Followers

Thursday, August 14, 2014

இறைவனையும் சட்டி பானையையும் ஒப்பிட முடியுமா?

சாரங்கன்!

//ஒரு அற்புதத்தை பார்த்தல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் வரும். கடவுள் ஒரு அற்புதம். ஒரே மாதிரி இருந்தால் அதற்கு பெயர் mechanical. சட்டி பானையை பார்த்தால் தான் அனைவருக்கும் ஒரே அனுபவம் வரும்.//

சட்டி, பானையை நீங்கள் கண்களால் பார்க்கிறீர்கள். எனவே உடன் இதுதான் சட்டி, பானை என்று எவரும் ஒரு முடிவுக்கு வந்து விட முடியும். ஆனால் இறைவனும் அவ்வாறா? இறைவனை நீங்களோ அல்லது நானோ பார்த்திருக்கிறோமா?. இல்லையே..... இப்படி இறைவன் என்பவன் யார்? அவனது உருவம் எப்படி இருக்கும்? என்ற ஒன்றுமே தெரியாமல் ஆளாளுக்கு ஒரு உருவத்தை வரைந்து வைத்துக் கொண்டு 'இதுதான் கடவுள்' என்றால் அதுதான் அறிவுள்ள வாதமா?

அந்த கடவுளை பார்க்கின்ற சக்தி நமது கண்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று இந்து மத வேதங்களும், பைபிளும், குர்ஆனும் கூறுகிறது. ஒரு உருவத்தைக் காட் டி இதுதான் கடவுள் என்றால் நீங்கள் இந்து மத வேதங்களின் கருத்துக்கு முரணாக செல்கிறீர்கள் என்பது உங்களுக்கு விளங்கவில்லையா?

சாரங்கன் எப்படி இருப்பார் என்று எனக்குத் தெரியாது. இருந்தாலும் அவரை விட ஒரு அவலட்சணமா ன முகத் தோற்றத்தில் ஒருவரை வரைந்து 'இதுதான் சாரங்கன்' என்றால் சாரங்கனாகிய நீங்கள் கோபித்துக் கொள்ள மாட்டீர்களா?

மல ஜலத்தை சுமந்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதனுக்கே இவ்வளவு கோபம் வந்தால் அகில உலகங்களையும் படைத்து பரிபாலிக்கும் அந்த ஏக இறைவனுக்கு அவனது உருவத்தை சிதைத்தால் கோபம் வராதா?

//கடவுள் என்பது வெறும் பொருள் அல்ல அறிந்து கொள்வதற்கு. ஒரு மொழியால் ஒருவரை வர்ணித்து/அறிந்து விட முடியுமென்றால் அம்மொழியை விட அவர் சக்தி குறைந்தவர் தானே. கடவுள் என்பது ஒரு மிக பெரிய தத்துவம் அதை உங்களால் எம்மொழியை கொண்டும் விளக்க முடியாமல் போக வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர் எப்படி எல்லாவற்றையும் கடந்து இருப்பார். எல்லாவற்றையும் கடந்து இருப்பவரை மொழியோ, பார்வையோ, கேல்திரனோ, மனதோ ஆண்ட முடியாது.//

இறைவன் எப்படிப்பட்டவன்: அவனுக்குரிய இலக்கணங்கள் யாவை என்பதை எவராலும் அருதியிட்டு கூற முடியாது. அத்தகைய அறிவு நமக்கு கொடுக்கப்படவில்லை. ஆனால் உலக வேதங்களின் மூலமாக தான் யார்? தான் மனிதர்களிடம் எதிர்பார்ப்பது என்ன? தனக்குரிய இலக்கணம் என்ன? என்பதை ஆங்காங்கே இறைவனே கோடிட்டுக் காட்டுகிறான். படைத்த அந்த இறைவனே தன்னைப் பற்றி சொல்வதை நம்புவதா? அல்லது சாரங்கன் தனது கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு கடவுளை நம்புவதா? இறைவனை நேரிடையாக பார்த்த எவருமே இந்த உலகில் நம்மோடு இல்லை. அவ்வாறாயின் அந்த கடவுளை அறிந்து கொள்ளும் ஒரே வழி அந்த இறைவன் கொடுத்த வேதங்கள்தான்.

இறைவனை நேராக பார்க்க வேண்டும் என்று இறைதூதர் மோசே இறைவனிடமே கேட்டார். 'எனது ஒளியின் ஒரு பகுதியை அந்த மலையின் மீது பாய்ச்சுகிறேன். சக்தியிருந்தால் பார்த்துக் கொள்' என்று இறைவன் கூறி தனது ஒளியை மலையின் மீது பாய்ச்சினான் இறைவன். அந்த மலை சுக்கு நூறாக தெரித்தது. மோசேயும் அதிர்ச்சியில் மூர்ச்சித்து விழுந்ததாக குர்ஆனும் மற்ற பல வேதங்களும் கூறுகின்றன. ஒரு இறைத் தூதருக்கே இந்த நிலை என்றால் நீங்களும் நானும் எம்மாத்திரம்.

அடுத்து கடவுளை தேடி எங்கும் அலைய வேண்டாம். உனது அருகில் இருக்கும் மனதர்களில் இறைவனை பார்க்கலாம். அவர்களுக்கு உதவி செய்வதின் மூலம் எனது பொருத்தத்தை அடைந்து கொள்ளலாம் என்றும் குர்ஆன் கூறுகிறது. எனவே கடவுளை தேடி எங்கும் அலையாமல் அந்த கடவுள் கொடுத்த வேதங்களின் அடிப்படையில் அந்த இறைவனை புரிந்து கொண்டு நல்ல செயல்களை செய்து வந்தாலே போதுமானது ஒரு மனிதனுக்கு.

குர்ஆனின் தாய் என்று கூறப்படும் 'அல் ஃபாத்திஹா' அத்தியாயத்தில்

'அர்ரஹ்மானிர் ரஹீம்' தமிழில் 'அவன் அளவற்ற அருளாளன்: நிகரற்ற அன்புடையோன்'

என்று இறைவனின் பண்புகளாக கூறப்படுகிறது. இதில் நாம் ஆராயலாம். அந்த இறைவனின் அருள் எத்தகையது: அந்த இறைவனுடைய அன்பு எத்தகையது என்பதை விவரித்துக் கொண்டே செல்லலாம். முடிவே இல்லாத ஒன்று. இதை இஸ்லாம் அனுமதிக்கிறது.

மேலும் இந்த வேதங்களின் துணை இல்லாமல் நீங்கள் இறைவனை ஆராய புகுந்தால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பவும் வந்து சேருவீர்கள். அந்த அளவுதான் உங்களுக்கு அறிவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக கற்பனை செய்ததால்தான் தெருவுக்கு ஒரு கடவுள் நமது நாட்டில் இருக்கிறது. இது போன்று பல உருவங்களை வைத்து வணங்கும் போது கிடைக்கும் நிம்மதியை விட உருவமில்லாமல் ஒரு நாளைக்கு ஐந்து நேரம் தொழும் எங்களால் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை நினைக்க முடிகிறதே!

10 comments:

Anonymous said...

ennaithavira vera yaraiyavadhu vanangina naragamnu sorravaru kadavul illa.kadavulnu oruvar iruntha ippadi keeltharama sollamattar.islathhile irayacham mattume irukku.anba patri oru vartha illa.

Unknown said...

//மல ஜலத்தை சுமந்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதனுக்கே இவ்வளவு கோபம் வந்தால் அகில உலகங்களையும் படைத்து பரிபாலிக்கும் அந்த ஏக இறைவனுக்கு அவனது உருவத்தை சிதைத்தால் கோபம் வராதா?//

அட முட்டாளே. தன்னுடைய உருவம் சரியாக இல்லை என்று மனிதர்கள் மீது கோபம் கொள்ளும் அளவுக்கு பலஹீனமானவனா உங்கள் கடவுள். வெட்க கேடு. இவுருதான் உலகுக்கெல்லாம் கடவுளாம் அவருக்கு ஒரு தூதராம்

Unknown said...

//மற்ற பல வேதங்களும் கூறுகின்றன//

மற்ற வேதங்கள் கூறின, அதை காப்பி அடித்தது, சிம்பிள்

Anonymous said...

இறைமையும் ஆன்மீகமும் முஸ்லிம்களுக்கு புரியாத விசயம். எதற்காக உங்களை வருத்திக் கொள்கிறீர்கள். பக்தி யோகம் , யான யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் என்று பிரிக்கப் பட்டிருக்கிறது. பக்தி யோகத்தை பின்பற்றுபவர்கள் உருவ வழிபாடு செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஓரிறைக் கொள்கையை போதித்தவர்கள்தான் , உருவ வழிபாட்டை எப்படி செய்வது என்பதையும் போதித்திருக்கிறார்கள். எங்களுக்கே பிரச்சனை இல்லாதபோது உங்களுக்கு என்ன பிரச்சனை ? இறைவன் கோபம் கொண்டு விடுவார் என்ற சிறுபிள்ளைத்தனமான வாதத்தை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்.

Anonymous said...

சுவனப்பிரியர், உங்கள் கடவுள் என்ன கவர்ச்சி நடிகையா? அவள் தான் தன்னுடைய படத்தை சிதைத்தால் கோபப்படுவாள். உங்கள் கடவுளும் அதை போலவே நடந்து கொள்கிறாரே.

UNMAIKAL said...

காரி உமிழுங்கள்! Part 1.


நம் இளைஞர்கள் எவ்வித கடவுள் உருவத்தைக் கண்டாலும் காரி உமிழப் பழகிக் கொள்ள வேண்டும்.

உருவக் கடவுளை நாம் இதுகாறும் பார்ப்பான் பேச்சைக் கேட்டுக் கொண்டு வணங்கி வந்ததன் பயனாகவே நாம் சூத்திரர்களாக, நம் தாய்மார்கள் சூத்திரச்சிகளாக இருந்து வர நேரிட்டிருக்கிறது என்பதை நம் இளைஞர்களும், தாய்மார்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சர்வ சக்தியுள்ள தயாபரனான கடவுள் என்பதை சாணி உருண்டையாக ஆக்கி வைத்திருப்பது மகா மகா அயோக்கியத்தனமாகும்.

குழவிக் கல்லாக ஆக்கி வைத்திருப்பது அதைவிட அயோக்கியத்தனம் ஆகும். அக்குழவிக் கல்லை வைத்துக் கொண்டு அதன் பேரால் நம்மை ஏமாற்றிக் காசு பறித்து வாழ்ந்து வருவது வேறு எந்த நாட்டிலும் இல்லாத மகா மகா பித்தலாட்டம் ஆகும் என்பதை நீங்கள் உணர்ந்து, எங்கு எங்கு கடவுளைச் சாணி உருண்டையாக குரங்கு கழுகாக கல்லுருவமாகப் பார்த்தாலும் அதை மதிக்கக் கூடாது. உண்மையாகச் சொல்கிறேன்

- இதற்காக உண்மையாகக் கடவுள் உங்கள் மீது கோபித்துக் கொள்ளமாட்டார்.

இப்போது கல்லில் அவர் இருப்பாரானால் உண்மையாக அவர் சந்தோஷமே கொள்வார். தன்னைக் கல்லாக்கி வைத்துள்ள கபோதிகளின் வாழ்வுக்கு கேடு வந்துவிட்டது என்பதை அறிந்து நிச்சயம் அந்தக் கல்லில் கடவுள் இருக்கமாட்டார். எனவே கலங்காமல் அதை வெறுங்கள். கடவுள் ஒருபோதும் சாணி உருண்டையில் வந்து, கல்லில் வந்து தங்கும் அளவுக்கு ஈன நிலைக்கு வந்துவிடமாட்டார்.

இந்தப் பித்தலாட்டக்காரர்கள் தான் அவரைக் கல்லாக்கி விட்டு அவர் பேரால் நம்மைக் கொள்ளையடித்து வாழ்ந்து வருகின்றனர்.

எனவே இனியும் கல்லைக் கடவுளென்று நம்பி மோசம் போகாதீர்கள்!

சர்வ சக்தி படைத்தக் கடவுள் சின்னஞ்சிறு குழவிக் கல்லில் தான் வந்து புகுந்திருக்கிறார் - என்று பார்ப்பான் சொன்னால், "இருந்தால் இருக்கட்டும்; அவர் அவருடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கட்டும்; நாங்கள் எங்கள் வேலையைப் பார்த்துக் கொள்கிறோம்" என்று கூறிவிடுங்கள்.

கொஞ்ச காலத்தில் அந்தப் பார்ப்பானும், அத்தகைய பித்தலாட்டத்தை கைவிட்டு விடுவான்.

கடவுளை நம்பி கண்ட பார்ப்பானுக்கு காசு கொடுத்து அவன் வயிற்றை பலூன் மாதிரி உப்ப வைத்துக் கொண்டிருப்பது முட்டாள்தனமான செயல் என்பதையும், அதனால் நாமும் நம் பெண்டு பிள்ளைகளும் மடையர்களாகி வருகிறோம். சூத்திரர்களாகி வருகிறோம், அடிமைகளாகி வருகிறோம் என்பதையும் உணர்ந்து உருவக் கடவுளை ஒழிக்க உறுதி கொண்டெழுங்கள்.

நல்ல வேலையாக நமது மந்திரியாருக்குக் கொஞ்சம் புத்தி வந்திருப்பது அதிசயமாகவே இருக்கிறது. எந்த மனிதனும் இனி கடவுளைப் போன்று வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கக்கூடாது என்று உத்தரவு போட யோசித்து வருகிறாராம். உத்தரவு போடுவாரோ அல்லது பார்ப்பனர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி அதைக் கைவிட்டு விடுவாரோ தெரியவில்லை. அம்மாதிரி ஒரு யோசனையாவது தோன்றியதே அந்த அளவுக்கு திருப்தியே!

கடவளைப்போல் மனிதன் நடிக்கும் ஈனச் செயல் இந்நாட்டில் தான் இருந்து வருகிறது. அதுவும் இழிந்த – விவஸ்தை அற்ற இந்த இந்து மதந்தான் இதையெல்லாம் அனுமதித்துக் கொண்டு வருகிறது.

முஸ்லீம்கள், நபிநாயகத்தைப் போல்கூட ஒருவன் நடிக்கப் பொறுக்க மாட்டார்கள் - அனுமதிக்க மாட்டார்கள். அவர் உருவம் புத்தகத்தில் வெளி வருவதற்குக் கூட அவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். தவறி வெளிவரின் கிழித்தெறிவார்கள். தாம் போற்றும் தம் தலைவனையே உருவத்தால் வழிபடுவது அத்தலைவனுடைய உயர் தத்துவத்தை அவமதிப்பதாகும். இழிவுபடுத்துவதாகும் என்று உண்மையாகவே நம்புகின்றனர்.

ஆனால் நம்மவர்களோ தங்கள் தங்கள் நினைப்பிற்கேற்ப தங்கள் தன்மைக்கு, சுயநலத்துக்கு ஏற்ப பல கடவுள்களை கிருஷ்ணன் என்றும், கோவிந்தன் என்றும், சிவன் என்றும், பிள்ளையார் என்றும், முருகன் என்றும், மும்முகத்தோன் என்றும், சங்கரன் என்றும் - பல உருவங்களில் சிருஷ்டித்து விட்டு, ஒவ்வொன்றிற்கும் கழுதை, குதிரை, கருடன், எருது, எலி, பூனை என்று பல வாகனங்களையும், பார்வதி, லஷிமி, சரஸ்வதி, வள்ளி, தெய்வானை என்ற பல மனைவிமாரையும் கற்பித்து விட்டு அனைத்துக்கும் கும்பிடுப் போட்டு தனித்தனி அர்ச்சனை செய்யச் செய்து பார்ப்பனர் தம் உடல் கொழுக்கச் காசு பணம் கொள்ளை அடித்து வருகின்றனர்.

ஒரு கிறிஸ்துவ வேதத்திலோ, இஸ்லாம் வேதத்திலோ காமக் களியாட்டத்திற்கு இடமே இராது.

அக்கடவுள்கள் காமக்களி, துர்நடத்தை, விபசாரம் முதலிய இழி காரியம் செய்ததாக இருக்காது.

அனைத்தும் ஒழுக்கத்தையும், மக்களிடம் எதிர்பார்க்கும் நீதியையும் ஒட்டியதாகவே இருக்கும்.

ஆனால் இந்து மத, வேத, புராண இதிகாசங்களை எடுத்துக் கொண்டாலோ கலை, இலக்கியம், பக்தி வழி திருவிளையாடல், அனைத்தும் காமக்களிப்பு நிரம்பியனவாகவே இருக்கும்.


Continued .......

UNMAIKAL said...

காரி உமிழுங்கள்! Part 2.

ஆனால் இந்து மத, வேத, புராண இதிகாசங்களை எடுத்துக் கொண்டாலோ கலை, இலக்கியம், பக்தி வழி திருவிளையாடல், அனைத்தும் காமக்களிப்பு நிரம்பியனவாகவே இருக்கும்.

கீதை போற்றும் கிருஷ்ணனை – சினிமாக் காட்சியில் கோபிகளோடு கொஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். தெய்வானை புருஷனான சுப்பிரமண்யனை – தினை காக்கும் வள்ளியிடம் கெஞ்சி கொஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்ப்போம்.

ஆனால் கிருஸ்துவைவோ, முகம்மது நபியையோ இம்மாதிரி காண முடிவதில்லை – ஏன்? அவர்களெல்லாம் லட்ஷிய புருஷர்களாக – ஒழுக்கத்தின் முதல்வர்களாக சிருஷ்டிக்கபட்டவர்கள்.


நம் கடவுள்களெல்லாம் அனாகரீக மக்களால், மிருகப் பிராயத்தரால், பித்தலாட்டக்காரர்களால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். எனவேதான் அவர்கள் முன்னுக்குச் செல்ல, அறிவுலகு நோக்கிச் செல்ல நாம் பின்னுக்கு முட்டாள்தனத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம்.

இதற்கு இப்போதேனும் முற்றுப்புள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். கடவுளை நாம் உருவத்தால் கற்பித்துக் கொள்ள கூடாது. கடவுளை மற்ற மதத்தவர்களைப் போல்தான் மனதில் யோக்கியனாக, ஒழுக்கமுடையவானாக, அறிவுடையயோனாக எல்லாவற்றையும் விட முக்கியமாக ஒழுக்கமும் விஞ்ஞான அறிவும் உடையவனாக கற்பித்துக் கொள்ள வேண்டும்.

அயோக்கியனாக, பித்தலாட்டக்காரனாக தற்போது நம் மனதில் பார்ப்பானால் சிருஷ்டி செய்யப்பட்டுள்ள கடவுளை மூடநம்பிக்கைக்கு இருப்பிடமாயுள்ள இப்போதைய கடவுளை நம் மனத்திலிருந்து நாம் இன்றே கையை விட்டு வாந்தி எடுத்து விட வேண்டும்.

கடவுள், படக்காட்சியில் தன் மனைவியுடன் அல்லது கூத்தியுடன் கொஞ்சிக் கொண்டிருக்க நாம் அதைப் பார்த்து "கிருஷ்ண லீலை" என்று கை கட்டி நகைத்துக் கொண்டிருக்கும் மடத்தனம்,

அத்தகைய இழி செயல் படைத்த கடவுளரை நம்பி நம் காசு பணத்தைக் கரியாக்கி வரும் கயமைத்தனம் இன்றோடு ஒழிய வேண்டும்.

திராவிடனுக்கு இன்று இன்றியமையாது வேண்டப்படுவது மூட பக்தியல்ல.விஞ்ஞானம், அறிவு தன்மான உணர்ச்சி இவையின்றேல் பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பணம் இல்லை!

அற்புத அதிசயங்கள் நிறைந்த 1949 - ஆம் ஆண்டிலும் நாம் சூத்திரர்களாக இருந்து கொண்டிருப்பதும், குழவிக்கல்லை நம்பி குருக்களுக்கு கும்பிடு போட்டுக் கொண்டிருப்பதும் முழு முட்டாள்தனமாகும்.

அந்நிய நாட்டினர் சந்திர மண்டலத்திற்கு சேதி அனுப்பிக் கொண்டிருக்க,

நாம் செத்துப் போன நம் தகப்பனுக்காக பார்ப்பானிடம் இங்கு அரிசி, பருப்பு அனுப்பி அழுதுகொண்டிருப்பது அறிவுடைமை ஆகாது.

கடவுளுக்கு உங்கள் அன்பை, ஒழுக்கத்தைக் காட்டுங்கள்! உங்கள் பணத்தைக் கொடுத்து நாமம், சாம்பல் அடித்துக் கொள்வது கடவுளை மடையன், அயோக்கியன் என்று காட்டுவதேயாகும்.

இப்படிப்பட்ட முட்டாள்தனத்தை விட்டு முன்னேற்றத்துக்கு – ஒழுக்கத்துக்கு ஆளாக வழிகோளுங்கள். நீங்களாக உங்கள் முன்னேற்றத்திற்கு வழி தேடிக் கொள்ளாதவரை அரசாங்கம் உங்களை முட்டாள்தனத்திலிருந்து விடுவிக்காது.

மதச்சார்பற்ற சர்க்கார் என்று வெளியுலகம் மதிக்கக் கூறிக் கொண்டிருந்தாலும் மத சம்பிரதாயப்படி ஹோமம் பூஜை தீபாராதனை செய்துதான் கப்பல் தண்ணீரில் விடப்பட்டது?!

சுயராஜ்யம் கூட நல்ல நேரம் பார்த்து புகுத்தப்பட்டது.

வகுப்புகளை ஒழிக்கும் சர்க்கார் என்று பிரசாரம் செய்யப்படினும், கடைவகுப்புக்கு மாத்திரம் சலுகைக் கொடுக்கும் போது தான் இது கவனிக்கப்படுமே ஒழிய, மற்ற வகுப்புகள் நிலை கவனிக்கப்படுமே ஒழிய, மற்ற வகுப்புகள் நிலை கவனிக்கப்படமாட்டாது – மற்றபடி என்று சொல்லிவிட்டது.

ஆனால் "வகுப்பு இருக்கக் கூடாது" என்று உத்தரவிட துணிவு பிறக்கவில்லை – பிறப்பிக்கப் பயப்படுகிறது.

ஆகவே நீங்கள் அறிவுள்ளவர்களாக வாழ இஷ்டப்பட்டால் மூட நம்பிக்கைகள் நிறைந்த புராண காரியங்களைக் கைவிடுங்கள். வகுப்புள்ள மதத்தை விட்டு வெளியேறுங்கள்.

புராணக் கதைகளைக் கேட்பதை விட்டு ஒதுங்கி நில்லுங்கள்.

புராணக் காட்சிகளைக் காண்பதில் வெறுப்புக் கொள்ளுங்கள்!

இராமாயணப் பிரசங்கம் என்றால், பெரிய புராணப் பிரசங்கம் என்றால் புரிந்தாலும், புரியாவிட்டாலும் தலை வணங்கி கேட்டுக் கொண்டிருப்பது என்கிற தலைமுறை தத்துவார்த்தமான, மானமற்ற முட்டாள்தனத்தை விட்டொழியுங்கள்!

(26-12-1948 அன்று சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியதில் ஒரு பகுதி 31-12-1948 "குடிஅரசு" இதழில் வெளியானது. "பெரியார் களஞ்சியம்" தொகுதி:2 … பக்கம்:222)

Source: http://idhuthanunmai.blogspot.sg/2007/12/blog-post_633.html

UNMAIKAL said...

வெட்கக்கேடே உன் பெயர்தான் இந்து மதமா?

திருநீறு!

வாதவூர் புராணம் பிரமோத்தா காண்டம் திருநீற்றின் பெருமையை அடேயப்பா, எப்படியெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறது.

அதிக தூர்த்தனாக இருந்த ஒரு பிராமணன் ஒரு இராத்திரி, ஒரு புலை மாதுடன் வியபசாரம் (விபச்சாரம்) பண்ணிக் கொண்டிருக்கையில், அம்மாதின் கணவன் கண்டு, அத்தூர்த்தனை வாளினால் வெட்டிக் கொன்று, வேலிக்கப்பால் எறிந்தானாம்.

அந்நேரம் பசியால் வருந்தி குப்பைச் சாம்பலில் புரண்டிருந்த ஒரு நாய், அப் பிராமணப் பிணத்தைக் கண்டு அதன் மேல் ஏறி, மிதித்துக்கொண்டு தசையைக் கடித்து இழுத்துத் தின்றது. நாய் காலிலே ஒட்டிக் கொண்டிருந்த குப்பைச் சாம்பல் பிராமணப் பிணத்தின்மேல் படிந்ததால் சிவ கணங்கள் வந்து உபசரித்து, புட்ப விமானத்தில் ஏற்றுஞ் சமயம், பிராமணனின் தூர்த்த நடத்தைக்காக அவனைத் தண்டிக்க யம தூதர்கள் வந்து சேர, அவர்களை சிவகணங்கள் விரட்டியத்துத் துரத்திவிட்டு, காமார்த்த பிராமணனை சிவலோகத்தில் கொண்டு போய்ச் சேர்ந்தார்கள்.

- இதுதான் திருநீற்றின் மகிமை.

மாற்றான் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டவன் அந்தப் பார்ப்பான். செத்துப்போன அந்தப் பார்ப்பான் உடலை நாய் கிழித்துத் தின்றதாம். நாயின் கால்களில் ஒட்டிக் கொண் டிருந்த அந்தச் சாம்பல் சாதாரணமானது இல்லையாம் - அது திருநீறாம். அந்தத் திருநீறு அந்த அயோக்கியனின் உடலில் பட்டதால், அவன் செய்த பாவங்கள் தொலைந்து ஓடிப் போய்விட்ட தாம். யம தூதர்கள் நரகத்துக்குக் கொண்டு போகத்தான் வந்திருப்பார்கள் - அவர்களை சிவ கணங்கள் துரத்தியடித் தார்களாம்.
பஞ்சமா பாதகங்களைச் செய்தாலும் பாவமில்லை; பாவங்களைத் தீர்க்க மாட்டுச் சாணியான சாம்பலை - திருநீறையணிந்தால் போதும் என்ற எண்ணம் படிந்த நாட்டிலே ஒழுக்கத்துக்குத் தான் என்ன மரியாதை?

ஆமாம், இந்தப் பீடிகை எதற்கு? காரணம் இல்லாமலா?

கொலைக் குற்றத்தின் கீழ் நடமாடிக் கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு நாடு எங்கும் பவள விழாவாம் - ஜெயந்தியாம் - அக்கிரகாரங்களில் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது.

சென்னை சிறீகிருஷ்ணகான சபாவில் அவருக்கு நடத்தப்பட்ட பவள விழா ஜெயந்தியில் திருவாய் மலர்ந்துள்ளார், கேளுங்கள், கேளுங்கள்!

நெற்றிக் குறியீடுகளான திருநீறு, திருநாமம் ஆகியவற்றிற்கு நம் தலை
யெழுத்தை மாற்றும் சக்தி உண்டு என்று உபதேசம் செய்துள்ளார்.

(காமகோடி செப்டம்பர் 2010).
நெற்றி வழிய சாம்பலை (திருநீறை) ஜெயேந்திர சரஸ்வதி அணிவதன் மர்மம் நன்னாவே புரிகிறது. சங்கர் ராமனை தீர்த்துக் கட்டினாலும் - அனுராதா ரமணனின் மார்பகங்களைப் பிடித்தாலும், அந்தப் பாவங்கள் எல்லாம் அவர் நெற்றித் திருநீற்றின் முன் எம்மாத்திரம்!

ஒழுக்கக்கேட்டை உரம் போட்டு வளர்ப்பதற்காகவே ஒரு மதம் - பிராயச்சித்தங்கள் - திருநீறு, கோபி சந்தனம், குங்குமம்!
வெட்கக்கேடே உன் பெயர்தான் இந்து மதமா?
--------------- மயிலாடன் அவர்கள் 15-9-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

http://thamizhoviya.blogspot.com/2010/09/blog-post_16.html

UNMAIKAL said...

CLICK >>>> பன்றியுடன் போகம் செய்யும் கடவுள்! தீபாவளிபற்றி சிந்தித்துப் பார்! இது தீபாவளி கதை. மிகவும் அதிசயமானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத்தன்மையும் பொருந்தியதுமாகும். <<<< TO READ

.

UNMAIKAL said...

முஸ்லிமும், வெள்ளைக்காரனும் இப்படியா கடவுள் வைத்திருக்கிறான்?

உலகத்திலேயே அறிவுத் துறையில் நாம் மிகப் பின்னடைந்து இருக்கிறோம். சம்பாதிப்பதில் பிள்ளை பெறுவதில் மூட்டை கட்டுவதில் வேண்டுமானால் நீங்கள் புத்திசாலிகளாக இருக்கலாம்.
வெள்ளைக்காரன் இன்றைக்கு பகுத்தறிவுவாதியாக இருக்கிறானே, அதனாலே கடவுள் போய் விடுமென்று யாரும் பயப்பட வேண்டாம். அறிவுப்படி அவன் ஒரு கடவுளை வைத்திருக்கிறான். அதுபோல வேண்டுமானால், நீங்களும் வைத்துக் கொள்ளுங்கள்.

கிறித்துவர், முஸ்லிம்கள் தொழும் கடவுள், நம்பிக்கையை அடிப் படையாகக் கொண்டது. ஒழுக்கம், அருள், கருணை இவைகளை உடையது. அது தனக்கு என்று ஒன்றும் வேண்டாதது என்று அவன் சொல்லுகிறான்.

ஆனால், நீ என்ன சொல்லுகிறாய்? நெருப்புக் குச்சிகள் மாதிரி, செங்கல் மாதிரி லட்சம், பத்து லட்சக்கணக்கில் ஏராளமாக கடவுள்களை வைத்திருக்கிறாய்.

ரோடு ஓரத்தில் படுத்திருக்கும் குழவிக் கல்லை நிமிர்த்தி வைத்தால் அதைக் கடவுள் ஆக்கி விடுகிறாய்! மாட்டுச் சாணியை கொழுக்கட்டையாட்டம் பிடித்து வைத்தால் அது உன் கடவுள்! மைல்கல், ஃபர்லாங்குகல் எல்லாம் கூட கடவுள்கள் ஆக்கப்பட்டிருக்குமே, நாங்கள் இல்லா விட்டால்!

சொடுக்கி பார்க்கவும் >>>>

1. மைல்கல், ஃபர்லாங்குகல் எல்லாம் கூட கடவுள்கள்


Source: http://thathachariyar.blogspot.sg/2011/02/blog-post_08.html

>>>2. மைல்கல், ஃபர்லாங்குகல் எல்லாம் கூட கடவுள்கள்

Source: http://thathachariyar.blogspot.sg/2011/02/blog-post_08.html

>>>> 3. பகவானுக்கும் பசிக்கும். குளிரும். திருஷ்டி படும். சளி பிடிக்கும்.

Source: http://thathachariyar.blogspot.sg/2010/12/blog-post_16.html


முஸ்லிமும், வெள்ளைக்காரனும் இப்படியா கடவுள் வைத்திருக்கிறான்?

உன் கடவுளுக்கு பெண்டாட்டி, பிள்ளைக்குட்டிகள் திருட்டு, புரட்டு, கொலை, கொள்ளை இத்தனையும் தேவைப்படுகிறதே?

உன் கடவுள் என்றால் 1,000 முகமுடையாள், 2,000 கையுடையாள் என்று அளக்கிறான்!

நாமும் மடப்பசங்கள் என்பதால் பார்ப்பான் எதைச் சொன்னாலும் கேட்டுக் கொள்ளுகிறோம்.

ஒவ்வொரு உருவத்திற்கும் ஒவ்வொரு முட்டுக்கல் அடிக்கிறாங்களே, ஒண்ணும் வேண்டாதவர் கடவுள் என்றால் அவருக்கு மனைவி எதற்கு? திருமணம் எதற்கு? பிள்ளைக் குட்டிகள் எதற்கு? ஆறு வேளை பூசை எதற்கு? யாரும் கேட்பதில்லையே?

வெள்ளைக்காரன் இப்படியெல்லாம் கட்டிக் கொண்டா அழுகிறான்? நீ என்ன அவனைவிட அறிவாளியா?

உன் கடவுளுக்கு ஒழுக்கமிருக்கிறதா? 1,000 வைப்பாட்டிகளை வைத்திருந்தது என்று எழுதி வைத்திருக்கிறாயே, அந்தக் கடவுளுக்கு மானம் வேண்டாமா? உன் கடவுள்கள் சாகிறதே, பிறக்கிறதே! இப்படிப்பட்ட தன்மையில் நாம் இருக்கிறோம். உனக்கு என்னென்ன வேண்டுமோ, அதெல்லாம் கடவுளுக்கு வேண்டும் என்று சொல்லி விடுகிறாய். அவ்வளவு முட்டாள்களாக இருக்கிறோம்.

கருணாமூர்த்தி உன் கடவுள் என்றால் கொடுவாளும், அரிவாளும், வேலும், வில்லும், ஈட்டியும், சூலாயுதமும், மழுவும், கொழுவும், கொட்டாபுளியும் எதற்கு? இது காட்டுமிராண்டிப் பசங்க சங்கதி என்பதைத் தவிர வேறு என்ன?

கள்ளு, சாராயம், கஞ்சா, அபினி, கொள்ளை, கொலை இவ்வளவும் உன் கடவுளுக்கு தேவை. அப்புறம் திருட்டுப் பசங்களுக்கும், கடவுளுக்கும் என்ன வித்தியாசம்?

யோசித்துப் பாருங்கள்.
இந்தப் பார்ப்பானுங்க நடத்துகிற பத்திரிகைகளில் புராண, இதிகாச ஒழுக்கமற்ற ஆபாசக் கதைகளைத் திணித்து விஷமிட்டும், அதை நம்முடைய மனத்தில் புக வைத்து விடுவான். மற்றவர்கள் இக்கருத்துகளைச் சொல்ல மாட்டார்கள். உயிருக்குத் துணிந்து இருக்கிற எங்களால்தான் இது போன்ற காரியங்களைச் செய்திட முடியும்.

------------------முசிறியில் ஆறு ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - "விடுதலை" 20.9.1964

Source: http://thamizhoviya.blogspot.sg/2012/06/blog-post_14.html