Followers

Monday, August 11, 2014

தலித்களுக்கு முடி வெட்ட மறுத்து விரட்டிய கொடுமை!

கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் உள்ள கோலிவாட் என்ற பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்பேத்கார் காலனியில்தான் இந்த கொடூரம் நடந்துள்ளது. ஒரு மாதமாக இந்த பிரச்னை நீடித்து வருவதால் அங்குள்ள தலித்கள் யாரும் கடந்த ஒரு மாதமாக முடிவெட்டவோ அல்லது சவரம் செய்யவோ இல்லையாம்.

சவித சமாஜ் என்ற நாவித சாதியினர் ஒன்று கூடி இனி தலித்களுக்கு முடி வெட்ட மாட்டோம் என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். இதற்கு காரணம் மேல் சாதியினரின் நெருக்குதலே என்று நாவிதர்கள் கூறுகின்றனர். தடையை மீறி முடி வெட்டினால் மேல் சாதியினர் தாக்குதலுக்கு தாங்கள் உள்ளாவோம் என்ற பயத்தில் சில நாட்களாக இந்த நாவிதர்கள் கடைகளையே திறக்க வில்லையாம். சாதிவெறி எந்த அளவு சமூகத்தில் முற்றிப்போய் உள்ளது என்பதற்கு இந்த ஒரு நிகழ்வு சிறந்த உதாரணம்.

ஒரு தலித் இளைஞன் முடிவெட்ட சென்ற போது மேல்சாதியினரால் கடுமையாக திட்டப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளான். ஊரையே காலி செய்து சென்று விடுங்கள் என்று மேல்சாதியினரால் தினமும் மிரட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக அம்பேத்கார் காலனி மக்கள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தனர். நூற்றுக்கு மேற்பட்ட தலித் குடும்பங்கள் அரசின் உதவியை எதிர்பார்த்து தினமும் அச்சத்திலேயே வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.

இந்த கிராமத்தில் மேல் சாதியினரே முடி திருத்தும் நிலையங்களை நடத்துகின்றனர். இரண்டு தலித்கள் முன்பு முடி திருத்தும் நிலையம் திறந்த போது மேல்சாதியினரின் நெருக்குதலாலும், கடையின் சொந்தக்காரரின் நெருக்குதலாலும் சில நாட்களிலேயே மூடப்பட்டது. நாங்கள் என்னதான் செய்வது என்று பரிதாபமாக சமூகத்தைப் பார்த்து கேட்கின்றனர் அந்த மக்கள்.

கல்லூரி வரை சென்று படித்த அம்பேத்காருக்கே மேல் சாதியினர் செய்த கொடுமைகளை அவரே விவரிக்கிறார். படியுங்கள்.

'விசாவுக்காக காத்திருக்கிறேன்' என்ற நூலில் அம்பேத்கர் தனது இளவயதில் தீண்டாமை கொடுமையினால் பட்ட அவமானங்களை குறித்து ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்:

"எங்கள் குடும்பத்து ஆண் பிள்ளைகளுக்கு முடிவெட்டுவது, முகச் சவரம் செய்வது போன்ற அனைத்துப் பணிகளையும் எங்கள் மூத்தச் சகோதரியே செய்வார்; எங்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர் சிறந்த முடித்திருத்தக் கலைஞராகவே ஆகிவிட்டார். சதாராவில் முடிதிருத்துபவர்கள் இல்லாமல் இல்லை; அவருக்குக் கூலி கொடுக்க எங்களால் இயலாது என்பதுமில்லை. ஆனாலும் எந்த முடிதிருத்துபவரும் தீண்டத்தகாத ஒருவருக்கு சவரம் செய்ய ஒப்புக் கொள்ளமாட்டார் என்பதால் தான் இப்பணியை என் சகோதரி செய்து வந்தார்."

அம்பேத்காருக்கு 50 வருடம் முன்பு இந்த கொடுமை நிகழ்த்தப்பட்டது. சரி. இத்தனை வருடம் கழித்தாவது இந்த சமூகத்தில் ஏதேனும் மாற்றம் வந்துள்ளதா? நான் மேலே குறிப்பிட்ட சம்பவம் நாம் வாழும் இந்த காலத்தில் ஒரு வாரம் முன்பு நடந்த நிகழ்வு. ராக்கெட் விட்டுள்ளோம்: வல்லரசாக மாறப் போகிறோம் என்று மோடி தினமும் அறிக்கை விட்டுக் கொண்டுள்ளார். இந்த விஞ்ஞான யுகத்திலும் இது போன்ற காட்டுமிராண்டித்தனம் அரங்கேற்றப்படுவதற்கு இந்தியர்களாகிய நாம் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?

எனது சொந்த கிராமத்தில் ஒரு இந்துவும், இரண்டு முஸ்லிம்களும் முடி திருத்தும் நிலையம் வைத்துள்ளனர். தலித்களுக்கு மேல் சாதி இந்துவானவர் முடி வெட்ட மாட்டார். ஆனால் மற்ற இரண்டு முஸ்லிம்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவர்களை அனுமதிக்கின்றனர். இதனை இன்றும் நீங்கள் பார்க்கலாம். சொந்த மதத்துக்காரன் தீண்டாமையின் பெயரால் ஒதுக்க ஒரு முஸ்லிம் அவனை சமமாக நடத்துகிறான். அதற்கு காரணம் அந்த முஸ்லிமின் மார்க்கம் அவனுக்கு எதை போதிக்கிறது தெரியுமா?

பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; உங்களது தந்தையும் ஒருவரே! அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!

ஓ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற அபிசீனிய அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் அவரது சொல்லைக் கேட்டு நடங்கள்; அவருக்குக் கீழ்ப்படியுங்கள்!

(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

இந்த விஞ்ஞான யுகத்திலும் ஏன் இந்த மக்கள் இப்படி தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள்? என்று நாம் ஆச்சரியப்படுவோம். அதற்கு காரணம் இந்து மத சட்ட நூல்கள். மனுதர்மத்தின் சட்டத்தை கீழே பாருங்கள்.

அந்தப் பிரம்மாவானவர். இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன்முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தார்க்கு இம்மைக்கும் மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைப் பகுத்தார் (மனுதர்மம் அத்தியாயம் 1 சுலோகம் 87),.

பிரம்மாவே மனிதர்களை நான்காக பிரித்து வைத்துள்ளார் என்று ஒவ்வொரு இந்துவும் நம்புகிறான். அந்த பிரம்மாவுக்கு தீங்கு செய்து விடக் கூடாது என்ற நம்பிக்கை ஆழமாக பதிந்து போனதால்தான் இத்தகைய கொடூரங்கள் இந்த காலத்திலும் நிகழ்கிறது.

என்று தணியும் இந்த சாதி வெறி! என்று அவர்களுக்கு விடுதலை? விடை சொல்வார்தான் யாருமில்லை.

ஆதார சுட்டி....

http://www.dailypioneer.com/nation/no-haircuts-for-dalits-in-this-ktaka-village.html




6 comments:

Anonymous said...

BALA SUNDAR KRISHNA on August 11, 2014 at 2:00 pm

Responding to Sarangan’s latest:

எனக்கு மனித வாழ்க்கையின் அடிப்படைகள் நன்கு புரியும். அதாவது மனிதர்களுக்கிடையே ஏற்ற தாழ்வுகள் பல இயற்கையாகவும், சில மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கையாலும் வருவ்ன. இயற்கையால் உருவாக்கப்பட்டவைகளைத் தவிர்க்க முடியா. ஆனால், நாம் நினைத்தால், அவற்றால் வரும் வேண்டா விளைவுகளை பாதிக்கப்பட்டோருக்க வாராதபடி பார்த்துக்கொள்ள முடியும். உடற்குறையுள்ளோரை ம்னித நேயமில்லா அக்காலம் தள்ளி வைத்தது. இன்றைய உலகம் ஏற்று அவர்களையும் நன்கு வாழவைக்கிறது. எய்ட்ஸ் குழந்தைகளைப்பள்ளியில் இருந்து நீக்கினால் பள்ளிகளுக்குத் தண்டனை தரப்படும் என்பது இன்றைய அரசு செய்தி. இதே போல மனிதன் செய்த பிரிவினைச்செயல்களால் வரும் விளைவுகளால் பாதிக்கப்பட்டோரை அவ்விளைவுகள் இனிவாராதபடி காத்து அச்செய்லக்ளையும் அழிக்க முடியும். மனமிருதந்தால் மார்க்கமுண்டு.

நான் எழுதிய்வற்றைக்கூர்ந்து படிக்குங்கால் புலனாவது: விளைவுகள் வாராவண்ணம் செய்தல் போன்றவையே.

இராமானுஜர் சொன்னதில் விளைவுகள் இல்லை. ஒருவன் ஞான மார்க்கத்தில் ஒழுக, இன்னொருவன் பக்தி மார்க்கத்தில் ஒழுகுகிறான். இம்மார்க்கம் சிறந்ததா? அம்மார்கக்மா என்ற கேள்வியில்லை. எவருக்கு ஏம்மார்க்கம் உகந்ததோ, அதுவே அவருக்கு சரி என்று விடப்படுகிறது. ஆனால், இதுதான் உயர்ந்தது; அது தாழ்ந்தது என்று அங்கீகாரம் கொடுக்கும் போது, வேண்டா விளைவுகள் ஏற்பட்டு ஒருவர் பாதிக்கப்படுகிறார். இன்னொருவர் மகிழ்கிறார். ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கபபடுகின்றன. இராமானுஜர் சொன்னது, இருவரும் தத்தம் வழியில் ஒழுகும்போது விளைவுகள் இல்லை எனபதுதான். விளைவுகள் ஏற்படும் இடங்கள் வந்த போது அவர் நுழைந்து தீர்த்தார் எனப்து திருநாராயணபுரம் காட்டுகிறது. எனவே உங்கள் எடுத்துக்காட்டு இங்கு செல்லாது.

Anonymous said...

நாம் பேசுவது சாதிகள் மட்டுமல்ல. இந்த சாதிக்காரனுக்கு இந்த ஒழுக்கம்; அந்த சாதிக்காரனுக்கு அந்த ஒழுக்கம். இன்னொரு சாதிக்காரனுக்கு ஏனில்லை என்ற கேள்விகளுக்கும் இங்கிடமில்லை. விளைவுகளே நாம் கதைப்பது. இவ்வொழுக்கங்கள் அவர்களூக்குள்ளேயே இருக்கும் போது சமூகத்தில் விளைவுகள் இல்லை. ஆனால், இவ்வொழுக்கங்கள ச‌மூகத்தில் முன் வைக்கப்பட்டு ஒருவர் ஒழுக்கம் உயர்ந்தது’ இன்னொருவரது தாழ்ந்தது என்று மக்களை நினைக்கவைத்தால் பாதிக்குள்ளாக்கப்படுவோர் மன்ம் நொந்துதான் போவர்.
.
பிராமணர்கள் ஆச்சாரம் கோயில் வரை பாய்ந்தபடியால், அக்கோயில்கள் பொதுவிடங்களாகப்போனதால், விளைவுகள் ஏற்பட்டன. தலித்துகளைக்கண்டாலே தீட்டு; அவர்கள் காலடிகள் பட்டால் கொயில்கள் புனிதத்தன்மை இழக்கின்றன என்று சொல்லப்பட்டு அவர்கள் கோயில்களில் நுழையவிடாமல் செய்யப்பட்டது. தீண்டாமை கொடூரமாக இருந்த காலத்தில் ஊருக்குள்ளேயே நுழைய மறுக்கப்பட்டார்கள் என்னும் கொடுமையை திருப்பாணராற்றாழ்வார், நம்பாடுவான் ஆழ்வார் திவ்ய சரிதங்கள் மூலம்றியலாம். திருக்கட்சி நம்பிகள் காலடி பட்டதால் வீட்டைக் கழுவி விட்டு குளித்துக்கொண்டிருந்த தம் மனைவியின் செயலைக்கண்டு கொதித்த இராமானுஜ்ர் அன்றே இல்லற வாழ்க்கையை நீத்து துறவியானார். சாரங்கன் சொன்னது போலத்தான், தஞ்சம்மாளும் வாதாடியிருப்பார். இல்லையா? தஞ்சம்மாள் செய்தது வியப்பொன்றுமில்லை. வியப்பென்னவென்றால், திருக்கச்சி நம்பிகளைவிட தங்கள் ஆச்சாரங்கள், கர்மங்கள் புனிதமானவை. அவை காக்கப்படவேண்டும். மாற நேரி நம்பிகளுக்கு ஈமக்கிரியை செய்தால் பெரிய நம்பி தன் பிராமணுத்த்வத்தை இழந்துவிட்டார் என்பது தெய்வத்தன்மையன்று; தெய்வநிந்தனையாகும். காமதேனுவானாலும் பசுத்தன்மை போகாது என்று வட்கலை சொல்வது அப்படிப்பட்டதே. சாரங்கன் இதைத்தான் சொல்கிறார். எங்கள் ஆச்சாரம் எமக்கு. விட்டுக்கொடுக்கமாட்டோம்.

சாதி அமைப்பால் வன்கொடுமைக்கு சமூகத்தில் ஆளாக்கப்பட்டோர்; ஊருக்கு வெளியே வைக்கப்பட்டதால், சமூகத்தில் எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்டதால், அவர்கள் முன்னேறவே முடியவில்லை. இன்று அதன் தாக்கமும் அவர்கள் சிந்தனையில் வேர் விட்டது. அதாவது அவர்களை அறிவில்லாதவர்கள் எனச் சொல்லவைக்கிறது. ஆக, மதத்தால் வந்த கொடுமை அவர்கள் பொதுவாழ்விலும் அனுபவிக்க வேண்டிய்தாயிருக்கிறது.

அரவிந்தன் உரையாடிய தலித்து இளைஞர எங்களூரில் கோயில் சப்பரம் வரும்போது நாங்கள் அங்கே வரக்கூடாதென்பது ஊர்க்கட்டுப்பாடு என்றார். அதற்கு இவர் கொடுத்த பதில் அதை எதிர்த்து நீங்கள் போர்ராடுங்கள் எனபதுதான். எளியோர் எப்படி போராடமுடியும்? ஆதிக்கசக்திகள் ஆள்பவ்ர்களாக இருக்கும்போது எப்படி முடியும்? குடிசைகளையும் குழந்தைகளையும் இழக்கவேண்டுமே? இதை அரவிந்தன் சிந்திக்கவே இல்லை. அவர்களுக்காக மற்றவர்களும் சேர்ந்து போராடவேண்டும். உத்தபுரத்தில் இன்னும் சுவர் எழுப்பப்படுகிறது. மதுரை கிராமங்களில் இன்னும் செருப்பணிந்து போக முடியாது. போராடமுடியுமா? தலித்துகள் கூலி உயர்வு கேட்காமலிருந்தால் எரித்துக்கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள். கேட்டபடியால், எங்களிடமா பேசவந்தாய் என 40க்கும் மேல் ஓரிடத்தில் வைத்து எரித்துக்கொல்லப்பட்டார்கள். (கீழவெண்மணி) எனவே போராடினால் உயிரை இழக்க வேண்டும்.

Anonymous said...

சாரங்கன் சிந்திக்கவேண்டியது: இவற்றை இந்துமதத்துரோஹிகள் தங்கள் ஆதாயத்துக்குப் பயனப்டுத்துகிறார்கள் என்று மூடிமறைக்காமல், இவற்றை நீக்கத்தடைக்கறகள் எவை என்று ஆராய்ந்து அவற்றை நீக்கப்பாடுபடவேண்டும். அத்தடைக்கற்களில் ஒன்று ஆன்மிகக் கண்காட்சி என்ற பெயரில் ஆதிக்கசக்திகள் கூடுமிடமாக்கி இந்துமதத்தின் பெயரைக் கெடுப்பதும் தலித்துகளின் மீதுபாயும் தீண்டாமையையும் செய்வதும் ஆகும்.

சாதிகளின் அவசியம் என்று கட்டுரை வரைந்த மறைந்த மலர்மன்னனின் ஒரே சிந்தனை. சாதிகள் காலங்காலமாக வ்ருகின்றன. அவைகளினால் தீவிளைவுகள் வரவில்லை. அவரவர் சாதிகளில் இருந்து ஒருவருக்கொருவர் மதித்துவாழலாம் எனப்துதான். ஆனால், விளைவுகளால் பாதிப்புக்குள்ளாகினர் இன்றும் தொடர்கின்றனர் எனப்து வர்லாறு. History clearly shows, if there are castes, there will be higher castes and lower castes and the lowest will face unfair and unjust treatment of losing their rights and dignity. If they demand the right to dignity, they will be killed. When explained thus, Malarmannan did not like to change his position. பார்க்க மறுத்துவிட்டார். ஒருவேளை தலித்தாகப் பிறந்திருந்தால் அவர் எண்ணம் வேறாக் ஆகியிருக்கும். அல்லது தலித்துகளோடு ஐக்கிய வாழ்வு வாழ்ந்திருந்தால் புரிந்திருக்கும். பாரதியார் தமிழ்நாட்ட்டில் இருக்கும் வரை மலர்மன்னனைப்போலதான். புதுச்சேரி வாழ்க்கையே அவரை மாற்றியது. வரலாறு என்பது ஒரு ஆனை. நம் வீட்டில் நம் முன்னே உடகார்ந்திருக்கிறது. இல்லை என்று சொல்வது மனசாட்சியே தனக்கு இல்லையெனப்தாகும். இந்துமதம் இன்னும் சாதி அமைப்பபிடித்துவைத்துக்கொண்டிருக்ககூடாது. ஆனால் மதத்தலைவர்கள் வேண்டுமென்கிறார். ம்ஹாப்பெரியவாள் அவர்களில் ஒருவர்.

மனு வேண்டாம் என்றால், அஃதில் ஒன்றே ஓன்றுதான் சாதியைப்பற்றி என்கிறார் Krishnakumar, இதையறியாதது மதிஹீனமென்கிறார். இந்த பருப்பு மற்றவர்களிடம் வேகும்; தலித்துகளிடம் வேகாது. இதைச்சொல்வது மதிஹீனமன்று. உண்மை விளம்பல். மனு நல்ல கருத்துக்கள் சொல்லியிருக்கிறது என்றால், அக்கருத்துக்களை பிறநூல்களும் சொல்லியிருக்கும். தேடுங்க்ள். நீவிர் இந்து மதத்தில் உண்மையான தொண்டராயிருப்பின்.

Anonymous said...

BALA SUNDARAM KRISHNA on August 11, 2014 at 11:17 am

//Sanskrit is only the perfect language in the world and it can add on new words indefinitely. Sanskrit therefore need not borrow words from other languages. Inserting other language words into Sanskrit will stick out like a sore thumb. I also recommend video speech Maha Periyaval of Kanchi on the question of antiquity of Tamil and Sanskrit.His final conclusion? Veda Bhasa is the mother of ALL LANGUAGES.
I do not think anyone here is more qualified than His Holiness, both in Tamil and Sanskrit.
The following links give simple lessons in Sanskrit for the ignorant but also for parochial Tamils with their collective head stuck in mud.//

RAMA

Persons like Sarangan writing here more passionately than you, in favour of Sanskrit have objected to the term ‘deva basha’ to describe Sanskrit. They say it is the machination of the missionaries and westerner to call so. The fact is, according to them, only one of the dimensions of Sanskrit is its religious affiliation. Otherwise, it is all secular. Aren’t you contradicting them ?.

//I do not think anyone here is more qualified than His Holiness, both in Tamil and Sanskrit.//

Don’t think. Just say. //There is no one here…etc. //. Writers here, for and against, express their own opinions, and, some based on data. By saying they don’t know as much as Maha Periyavaal, you want to gag them. Let them speak. If you want, you can quote from Maha Periyval and add your views also.

You are on record here that you don’t know Sanskrit. However, you dare to write as follows:

//Sanskrit is only the perfect language in the world and it can add on new words indefinitely. Sanskrit therefore need not borrow words from other languages. Inserting other language words into Sanskrit will stick out like a sore thumb//

Unless you know Sanskrit, not as an ordinary person, but as an erudite scholar, you cannot say Sanskrit did this and that. First learn it. Then research in it. Become a linguist scholar and then, put up your categorical statements.You will be convincing. If not, you will be tilting at the windmills and your comments on Sanskrit, are quixotic.

//or the ignorant but also for parochial Tamils with their collective head stuck in mud.//

Self-description as you yourself is not a scholar, and don’t possess knowledge of Sanskrit. In my opinion, if an arguer is not a scholar, he can rely upon scholars for arguments. Vyasan and others are doing that and so, we must respect them.

I would have liked you to have relied upon any other scholar except Maha Periyavaal because he was duty bound to support Sanskrit and call it Deva Bhasha. Others would be more qualified to get quoted in our debate. To help you, I would suggest you go to Vyapuri Pillai. He was a great scholar in Sanskrit and held the same opinion as Maha Periyavaal, and for that, he was harshly criticised by the Tamil lobbyists, or to use your words, ignorant parochial Tamils with their heads in the mud :-)

Anonymous said...

சுவனப்பிரியர், கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை என்ற ஊர். வாகையடி பக்கீர் பாவா தர்கா அருகில் ஒரு சலூன். முஸ்லீம்கள் மட்டும் தான் அங்கே முடி வெட்ட முடியுமாம், இது போல முஸ்லீம்கள் அதிகமுள்ள இடலாகுடி என்ற இடம் அங்கும் முஸ்லீம்களின் தெரு ஒன்றில் உள்ள சலூனில் முஸ்லீம்கள் மட்டுமே முடி வெட்ட முடியும். ஒத்துக்கறேன், நீங்ளும் நல்லவங்க தான்.

Anonymous said...

நஜஸ் காபிர்களுடன் கைகுளுக்கலாமா என்ற விவாதம் முஸ்லிம்களிடம் ரொம்பா காலமாக இருக்கிறது. தொழுகைக்குமுன் காபிரைத் தொட்டால் தீட்டாகிவிடும். ஈரானில் காபிரும் முஸ்லிமும் ஒரே இடத்தில் குளிக்க முடியாது, தீட்டாகிவிடும்.