இந்தியாவைச் சேர்ந்த முஹம்மது ஷஃபி!
45 வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியா பணி நிமித்தமாக வந்துள்ளார். வரும் போது இந்து மதத்தை சேர்ந்தவராக இருநதுள்ளார். சவுதி வந்து இங்குள்ள அழகிய சூழலை பார்த்து கவரப்பட்டு இஸ்லாத்தை படிக்க ஆரம்பிக்கிறார். இஸ்லாமிய வாழ்வு முறை பிடித்துப் போகவே முஸ்லிமாக மாறுகிறார். தனது பெயரையும் முஹம்மது ஷஃபி என்று மாற்றிக் கொள்கிறார்.
இந்தியா திரும்பிய முஹம்மது ஷஃபி தனது குடும்பத்தாரிடம் தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை விவரிக்கிறார். மனைவி, மகன், மகள் என்று அனைவரும் எதிர்க்கின்றனர். இந்து மதத்துக்கு திரும்பி விடும்படி கட்டாயப்படுத்துகின்றனர். ஆனால் இவர் இஸ்லாத்தை விடுவதாக இல்லை. தனது குடும்பத்தினரை உதறி விட்டு திரும்பவும் சவுதி வந்து விட்டார். கடந்த 45 வருடங்களாக தன்னந்தனியாக உழைத்து சாப்பிடுகிறார். இஸ்லாத்தையும் கடைபிடித்து வருகிறார். தற்போது 80 வயதாகிறது. குடும்பத்தாரோடு தொடர்பில்லை. தற்போது நடக்கவும் சிரமப்படுகிறார். அவருக்கு வேலையாளை நியமிக்க சவுதி செல்வந்தர்கள் முயற்சித்து வருகின்றனர். இறைவன் இவரின் ஈருலக வாழ்வையும் நிம்மதியாக்கி வைப்பானாக!
நம்மைப் போன்ற பலருக்கு தாய் தந்தை இஸ்லாமியர்களாக இருந்து விட்டதால் வெகு இலகுவாக இந்த இஸ்லாம் கிடைத்து விட்டது. வெகு இலகுவாக இந்த அழகிய வாழ்வு முறை கிடைத்தாலோ என்னவோ இதன் அருமை தெரியாமல் இருக்கிறோம். இஸ்லாம் வகுத்த பல சட்டங்களை நமது வாழ்வில் நடைமுறைமுறைபடுத்த பெரும்பாலோனோர் ஆர்வம் காட்டுவதில்லை. முஹம்மது ஷஃபி என்ற இந்த பெரியவரை பார்த்தாவது நாம் நமது வாழ்வு முறையை முடிந்த வரை மாற்றிக் கொள்ள முயற்சிப்போம்.
1 comment:
உறுதியான குடும்பஉறுப்பினா்கள். சவுதி காரன் போடும் பிச்சையில் வாழ முடியுமா ?
இந்தியன் அழிந்து அரேபியனின் எண்ணிக்கை ஒன்று கூடுகின்றது.பாவம் இந்துக்கள் தங்களுக்கு ஆபத்தின் அளவு அதிகரிப்பதை அறியாத முண்டங்கள்ாக இருக்கின்றார்கள்.அதுதான் வேதனை.
Post a Comment