நான்காம் வகுப்பு படிக்கிறான்: சமூசா விற்கிறான்.
ஜாஹித் என்ற இஸ்லாமிய சிறுவன் குடும்ப வறுமை காரணமாக பள்ளி செல்வதற்கு முன்பு மருத்துவ மனை வளாகத்தில் சமூஸா விற்கிறான். அதன் பிறகு பள்ளிக் கூடம் செல்கிறான். அந்த சிறுவனின் முகத்தில் உள்ள பூரிப்பை பாருங்கள். லட்ச ரூபாய் கொடுத்தாலும் அமைதி தவழும் அந்த சிரிப்புக்கு ஈடாகுமா!
இது போன்ற சிறுவர்களின் வாழ்வில் செல்வந்தர்கள் பங்கு கொண்டு அவர்களின் வாழ்வை மேலே கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
இறைவன் இது போன்ற சிறுவர்களின் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வருவானாக!
----------------------------------------------
”ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒரு போதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.” என்று இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.
புகாரி: 2072, 2073.
--------------------------------
” தம் தேவைக்கு அதிகமாக மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்… ‘யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான் யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான் மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமானஅருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை” என்று இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’.
புகாரி: 1474, 1475.
2 comments:
தங்களின் ஓரவஞ்சகம் .ஏழையாக உழைத்து வாழ்வது ஒரு முஸ்லிம் சிறுவன்.எனவே அவன் பாடுகளை பாராட்டி பதிவு செய்துள்ளீர்கள். நன்றி.
இதுபோன்று செங்கல் சுளையில் ரோட்ரோரங்களில் ஏராளமான பேர்களைக் காணலாம். இந்து என்பதற்காக அவர்களின் பாடுகள் தங்கள் மனதில் உறைக்காது. தாங்கள் இந்து வெறுப்பாளா்.அரேபிய அடிமை.
குஜராத் ரயில்வே நிலையத்தில் தேநீா் விற்ற சிறுவன் இன்று பாரத நாட்டின் பிரதமராக கடமையாற்றி வருகின்றான் ஆம் அவர்கள் திரு.தாமோதரதாஸ் நரேந்திர மோடி.
Post a Comment