Followers

Sunday, February 09, 2020

கேரள மக்கள் எதிலும் புதுமையை செயல்படுத்துகிறார்கள்...

கேரள மக்கள் எதிலும் புதுமையை செயல்படுத்துகிறார்கள்...

இன்றைய மத்திய அரசின் அலங்கோலத்தை மிக அழகாக காண்பித்துள்ளனர்.


2 comments:

Dr.Anburaj said...

புதுமைப் புலவா் செய்துதம்பி பாவலா்
சதாவதானக் கலையில் வல்லவராக இருப்பது மிக அபூர்வம். செய்கு தம்பி பாவலரின் சதாவதானம் அறிஞர் பெருமக்களால் போற்றப்பட்டது.

முதுகில் விழுந்து கொண்டிருக்கும் மல்லிகைப்பூ, தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கும் மணிநாதம் போன்றவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் உள் மனத்தில் எண்ணிக் கொண்டே வருவார் பாவலர். எப்போது நிறுத்தி எண்ணிக்கை குறித்துக் கேட்டாலும் பதில் சொல்வார்.

தவிர கூட்டத்தில் யாராவது வெண்பாவிற்கு ஈற்றடி கொடுப்பார்கள். தளை தட்டாமல் கொடுக்கப்பட்ட ஈற்றடியில் வெண்பா யாத்துச் சொல்வதும் மூன்று அவதாரத்தில் ஒன்று.

ஒருமுறை சதாவதானம் நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஓர் அன்பர் பாவலரை சிக்க வைக்கும் எண்ணத்துடன் ஒரு விந்தையான வெண்பா ஈற்றடியைக் கொடுத்தார்.

துருக்கனுக்கு ராமன் துணை என்பதுதான் ஈற்றடி. செய்கு தம்பிப் பாவலர் பிறப்பால் துருக்கர். முகம்மதிய மதத்தைச் சார்ந்த அவர் இந்த ஈற்றடிக்கு எப்படித்தான் பாடல் எழுதப் போகிறார் என்று சபையினர் திகைத்துக் காத்திருந்தனர். பாவலர் இறுதி அடிக்கு முந்தைய அடியில் ராமபிரானது தம்பிகளான ‘பரத, லட்சுமண, சத்’ என்று வருமாறு அமைத்தார். இந்த அமைப்பின் மூலம் ‘துருக்கனுக்கு ராமன் துணை’ என்ற கடைசி அடி ‘சத்துருக்கனுக்கு ராமன் துணை’ என்று எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் புதிய பொருளைப் பெற்றது. குறும்பு செய்ய நினைத்தவர் முகத்திலும் அரும்பியது மகிழ்ச்சியும் நிறைவும் கலந்த புன்முறுவல்.

கொக்கிவிட்ட சங்கிலிபோற் கூண்டெழுந்து நும்மடியார்
சொக்கிவிட்ட நல்லருட்கே தோய்ந்து நின்றாரை யோநா
னுக்கிவிட்ட நெஞ்கினான யுள்ளுடைந்த மெய்ம்மடங்கிக்
கக்கிவிட்ட தம்பலொத்தேன் கல்வத்து நாயகமே.
துட்டென்றால் வாயைத்திறந்து துடிதுடித் தெழுந்து
கொட்டென்று கேட்டுநிற்குங் கோளர் கட்கோ – இட்டென்றும்
வற்றாத் தனம்படைத்த வள்ளல்சி தக்காதி பொற்றா மரைக்கோ புகழ்.”

Dr.Anburaj said...

அத்தகைய சதாவதான நிகழ்ச்சியில் செய்கு தம்பிப் பாவலரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று ‘எல்லாச் சமயக் கடவுளையும் சுட்டும் வகையில் ஒரே வரியில் ஒரு கவிதை கூறுங்கள்’ என்பதாகும். உடனே பாவலர், சிலேடையாக,
சிரமாறுடையான்
- என்று பாடினார். இதனைச்
சிரம் ஆறுடையான்
- என்றும்
சிரம் மாறுடையான்
- என்றும் பிரிக்கலாம்.

(சிரம் = தலை, தலைமை; ஆறு = நதி (River); ஆறு = எண்: 6 (Number); ஆறு = நெறி; மாறு = மாறியிருத்தல்)

இத் தொடருக்குரிய பொருள்கள் வருமாறு:





(1) தலையிலே கங்கை ஆற்றை உடைய சிவபெருமான் (2) தலையிலே ஆறுமுகங்களை உடைய முருகன் (3) தலையிலே மாறுபட்ட முகத்தை உடைய கணபதி (சிரம் + மாறு = சிரமாறு உடையான். அதாவது மாறுபாடான முகம் உடையான்) (4) தலையாய நெறிகளை உடைய அல்லா அல்லது இயேசு அல்லது புத்தர்

மேற்குறிப்பிட்ட பொருளை விளக்கிக் கூறி அனைவரது பாராட்டையும் பெற்றவர் சதாவதானி செய்கு தம்பிப் பாவலர்.

இதைப்போலவே மேலும் பல சிலேடைப் பாடல்களை எளிமையாகப் பாடிப் புகழ் பெற்றவர் கவிஞர் செய்கு தம்பிப் பாவலர்.