காவா பானம்
காவா பொடி:
தேவையான பொருட்கள்
சுக்கு- 200 கிராம்
ஏலக்காய்- 250 கிராம்
அதிமதுரம்- 10 கிராம்
மல்லி- 150 கிராம்
நன்னாரி வேர்- 25 கிராம்
மிளகு- 100 கிராம்
செய்முறை:
மேலே உள்ள பொருட்களை கடையில் கொடுத்து கொஞ்சம் கொரு கொருப்பாக அரைத்து வைக்கவும்.
அல்லது வீட்டிலே மிக்ஸூயில் தனி தனியாக அரைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.இந்த பொடியினை நீண்ட நாட்களுக்கு பயன் படுத்தலாம்
இதனை காவா பானம் செய்யும் பொழுது தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளவும்.
Ingredients
காய்ச்சிய பால் - 1 லிட்டர்
காவா பொடி - 3 -4 மே.கரண்டி
இஞ்சி - 100 கிராம்
சீனி - தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப்
Method
Step 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி காயவைக்கவும்.
Step 2
இஞ்சியினை உரலில் நன்றாக தட்டி வைக்கவும்.
Step 3
தண்ணீர் சூடு ஆன பின்பு தட்டிய இஞ்சி மற்றும் காவா பொடியினை சேர்த்து நன்றாக சாறு இறங்கும் வரை கொத்திக்க வைக்கவும்.
Step 4
நன்றாக கொதிக்கும் பொழுது காய்சிய பாலினை சேர்த்து நன்றாக கலந்துவிடவும். தேவைக்கு சீனி சேர்த்து 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.
Step 5
சுவையான காரமான ஆரோக்கியமான காவா பானம் ரெடி..

No comments: