திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் நடத்திய ஆண்டு விழா நூஃபா அரங்கில் 20-02-2020 அன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக ஆளூர் ஷாநவாஸூம், சுப வீர பாண்டியனும், இசை அமைப்பாளர் ஜேம்ஸூம் வந்திருந்தனர். மும் மதங்களின சங்கமம் என்று கூட சொல்லலாம்.
அதில் சுப வீர பாண்டியன் அவர்களின் பேச்சின் சுருக்கம்....
'திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் காந்திஜியிடம் ப்ளாங் செக்கை கொடுத்து எவ்வளவு பணம் தேவையோ அதனை எழுதிக் கொள்ளுங்கள் என்று சொல்லியுள்ளார். தேசப் பற்றுக்கு இதை விட ஒரு உதாரணம் தேவையா? இன்று காலையில் ரியாத்தில் உள்ள அருங்காட்சயகத்துக்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர். கிமு 4500க்கு முன் உள்ள அராபிய எழுத்துக்களை காட்சிக்கு வைத்திருந்தனர். அந்த அளவு தொன்மையான மொழியாக அரபு உள்ளது. அதே போலவே நமது தமிழ் மொழிக்கும் புராதன வரலாறு உண்டு. இப்படி உலகில் உள்ள தொன்மையான மொழிகளை மதிக்கக் கற்றுக் கொள்வோம். என் மொழி மட்டுமே சிறந்தது என்ற குறுகிய நோக்கில் இல்லாமல் அனைத்து மொழிகளின் சிறப்புகளையும் பேசுவோம்.
ஹிட்லர் சுத்த சைவம்: பெரியார் சுத்த அசைவம். சைவம் மட்டுமே சாப்பிட்ட ஹிட்லரால் உலக மக்கள் அனுபவித்த துன்பங்கள் எத்தனை? அசைவமும் சாப்பிட்ட பெரியாரால் இந்த சமூகம் அடைந்த நன்மைகள் எத்தனை எத்தனை? எனவே உணவு ஒரு மனிதனின் செயல்களை தீர்மானிப்பதில்லை.
சிறுபாணாற்றுப் படையில் வரும் ஊரின் பெயர் 'போர்'. அந்த பெயர் இன்றும் பாகிஸ்தானில் வழக்கில் உள்ளது. கீழடியும் சிற்து சமவெளி நாகரிகமும் ஒத்த கலாசாரத்தையுடையவையாக இருந்திருக்க வேண்டும். சாதி வேறுபாடு அற்ற தமிழ் சமூகம் என்று சாதியின் கோரப் பிடியில் வீழ்ந்தது என்பதனை Tony Joseph எழுதிய "Early India" விரிவாக விளக்குகிறது.
ஆரிய, திராவிட போர் நடந்த சம்பவத்தை ரிக் வேதம் பாடலாக சொல்கிறது. வட மாநில பூசாரிகளின் பல டிஎன்ஏக்கள் ஈரானோடு ஒத்துப் போவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.(நம் ஊர் பார்பனர்களின் டிஎன்ஏயும் அதே தான்) இதை எல்லாம் பற்றி நிறைய விவாதிக்க வேண்டும். ஆனால் அதிகம் அரசியல் பேச வேண்டாம் என்று கடிவாளம் போடப்பட்டுள்ளதால் கோடிட்டுக் காட்டுகிறேன்.
இவ்வாறு தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார். இதற்கு முன்னால் ஆளூர் ஷாநவாஸின் அருமையாக உரையும், பிறகு ஜேட்ஸ் வசந்தின் வார்த்தை விளையாட்டும் நடைபெற்றது.
சிலர் பேசி முடித்தவுடன் இன்னும் சிறிது நேரம் பேசியிருக்க மாட்டாரா? என்று எண்ணத் தோன்றும். அத்தகைய பேச்சாற்றல் மிக்கவர் சுப வீர பாண்டியன். உலக மூல மொழிகள் அதை;தையும் ஒரே தரர்தில் வைத்து பார்க்க வேண்டும்: எதுவும் தேவ மொழி அல்ல:. அனைத்தும் மனிதர்கள் புரிந்து கொள்ள இறைவனால் படைக்கப்பட்டவைகளே என்று குர்ஆன் கூறுகிறது. அதைத்தான் சுப வீர பாண்டியனும் பிரதிபலிக்கிறார்.
------------------------
முகமது நபியின் காலத்துக்கு முன்பு அரபுகள் மொழி வெறியின் உச்சத்தில் இருந்தார்கள். அரபி மொழி அல்லாத வேறு மொழி பேசுவோர் அனைவரும் ஊமைகளைப் போன்றவர்கள் என்றனர்.அதாவது அவர்கள் நினைப்பில் மற்ற மொழிகளுக்கு எந்த பொருளும் கிடையாது என்று விளங்கி வைத்திருந்தனர். அந்த நேரத்தில் தான் முகமது நபி பின் வருமாறு பிரசிங்கித்தார்.
'மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்பு நிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன. இன்று முதல் குலப் பெருமையை என் காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று சொன்னார்.மேற்கண்ட நபிமொழியின் மூலம் ஒரு மொழியை உயர்த்தியும் மற்றொரு மொழியை தாழ்த்தியும் வாதங்கள் புரிவது இஸ்லாம் தடுத்துள்ளது என்று அறிகிறோம். எனவே உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும் நேசிப்போம். அதன்மூலம் மனித நேயத்தையும் வளர்ப்போம்.
'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4
2 comments:
சிறப்பு அழைப்பாளர்களாக ஆளூர் ஷாநவாஸூம், சுப வீர பாண்டியனும், இசை அமைப்பாளர் ஜேம்ஸூம் வந்திருந்தனர். மும் மதங்களின சங்கமம் என்று கூட சொல்லலாம்.
தவறு
ஆளுா் ஷாநவாஸ் அரேபியமத வாதி என்பது உண்மை.
ஜேம்ஸ் இஸ்ரேலிய மத வாதி.கிறிஸ்தவா் என்றால் சரிதான்.
சுப வீரபாண்டியன் எதில் சேருவாா் ?
எப்படி மும் மதங்களின சங்கமம் என்று சொல்லலாம். யாா் இந்து.
--------------------------------------------------------------------------------
இன்று காலையில் ரியாத்தில் உள்ள அருங்காட்சயகத்துக்கு நண்பர்கள் அழைத்துச் சென்றனர். கிமு 4500க்கு முன் உள்ள அராபிய எழுத்துக்களை காட்சிக்கு வைத்திருந்தனர். அந்த அளவு தொன்மையான மொழியாக அரபு உள்ளது. அதே போலவே நமது தமிழ் மொழிக்கும் புராதன வரலாறு உண்டு. இப்படி உலகில் உள்ள தொன்மையான மொழிகளை மதிக்கக் கற்றுக் கொள்வோம். என் மொழி மட்டுமே சிறந்தது என்ற குறுகிய நோக்கில் இல்லாமல் அனைத்து மொழிகளின் சிறப்புகளையும் பேசுவோம்.
பதில்
ஹிந்தி சமஸ்கிருதம் போன்ற இந்திய மொழிகளை திராவிடமுன்னேற்ற கழக தலைவர்களின் குழந்தைகள் கற்பார்கள்.ஆனால் மறறவர்கள் படிக்கக் கூடாது என்பது என்ன நியாயம்.
4500 ஆண்டுகளுக்கு முன்பு அரேபிய எழுத்துக்கள் எப்படி இருந்தது என்று தமிழன் அறிந்து ஆவதென்ன ? அரேபிய மொழியில் நவீன விஞ்ஞானம் .... உள்ளதா ?
தின்ற ஓசி நெய் சோற்றுக்கும் பிரியாணிக்கும் முஸ்லீம்களை சமாதானம் செய்ய காக்கா பிடிக்க மகிழ்விக்க ஏதோ இவன் பேசுகின்றான்.
----------------------------------------------------------------------------------
முகமது நபி பின் வருமாறு பிரசிங்கித்தார். 'மக்களே! இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! அரபு மொழி பேசுபவன், அரபு மொழி பேசாதவனைவிட உயர்ந்தவன் இல்லை. அரபு மொழி பேசாதவன் அரபு மொழி பேசுபவனை விட சிறந்தவனும் இல்லை.வெள்ளை நிறத்தவன் கருப்பு நிறத்தவனை விட உயர்ந்தவன் இல்லை
அவர்கள் செய்யும் நல்லறங்கள் தான் அவர்களை உயர்த்துகின்றன.
இது ஒரு சுயநலமான வாதம்.இசுலாமிய மதத்திற்குள் உள்குடும்ப சண்டை புகைந்து கொண்டிருந்தது.அதை தடுக்கவில்லையெனில் படைக்கு ஆள் கிடைக்காது.கொள்ளை பொருட் கிடைக்காது. குமுஸ் பெண்கள் கிடைக்க மாட்டாா்கள்.
எனவே மஹம்மது ஜமாத்தில் ஏற்படக் கூடிய பிளவுகளை தவிர்க்க இதை ஒரு சமாதானமாகச் சொன்னாா். உலக மக்களுக்கு அளித்த பொது உபதேசம் அல்ல.
காபீர்களின் நல்லறங்களை அல்லா அங்கிகரிக்க மாட்டான் என்றும் காபீர்களுக்கு நரகில் கொடும் நெருப்பு காத்திருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றாரே அரேபியமதவல்லாதிக்க வாதி முஹம்மது.
கலிபாவாக குரேசிதான் வர வேண்டும் என்றும்
குரான் குரேசிகளின் மொழி நடையில் எழுதப்பட வேண்டும்
எ ன்று முஹம்மது விரும்பினாா் என்றும் சொல்லப்படுகின்றதே!
சாதி இன மொழி பேதமற்றவா் முஹம்மது என்று வாதம் புளித்துப் போன் இற்றுப் போன் மற்வர்களை ஏமாற்ற சொல்லப்படும் பொய்யான வாதம்.
இசுலாம் என்ற பெயரல் அவரது திடடம் எல்லாம் -சிறந்த பயன் இல்லாத அரபு மொழியை உலக அரங்கில் நிலை நிறுத்தியது.
அரேபிய கலாச்சாரத்தை ஆண்டவன் கலாச்சாரம் கட்டளை ஆக்கியது.
-------------------------------------------------------------------------------
முஹம்மது நபி சொல்லாமல் விட்டது
இசுலாமியமதத்தை பின்பற்றுபவனை விட இந்து ஒன்றும் தாழ்ந்தவன் அல்ல.இந்துவைவிட இசுலாமியன் தாழ்ந்தவனும் அல்ல.
காபீர் என்று பிறமதத்தவர்களை பழிக்க வேண்டாம்.
காபீர்களின் நல்லறங்கள் காபீர்களை காப்பாற்றும்.இறைவன் அதை அங்கிகரிப்பான்.
Post a Comment