Followers

Saturday, February 29, 2020

டெல்லியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள்:

டெல்லியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள்:

டெல்லியின் நடந்தேறிய வன்முறைகளை வீடியோக்களாகவும் செய்திகளாகவும் பதிவுகளாகவும் பார்த்து, மனம் நொந்து பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை நமக்கு.  நிச்சயமாக பிரார்த்தனைகள் தீர்வு கொடுக்கும்.

ஆட்டோ ஓட்டுனராகவும் - பழைய பொருட்கள் சேகரிக்கும் தொழில் - பிளாஸ்டிக் தொழில் - சிறிய கடைகள் - ஓட்டல்கள் - சுவீட் கடைகள் - என்று சிறு தொழில்கள் நடத்தி, ஒரு தலைமுறைக்குப் பிறகு வீடு பொருட்கள் எல்லாம் சேர்த்து , முன்னேறியவர்களின் பொருட்கள் சொத்துக்கள் ஒரே நாளில் தீக்கிரையானது.

இவ்வளவு நாட்கள் வாழ்ந்த வந்த வீடு , பொருளாதாரம் எல்லாம் ஒரே நாளில் அழிந்து போக, மறுபடியும் அவர்களது வாழ்க்கை ஜீரோவிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

மனிதர்களாக நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்வதே , அவர்களை கை தூக்கி விடுவதே நமது தலையாய கடமை. இதனை நமக்கான அரசாங்கம் என்று நம்பிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் செய்ய மறுக்கும்போது , மக்களாகிய நமது கடமை இது.

இயற்கை பேரிடர்வுகளோ இதுபோன்ற பயங்கரவாதிகளின் பேரிடர்வுகளோ , நாம் ஒன்றாக நின்று ஒருவருக்கொருவர் நம்பிக்கையளித்தால் , கைதூக்கி உதவி செய்தால், நிச்சயமாக அவர்களது வாழ்வாதாரத்தை கொஞ்சமாகவேனும் மீட்டு விடலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

பாதிக்கபட்டவர்கள் உள்ள பகுதிகளில் இந்து முஸ்லிம் குடும்பங்கள் உண்டு. உதவிகளும் நிவாரணங்களும் இந்தியர்களுக்கு என்கிற உணர்வுகளில் கொடுங்கள் .

WeCanDo-Group - சார்பாக  பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருநெல்வேலியில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படுகின்றது.  சென்னையில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்டு , பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜே என் யு மாணவர்கள் நடத்தும் நிவாரண முகாம் வழியாக நேரிடையாக கொடுக்கப்படப்போகிறது.

பணத்தை விடவும் கீழ்கண்ட பொருட்கள் அனுப்புதல் மிகவும் அவசியம்.

கீழுள்ள தன்னார்வலர்களுக்கு போன் செய்து  நிவாரணப் பொருட்களை வழங்குங்கள். மார்ச் 5 ம் தேதிக்குள் [ வரும் வியாழக்கிழமை ] வழங்கினால் நாங்கள் அனுப்பி வைப்பதற்கு உதவியாக இருக்கும்

1. அடிப்படை முதலுதவி: டெட்டோல் ஃ சவ்லான் பேண்டேஜ் காட்டன் வலி ​​நிவாரணி மருந்துகள்.

2. குழந்தைகளுக்கான டயப்பர்கள் மற்றும் சானிட்டரி பேட்கள்

3. பிஸ்கட், கேக் போன்ற பேக் செய்யப்பட்ட உணவு.

4. குழந்தை உணவு - பால் பவுடர்

5. துண்டுகள்,  துப்பட்டாக்கள்

6. சோப்புகள்

7. போர்வைகள் மற்றும் தினசரி அணியும் ஆடைகள் ( மிகவும் பழைய ஆடைகளை தவிர்க்கவும்.)

8. பல் துலக்கும் பிரஷ் மற்றும் பேஸ்ட்

திருநெல்வேலி மற்றும் சென்னையில் உள்ள தன்னார்வலர்களின் தொடர்பு எண்கள்:

திருநெல்வேலி [மேலப்பாளையம்]:
==============================

காஜா நிஜாமுத்தீன் - 97877 27687

ஃபைசல் -  78456 78983

சையது முனாவர் - 9176881046

அஹ்மது தௌஃபில் -  7200134426

அஃபான் அஹ்மது -  9843062324

சென்னை : 
=========

பீர் சாதிக்-  98402 32595

#WeCandDo #DelhiReliefMaterial #Support #WeAreONE





No comments: