Followers

Thursday, February 06, 2020

இஸ்லாம் பற்றி இயக்குனர் களஞ்சியம்.


2 comments:

Dr.Anburaj said...


ஏறகனவேஓட்டி ஒட்டி தேய்ந்து போன பாட்டைத்தான் இவர் பாடுகின்றாா்.

இசுலாம் காபீர்கள் என்று பிற மக்களை வெறுத்து கொன்று குவித்த வரலாற்றை

அறியாது பேசுகின்றான். அலலது அறிந்தும் அறியாதது போல் பாவனை செய்கின்றான்.

இந்திய முஸ்லீம்கள் இந்தியாவில் அரேபிய சரியத் காலிபேட்டை உருவாக்க துடிப்புடன் பாடுபட்டு வருகின்றனா். அதில் முக்கியமானது ஜனப்பெருக்கம்.இரண்டாது இந்து துரோகிகளை கைபற்றுதல்.இவன் அப்பாவியாக இருக்கலாம்.அரேபிய படையெடுப்புக்களை முறையாக படிக்கச் சொல்லுங்கள்.

Dr.Anburaj said...

நமது புலவர்களின் சாமா்த்தியம் - ( தகவலுக்காக பதிவு செய்கிறேன்)
ஒரு புதிர் பாடல்!

இன்னும் ஒரு பாடல் இது.புதுமையான புதிர் பாடல் இது.

துரைரங்கன் என்னும் ஒரு பிரபுவின் மீது அவர் பாடிய இந்தப் பாடலில் அவரை, பாடலில் உள்ள புதுமையை ஆராய்ந்து அறிய வேண்டும் என்கிறார் கவிராயர்

துங்கவரை மார்பா துரைரங்க பூபதியே

இங்கோர் புதுமை யியம்பக் கேள் - பங்கயக்கை

ஆயிழைக்கு நான்குநு தலைந்துகுழை யாறுமுலை

மாயவிழி யேழா மதி

பாடலின் பொருள் :

துங்கம் - பரிசுத்தமாகிய

வரை - மலை போன்ற

மார்பா - மார்பினை உடையவனே

துரைரங்க பூபதியே - துரைரங்கன் என்னும் பூபதியே

இங்கு - இவ்விடத்தில்

ஓர் புதுமை இயம்பக் கேள் - ஒரு புதிய செய்தி உண்டு; அதைச் சொல்கிறேன்; கேட்பாயாக (அது என்னவெனில்)

பங்கயக் கை - தாமரை மலர் போன்ற கைகளை உடைய

ஆயிழைக்கு - அழகிய பெண்ணுக்கு

நான்கு நுதல் - நான்கு நெற்றிகள்

ஐந்து குழை - காதணி ஐந்து

ஆறு முலை - மார்பங்கள் ஆறு

மாய விழி ஏழாம் - வஞ்சமுள்ள (மயக்கும்) கண்கள் ஏழு

மதி - தேர்ந்து நீயே ஆலோசித்து இதை அறிவாயாக!

பாடலின் பொருளை துரைரங்க பூபதி அறிந்து கொண்டு மதுரகவி ராயருக்குப் பரிசுகள் கொடுத்துப் பாராட்டினார்.

பாடலில் மறைந்திருக்கும் பொருள் தான் என்ன?

ஆயிழை என்றால் கன்னி (ராசி)

மேஷம், ரிஷபம், மிதுனம்,கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகியவை பன்னிரெண்டு ராசிகள்
இவற்றில் கன்னி ராசிக்கு நான்காவது ராசி தனுர் ராசி.

தனுர் என்றால் வில் என்று பொருள்

கன்னி ராசிக்கு ஐந்தாவது ராசி மகரம்.

மகரம் என்றால் மீன் என்று பொருள்.

கன்னி ராசிக்கு ஆறாவது ராசி கும்பம். அதாவது குடம்.

கன்னி ராசிக்கு ஏழாவது ராசி மீனம். அதாவது கெண்டை மீன்.

பாடலில் புலவர் கூறிய கருத்து;

அழகிக்கு வில்லை நிகர்த்த நெற்றியும்

மகர மீனுருவை ஒத்த காதணியாகிய மகர குண்டலமும்

குடம் போன்ற மார்பகங்களும்

கெண்டை மீன் போன்ற கண்களும் உள்ளன.

இதை ஆராய்ந்து அறிக.

ஜோதிடத்தில் அழகியைச் சேர்த்துப் பாடிய சமத்காரப் பாடல் இது.