மலேஷிய மாடல் அழகி "பிலெக்ஸியா ஈப்" இஸ்லாத்தை ஏற்றார்!
மலேசியாவின் 28 வயது மாடல் அழகி ஃபிலெக்ஸியா ஈப் (Felixia Yeap), வியாழனன்று (03-07-14) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
8,35,000 பேஸ்புக் 'பாலோயெர்'களுக்கும், தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட செய்தியை அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளார், அவர்.
கோலாலம்பூரில் உள்ள இஸ்மாயீல் பள்ளிவாசலில் வைத்து, வியாழனன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஃபிலெக்ஸியா ஈப், இஸ்லாத்தை ஏற்றதன் மூலம் தான் மறுவாழ்வு பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக, கிருத்துவ மதத்தை அறிந்துக் கொள்ளும் பொருட்டு, தொடர்ந்து 2 ஆண்டுகள் கத்தோலிக்க சர்ச்சுக்கு சென்று வந்தபோதும், மன அமைதியை பெறமுடியவில்லை.
அதைத்தொடர்ந்து பவுத்த மத ஆராய்ச்சியில் ஈடுபட்ட போதும், தன்னால் உண்மையான மாற்றத்தை காணமுடியவில்லை என்கிறார், "ஃபிலெக்ஸியா ஈப்"
இறுதியாக, கடந்த 7 மாதங்களாக இஸ்லாத்தை ஆய்வு செய்தபோது அற்புதமான பல விஷயங்களை தன்னால் கற்றுக்கொள்ள முடிந்ததாக கூறும் பிலெக்ஸியா, இடைப்பட்ட காலங்களிலேயே 'ஹிஜாப்' உடைகளை விரும்பி அணியத் தொடங்கிவிட்டார்.
என்றாலும், முறைப்படி தற்போது தான் 'கலிமா' சொல்லி இஸ்லாத்தை ஏற்பதாக அறிவித்துள்ளார்.
மலேசியாவின் 'ப்ளே பாய் பன்னி' உள்ளிட்ட பட்டங்களை பெற்று முன்னணி மாடல் அழகியாக திகழ்ந்த பிலெக்ஸியா, புகழின் உச்சத்திலிருந்த போதே, மாடல் தொழிலுக்கு முழுக்கு போட்டு விட்டு,
'கிண்டர் கார்டன்' பள்ளி ஒன்றில் 'ஆசிரியை' பணியில் சேர்ந்து எளிமையான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment