Followers

Saturday, February 08, 2020

தஞ்சை பெரியகோவிலில் தமிழில் குடமுழுக்கு

தஞ்சை பெரியகோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தும் விசயத்தில் மசூதியில் தமிழில் தொழுகை செய்வார்களா என விசமத்துடன் பிரிவினைவாதம் பேசிய வந்தேறி எச்சப்பயலே...தமிழர்தம் வரலாறு தெரியுமாடா உனக்கு..?
இராமலிங்க வள்ளலாரின் பாடல்களை 'திருஅருட்பா' என்று கூறுவது சமயக்குரவர்களை அவமதிப்பதாகும் என்று யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் கடுமையாக எதிர்த்து வந்தார். கடலூர் மஞ்சக் குப்பம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். தீர்ப்பு நாவலருக்கு எதிராக முடிந்தது. எனினும்'அருட்பா?மருட்பா?' விவாதம் தொடர்ந்தது.
இப்போராட்டம் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே ஆறுமுக நாவலரும் மறைந்தார்.எனினும் ஆறுமுக நாவலரின் மாணவர் கதிர்வேல் பிள்ளை தொடர்ந்து அருட்பாவை எதிர்த்து வந்தார். அவர் கூற்றில் நியாயம் இல்லை என்பதையறிந்த பாவலர், கதிர்வேலுக்கு எதிர்வேலாகக் களத்தில் குதித்தார். தம் வாதத் திறமையால் அருட்பா அணியை வெற்றிக்குக் கொண்டு வந்தார்.
ஓர் இஸ்லாமியப் புலவர் சைவ சமய வாதிகளுக்கிடையே நுழைந்து, அவர்களது குதர்க்க வாதங்களைத்தம் தருக்கவாதத் திறமையால் தகர்த்துத் தவிடு பொடியாக்கியதைப் பாராட்டி காஞ்சிபுரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அவரது இனிய சொற்பொழிவைப் பாராட்டி ' தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம் ' என்ற பட்டம் வழங்கப்பட்டது. பாவலரை யானை மேல் அமர்த்தி நகர்வலம் செய்வித்தனர். காஞ்சி ஆலயத்தார் ஓர் இஸ்லாமியப் புலவருக்கு பூரணகும்ப மரியாதை செய்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சிகளால் கவரப்பட்டு பாவலரையே குருவாக ஏற்றுக்கொண்டார் திரு.வி.க. பாவலர் என் குருத்தானத்தில் இருக்கிறார். இராமலிங்க சுவாமிகளின் பாடல்களை என் குரு கதிரைவேற்பிள்ளை 'மருட்பா' என்ற பொழுது, அவருக்கு எதிராகப் பாவலர் ' அவை அருட்பாதாம் ' என்று சொற்பொழிவாற்றினார்.
அவருடைய சொற்பெருக்கை நான் குறிப்பெழுதிக்கொண்டு போய் என் குருவிடம் காட்டுவேன் இப்பொழுதுஎன் குரு இறந்து விட்டதால் தமிழ் மரபுப்படி அவருடைய எதிரியாகிய பாவலர் தாம் என் குருவாகின்றார்.என்று தம் நாட்குறிப்பில் எழுதினார்.
பாவலர் அவதானக் கலையிலும் சிறந்து விளங்கினார். 1907 மார்ச் 10-சென்னை விக்டோ ரியா மண்டபத்தில் சதாவதானத்தை அரங்கேற்றினார். வித்துவான் கண்ணபிரான் முதலியார் தலைமைதாங்கினார். காஞ்சி மகாவித்துவான் இராமசாமி நாயுடு, தஞ்சாவூர் சதாவதானி சுப்பிரமணிய ஐயர், பச்சையப்பன்கல்லூரித் தமிழ்த் துறை தலைவர் திருவேங்கடசாமி நாயுடு, புலவர் கா.நமச்சி வாய முதலியார் திரு.வி.க. , டி.கே.சி., முதலிய தமிழறிஞர்களும், இந்து சுதேசமித்திரன் ஆசிரியரான ஜி.சுப்பிரமணியஐயரும்,திரளான மக்களும் பார்வையாளர்களாக இருந்தனர்.
இந்த அவதானம் வெற்றி முழக்கோடு முடிந்ததை முன்னிட்டு பாமாலைகளும், பூமாலைகளும்,பொன்னாடைகளும் சாற்றப்பட்டன. நிகழ்ச்சிக்குக் காரணமாக இருந்த இட்டாபார்த்தசாரதி தங்கத் தோடாக்கள் இட்டுப் பாராட்டினார். சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் ' மகாமதி ' பட்டம்வழங்கினார். தலைவர் ' சதாவதானி ' பட்டம் வழங்க, ' மகாமதி சதாவதானி ' செய்குதம்பிப் பாவலர்வாழ்க' என அரங்கமே மகிழ்ச்சி ஆராவாரம் செய்தது.
பாவலர் வெறும் வாய்ச்சொல் வீரர் அல்லர். அன்றைய, ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து சுதந்திரப் போராட்டத்திலும் கலந்துகொண்டார். 1920நாஞ்சில் நாட்டில் காங்கிரஸ் இயக்கம் தொடங்கியபோது அவர் கதருடைக்கு மாறினார். அந்நாளில் நடந்த பெரும்பாலான கூட்டங்கள் பாவலர் தலைமையிலேயேநடந்தன.
"1937ஆம் ஆண்டில் என நினைக்கிறேன் , பாவலர் நாகர்கோயில் நகராண்மைக் கழகத் திடலில், காங்கிரஸ் பிரச்சாரம் செய்தார். நல்ல தமிழில் விடுதலையின் மேன்மையைக் குறிப்பிட்டுக் காந்தியடிகளின் பெருமையை விளக்கினார். அவர் அன்று செய்த வீர முழக்கத்தால் எழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்"என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த டாக்டர்வி.ஐ.சுப்பிரமணியன் பாவலர்மலரில் எழுதியுள்ளார்.
பாவலர் தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் சிலர் வெறுப்பும் கொண்டனர்.நாகர்கோயில் பகுதியில் பேருந்து அதிபராக இருந்த ஒருவரின் பேருந்துகளில் பாவலர் எங்கும் எப்பொழுதும்இலவசமாக ஏறிச் செல்லும் உரிமைதந்து சிறப்பிக்கப்பட்டிருந்தார். அவரது விடுதலைப் போராட்டத்தின்காரணமாகத் தமது வண்டியில் போவதற்குத் தடை விதித்தார் அவர். இதைக் கேட்ட பாவலர் நகைத்தார். நாட்டுக்காக எதையும் தியாகம் செய்யத் துணிந்த இவருக்கு இது ஒரு பொருட்டோ ?
பாவலர் இறுதியாக உரையாற்றிய இடம் தஞ்சாவூர். அப்போது அங்கு சொன்னார்; தாம் தஞ்சாவூருக்கு வந்திருப்பது, தம் சாவூருக்கு வந்திருப்பதாக சிலேடையாகக் கூறினார். அதன் பிறகுஅவர் நீண்ட நாள் வாழவில்லை.
1950 பிப்ரவரி 13-ல் அவர் காலமானார். அறிஞர் பலரும் கலந்து கொண்ட அந்த இரங்கற் கூட்டத்துக்கு கவிமணி தலைமை
தாங்கினார்
"ஒருமவ தானம் ஒருநூறும் செய்திந்தப்
பாரில் புகழ்படைத்த பண்டிதனை-சீரிய
செந்தமிழ்ச் செல்வனைச் செய்குதம்பி
பாவலனை
எந்நாள் காண்போம் இனி"
என்று வருந்திப் பாடினார்.


2 comments:

Dr.Anburaj said...

எனக்கு இது தெரியும். செய்குதம்பி பாவலா் சாதித்தது உண்மை.அவருக்கு எனது பாராட்டுக்கள்.நன்றி. பாவலா் ஒரு அரேபிய அடிமையல்ல.இந்தியாவின் கலாச்சார ஆன்மீக தொன்மங்களை புரிந்து கொண்டவா். சிறப்புக்களை அறிந்தவா். அந்த வகையில் பல பதிவுகளைச் செய்யலாம். செய்யுங்களேன்.மற்றவர்கள் படித்துக் கொள்ளட்டும்.

இது நாள் வரை தாங்கள் பாவலா் குறித்து எந்த பதிவையும் செய்ததில்லையே.ஏன். முஸ்லீம் மேடை பேச்சாளா்கள் பாவலரை மேற்கோள் காட்டி பேசிய பேச்சை நான் இதுவரை கேட்டதில்லை. பாவலருக்கு ரசிகர்கள் -முஸ்லீம் ரசிகர்கள் யாரும் இல்லை.

முன்னாள் ஜனாதிபதி மாண்புமிகுஅப்துல் கலாம் போல் இசுலாமிய சமூகம் பாவலரை ஒதுக்கி வைத்துள்ளது என்பது உண்மை.மறுக்க இயலுமா ?

திருவருட்பா -மருட்பா சண்டை பண்டிதா்கள் சண்டை.வீண் வேலை.
பாமர மக்களை இது ஒரு போதும் பாதிக்காது.

சைவ சமயம் எ்னற நிறுவனப்படுத்தப்பட்டுள்ள மதமாக குறுகிய நோக்கில் செயல்படுபவர்கள் இது போன்ற தவறுகளைச் செய்துவந்தார்கள். மருட்பா வீர சைவம் வீர வைணவம் என்று எவன் கூவினாலும் நடுத்தர அடித்தட்டு மக்கள் இது குறித்து கடுகளவும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
வள்ளலாா் ஒரு அன்பின் ஜோதி . அவன் பிரகாசம் யாராலும் தடுக்க முடியாதது. மருட்பா வாதங்கள் முட்டாளதனமானவை. கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம்.தானாகவே இயற்கை மரணம் அடைந்திருக்கும். அருட்பெருஞ்சோதி அகவல் அற்புதமானது.அனைத்து இந்துக்களும் வழிபாட்டில் இடம் பெற வேண்டிய அருமையான பாடல். எனக்கும் 30 வரிகள் பாடத்தெரியும். பஜன வகுப்புகளில் பாடக் கற்றுக் கொடுத்து வருகின்றேன்.

Dr.Anburaj said...


பாவலா் சாதனைக்கும் தஞ்சை கோவில் குடமுழுக்குக்கும் என்ன சம்பந்தம் ?

பள்ளி வாசலில் தமிழ் வழிபாடு இல்லை என்பது உண்மை.இது பெர்து விசயம். . தமிழ் ஆர்வலா்கள் ஏன் அது குறித்து பேசுவதில்லை .பேச வேண்டும்.இந்தியா பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் உள்ள மதரசாக்களில் ஒரே பாடத்திட்டம்தான். இது ஆபத்தானது. கவனிக்கப்பட வேண்டிய விசயம். மதரசாக்களில் தமிழ் இல்லை.

இசுலாம் அரேபிய அடிமைகளை உருவாக்கும் இயக்கமாக செயல்பட எத்தனை காலம் தான் அனுமதிப்பது?

வள்ளலாரின் அருட்பெருஞ்சோதி அகவல் பள்ளிவாசலில் ஓதத்தக்கது.பொருத்தமானது.

கிறிஸ்தவரான திரு டேவிட்மணியரசன் ஏதோ இராஜராஜ சோழனின் அங்கிகரிக்கப்பட்ட ஏக வாரிசு தமிழ்தாயின் ஏக புதல்வன் போல் பேசி வருகின்றார்.

கிறிஸ்தவ சர்ச்களில் இஸ்ரவேல் நாட்டின் வரலாறு படிப்பது அடிமைத்தனம். இஸ்ரவேல் நாட்டின் வரலாறு சமய பாடமாகுமா ? தமிழ் நாட்டின் வரலாறு படிப்பார்களா ? இராஜராஜ சோழன் வரலாற்றை சர்ச்களில் படிக்க வைக்க இவரால் முடியுமா ?

சர்ச்களில் திருக்குறள் திருவாசகம் படிக்க ஆவன செய்யட்டும். இவரால் சாதித்த பிறகு பிற விசயங்கள் குறித்து பேசலாம். நெல்லையில் ஜெயராஜ் என்ற தமிழாசிரியா் ஆசிரியா் சர்ச்யில் சொற்பாழிவு செய்யும் போது சிலப்பதிகாரத்தில் இருந்து ஒரு பாடலை மேற்கோள் காட்டினாா். சபை தலைவா் திரு.தங்கையா என்பவா் எழும்பி உட்காரும் என்று உடகார வைத்து விட்டாா். வாத்தியாா் தண்ணியில்லாத நாகலாபுரம் என்ற ஊருக்கு மாற்றப்பட்டாா்.

பெண் மோசடி-விபசாரம் - பைதுல்மால் பண மோசடி என்ற பெரும் பாவத்தை செய்த தௌகீத் ஜமாத் முன்னாள் தலைவா் ஜெய்னுலாப்பதீன், அண்மை காலமாக தனது விஷ முகத்தை உயா்த்தி பொது அமைப்புகளில் பத்திரிகை தொலைக்காட்சி U tube தலை காட்டி வருகின்றாா். அவரும் தமிழில் குட முழுக்கு செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுகின்றாா். இந்த மலம் தின்ற நாய்க்கு என்ன தகுதி ?

அதன் காரணமாக பள்ளி வாசலில் தமிழ் இருக்கா! மதரசாக்களில் தமிழ் இருக்கா ! என்ற கேள்வி எழுவது நியாயமானதுதான்.
ஒரு பொண்பிள்ளை பொறுக்கி திருடன் பஞ்சாயத்து பண்ணும் நிலையில் தஞ்சை பெரிய கோவில் இல்லை.
சமஸ்கிருதம் மிக அழகிய ஓசை மிகுந்த மொழி.சிறந்த மொழி .இந்தியாவின் தொன்மையான மொழி. அது அழியாமல் காக்க வேண்டியதுநமது கடமை என்று கருதும் இந்துக்கள் இருக்கும் வரை சமஸ்கிருதம் ஆலயததில் தொடரும்.
வீடு தோறும் வீதி தோறும் ஆலயம் தோறும் திருவாசகம் முற்றோதுதல் நடத்தி தமிழ இந்துக்களுக்கு தமிழில வழிபாடு செய்ய கற்றுக் கொடுங்கள்.தமிழ் வாழும்.
இருட்டை பழிப்வன் திருடன். பொய்யன்.ஏமாற்றுக்காரன். ஆதிக்கம் செய்ய வாய்ப்பாக தமிழ பற்று என்று பேசுபவன் நிறைய பேர்கள் உள்ளாா்கள்.

விளக்கேற்றுபவன் அறிவாளி.மனித நேயம் மிக்கவன்.உண்மையான தொண்டன்.
உண்மை பக்திமான் மொழி சண்டை போட மாட்டான். திருநாவுக்கரசா் மாணிக்கவாசகா் தாயுமானவா் ........போன்ற நிறைஞானிகள் அனைவரும் சமஸ்கிருதம் கற்றவர்கள். தமிழ வளா்த்த சான்றோர்கள்.