இன்று (பிப். 16, 2020) சென்னை வண்ணாரப்பேட்டைப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுடன் பேசுவதற்காக மேடையிலிருந்து இறங்கியதும், அங்கே அமர்ந்திருந்த ஓர் இசுலாமியப் பெரியவர் கலங்கியக் கண்களுடன் என் கைகளைப் பற்றினார். “ஐயா, நீங்கள் கலங்காதீர்கள்; இந்த அடக்குமுறைச் சட்டத்தை அமுல்படுத்த விடமாட்டோம்” என்று நான் தேறுதல் சொன்னேன். சுமார் 85 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவர் என்னைக் கட்டியணைத்தவாறே, தேம்பித் தேம்பி அழுதார். நானும் நிலைகுலைந்து போனேன்.
தள்ளாத வயதில் வாடும் பெரியோரை, ஏழை எளியோரை, சக்தியற்றோரை மனஉளைச்சலுக்கு, சங்கடத்துக்கு ஆளாக்குபவர்கள் நன்றாக வாழ மாட்டார்கள். அவர்கள் அருகி, கருகி, அழிந்து, ‘அய்யோ’வென்று போவார்கள்! போக வேண்டும்!
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்!!
உதயகுமார்
--------------------------------------------
இந்துத்வாவாதிகளுக்கு இந்து மதத்தின் மீது பற்றோ இந்து மதத்தை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமோ கொஞ்சமும் கிடையாது. இது போன்ற சட்டங்களின் மூலம் தங்களின் அதிகாரத்தை நிலையிருத்திக் கொள்ளவேண்டும்: வர்ணாசிரம கொள்கையை வீரியப்படுத்த வேண்டும்: முஸ்லிம்களை பயமுறுத்தி வைக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே காய்களை நகர்த்தி வருகின்றனர். இவர்கள் நினைக்கும் எந்த செயலும் நிறைவேறப் போவதில்லை.
இந்த குடியுரிமை திருத்த சட்ட குழப்படிகளால் நாடு மேலும் பொருளாதாரத்தில் சரிவை சந்திக்கும். நாடு முழுக்க கலவரங்கள் உண்டாகும். அழகிய இந்த நாடு சிதறுண்டு போகும்.
அது போன்ற நிலைகளிலிருந்தும் இந்த தேச விரோதிகளிடமிருந்தும் எனது நாட்டை இறைவன் காப்பானாக!
1 comment:
பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஷ் மியான்மா்
நாட்டில் இருந்து குடியேறிய அனைத்து முஸ்லீம்களும்
இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.
அவரவா்கள் தங்கள் தாய் நாட்டில் குடியேற வேண்டும்.மிகப் பெரிய நாடு -நிலம் -அல்லாவின் புமி அவர்களுக்காகவே -முஸ்லீம்களுக்காகவே உள்ளது.
அதில் அவர்கள் குடியேற இந்திய முஸ்லீம்கள் அனுமதிக்க வேண்டும்.
நாட்டின் பொது நலன் கருதி, இந்திய முஸ்லீம்கள்
அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
Post a Comment