தலித் மாப்பிள்ளை குதிரையில் வந்ததால் தாக்குதல்!
சென்ற ஞாயிற்றுக் கிழமை குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம், ஷரீஃதா கிராமத்தில் ஒரு திருமணம் நடந்தது. ராணுவ வீரரான ஆகாஷ் குமார் (வயது 22) தான் மாப்பிள்ளை. இவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். திருமணத்தன்று மாப்பிள்ளை குதிரையில் ஊர்வலம் வர ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தாக்கூர் சாதியினர் இதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் காவல் துறை அனுமதி கேட்கப்பட்டது. சம்பவ தினத்தன்று ஊர்வலத்தில் மாப்பிள்ளை வர தாக்கூர் சாதியினர் கற்களை கொண்டு ஊர்வலத்தை தாக்கியுள்ளனர். மாப்பிள்ளை பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டார். உறவினர்களில் ஐந்து பேர் தாக்குதலுக்கு உள்ளாயினர். இத்தகவலை மாப்பிள்ளையின் சகோதரர் விஜய் கோட்டியா பத்திரிக்கைகளுக்கு தந்துள்ளார்.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
17-02-2020
இந்தியன் எக்ஸ்பிரஸ்
17-02-2020
தனது சொந்த செலவில் ஊர்வலம் போனால் மேல் சாதியினருக்கு ஏன் எரிச்சல் வருகிறது? உலகில் எந்த நாட்டிலாவது இந்த கொடுமை உண்டா? இது பற்றி மோடியோ அமித்ஷாவோ நம் ஊர் எச்.ராஜாவோ வாய் திறந்தது உண்டா?
இந்த அழகில் குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்து இந்துவாக இருந்தால் குடியுரிமை தருகிறேன். முஸ்லிமாக இருந்தால் தர மாட்டேன் என்று சட்டம் இயற்ற வெட்கமாகயில்லையா அமித்ஷா? உனது மதத்தில் குறைகள் இருப்பதால்தானே தலித்கள் மதம் மாறுகின்றனர். விடிவு தேடி ஓடுபவர்களையும் சட்டம் கொண்டு தடுப்பது எந்த வகை அரசியல்?
ட்ரம்ப் வருகைக்காக ஏழைகளின் குடிசையை மறைக்க சுவர் எழுப்பும் மோடியே... இந்த கல்லெறிதலை எதைக் கொண்டு மறைக்கப் போகிறீர்?
1 comment:
நோபல் பரிசு பெற்ற காதியானி முஸ்லீம் அன பாக். அனுவிஞ்ஞானி அப்துல் கானுக்கு ஏற்பட்ட கொடுமையை பதிவு செய்ய தயாரா ?
அண்மையில் அம்ரான்கான் னுக்கு நிதி ஆலோசகராக நியமிக்கப்பட்ட அஹமதியா முஸ்லிமான அல்டிப மியான் என்பவா் 8 நாளில் நீக்கப்பட்டாரே ஏன் ?
குரான் படித்தவர்களின் அவலட்சணம் ?பதிவு செய்யேன்.
Post a Comment