Followers

Saturday, February 15, 2020

எச்சரிக்கை விடுத்தும் எப்படி 44 வீரர்களை காப்பாற்ற முடியவில்லை?

புல்வாமா - வீர மரணமடைந்த 44 இந்திய வீரர்களின் தீரமிக்க செயலை நாமும் போற்றுகிறோம்...அதுவேறு... ஆனால்...
நடந்தது ஒரு ஆண்டு கழித்தபின்னும், இதுவரை அந்த சம்பவத்தை குறித்து விரிவான விசாரணை நடத்தாதது ஏன்?
40 CRPF வீரர்கள் வீர மரணமடைந்த புல்வாமா தாக்குதலின் போது, புல்வாமா பகுதியின் DSP யாக இருந்ததது 11/01/2020 அன்று, இரு ஹிஸ்புல் தீவிரவாதிகளுடன் ஒரே காரில் ஆயுதங்களுடன் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு வரும் வழியில் கைது செய்யப்பட்ட, தீவிரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட திவீந்தர் சிங் (Devinder Singh) என்ற IPS உயர் அதிகாரி.. அவரின் தொடர்பு குறித்து விசாரணை நடத்தாதது ஏன்??
புல்வாமா தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே உள்துறை பாதுகாப்புத்துறைக்கு வந்த உளவுத்துறையின் எச்சரிக்கை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
எச்சரிக்கை விடுத்தும் எப்படி 44 வீரர்களை காப்பாற்ற முடியவில்லை?
வீரர்களின் இடமாறுதல் குறித்த தகவல் எப்படி தீவிரவாதிகளுக்கு கசிந்தது?
350 கிலோ RDX வெடிமருந்து எப்படி சர்வதேச எல்லையை தாண்டி இந்தியாவுக்கு உள்ளே, அதிலும் கடுமையான ராணுவ & போலீஸ் கண்காணிப்பு மிகுந்த காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுவரப்பட்டது?
தீவிரவாதிகள் அத்துனை பாதுகாப்பு அரண்களையும் தாண்டி எப்படி வந்து தாக்குதல் நடத்தினார்கள்?
இவ்வளவு எச்சரிக்கைகளையும் மீறி ஏன் அந்த வீரர்கள் பயணிக்க குண்டு வெடிப்பில் அதிக சேதமடையாத பேருந்துகளையோ வான்வழியாக பயணிக்கவோ ஏற்பாடுகள் இந்திய உள்துறை அமைச்சகத்தால் செய்யப்படவில்லை??
இப்படி ஏராளமான கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாமல், தேசப்பக்தியை காட்டி நாட்டு மக்களுக்கு உண்மைத்தன்மையை விளக்காமல் திசைமாற்றி தேர்தல் ஆதாயம் அடைந்தது யார்??
மற்ற நாட்களில் வெடிக்காத குண்டுகள், சரியாக தேர்தல் நெருங்குகையில் வெடிப்பது எப்படி?? குறிப்பிட்ட கட்சி அதை வைத்து முஸ்லீம் தீவிரவாதிகள், காஷ்மீர் பயங்கரவாதிகள், பாகிஸ்தான் என்றெல்லாம் தேர்தல் பிரச்சாரம் செய்து தேர்தல் ஆதாயம் அடைவது எப்படி??
இந்த பதிவு நமது வீரர்களின் தீரத்தை , தியாகத்தை குறைத்து மதிப்பிடுவதாகாது. அதேநேரம் தங்களது அரசியல் நோக்கங்களுக்கு ராணுவத்தை பயன்படுத்துவதை விமர்சிக்காமல் இருக்க முடியாது.


No comments: