Followers

Saturday, August 02, 2014

அப்போ வடக்கு தெற்கு திசைகளின் அதிபதி யாருங்கோ?

அப்போ வடக்கு தெற்கு திசைகளின் அதிபதி யாருங்கோ?

ஹானஸ்ட் மேன்!...

//1) அவனே உங்களுக்காக பூமியை விரிப்பாக்கினான். ( 2 : 21 -22)
ஒரு பெட் சீட்டை விரிக்கலாம். மடிக்கபட்டுள்ள ஒரு வரை படத்தை (ப்ளூ பிரிண்ட் )விரிக்கலாம் . ஒரு பந்தை விரிக்க முடியுமா? ஒரு கோலி குண்டை விரிக்க முடியுமா? ஒரு பந்தை விரித்தால் என்னாகும்? தட்டையாகிவிடும். பூமியை விரிப்பாக்கினான் என்றால் என்ன அர்த்தம்? பூமி உருண்டை என்பதை நபி காலத்தில் கண்டுபிடிக்கபடவில்லை. அவருக்கு பின்னர்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்னால் பூமியை தட்டை என்றுதான் அனைவரும் கருதினர்.//

உங்கள் கேள்விக்கு பதில் மிக விரிவாக கொடுக்க வேண்டும். நான் கொடுக்கும் லிங்கில் சென்று விரிவாக பார்த்துக் கொள்ளுங்கள். அதன் கீழே வரும் பின்னூட்டங்களிலும் மேலும் விபரம் இருக்கிறது.

http://suvanappiriyan.blogspot.com/2012/03/blog-post_13.html

//(2) இதயங்கள் தொண்டைகளை அடைத்துகொண்டன ( (33 : 9 -11)
துக்கம் தொண்டையை அடைத்துகொண்டதாக கேள்விபட்டுள்ளேன். இதயம் தொண்டையை அடைத்துகொண்டதா? அரே, அல்லா!//

இந்த வசனம் போர்க்கள காட்சியை விவரிக்கிறது. திடீரென உங்களை ஒரு பயம் ஆட்கொண்டால் உடல் முழுக்க ஒரு சிலிர்ப்பை உணர்வீர்கள். பயம், துக்கம், அன்பு போன்ற உணர்வுகளின் பிறப்பிடம் நமது இதயம் தானே! அவ்வாறு இது போன்ற உணர்வுகள் அளவுக்கதிகமாக ஆகும் போது தொண்டைக் குழிகளை அடைக்கும். பலர் உடனே அந்த நேரத்தில் தண்ணீரை தேடுவதும் அதனால்தான். நீங்கள் நிகழ்வைச் சொல்கிறீர்கள். குர்ஆன் அந்த நிகழ்வின் மூலத்தை சொல்கிறது.

//(3) அவன் கிழக்கு மேற்கு திசைகளின் அதிபதி ஆனான் (73 : 1 -14)
அப்போ வடக்கு தெற்கு திசைகளின் அதிபதி யாருங்கோ?//

திசைகள் சூரியனின் உதயத்தைக் கொண்டுதான் நமது வசதிக்காகக் கணிக்கப்படுகிறது. ஒருவருக்கு சூரியன் உதிக்கும் திசை கிழக்கு. அதே நேரத்தில் அந்த சூரியன் மறையும் திசை மேற்கு. பூமி சுழலும் போது பூமியின் அனைத்து பாகமும் இந்த வரையறைக்குள் வந்து விடும். வடக்கு தெற்கு என்பது அளவைகளுக்காக நாமாக வைத்துக் கொண்டது.

மேலும் ஒரு மெகா சைஸ் உலக உருண்டையில் பல இடங்களிலும் பலரையும் நிற்க வைத்து 'கிழக்கு எது? மேற்கு எது?' என்று கேளுங்கள். பல திசைகளைக் காட்டுவார்கள். ஏனெனில் சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் இடங்கள் ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இது சம்பந்தமாக வந்த வேறு சில வசனங்கள்.

37:5 வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்!

55:17 இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே! இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
'கிழக்குகளுக்கும் மேற்குகளுக்கும் உரிய இறைவன் மேல் ஆணையாக!'
-70:40
இந்த வசனங்களில் இறைவன் திசைகளை பன்மையில் கூறியிருப்பதையும் கவனியுங்கள்.

//(4) அந்நாளில் பூமியும் மலைகளும் நடுங்கும் (73 : 1 – 14)
பூமியில்தான் மலைகள் உள்ளன.பூமி தனியாக மலைகள் தனியாக நடுங்குமா?//

அந்த மலைகளை பூமி முழுக்க நிறுவியதே அந்த பூமியின் கீழடுக்குகளும் மேலடுக்குகளும் நகர்ந்து விடாமல் இருப்பதற்காகவே! அந்த நாளில் முளைகளாக நாட்டப்பட்ட அந்த மகைளும் மண் குவியல்களாக மாறும். பூமியின் மற்ற பாகங்களும் ஆட்டம் காணும். நிலப்பரப்பு நகர்ந்து விடாமல் இருக்க முக்கிய காரணமே மலைகள் தான் என்கிறது அறிவியல்.

//(5) முதுகெலும்புக்கும் நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்து (விந்து) வெளியாகிறது (86 : 1-17)
மேற்சொன்ன 2 க்கும் இடையில்தான் testicle உள்ளதா?//

//(6) களிமண்ணிலிருந்து மனிதனை நாம் படைத்தோம் (15 : 26)
அவன் மனிதனை ஒரு துளி விந்திலிருந்து படைத்தான் (18 : 4)
இப்லிசை நீ நெருப்பினால் படைத்தாய் (38 : 69 : 85)
உங்களை அற்பமான நீரிலிருந்து படைத்தான் (76 : 1 -3 )
உண்மையில் எங்களை எதிலிருந்துதான் படைத்தாய்?//

இரண்டு கேள்விகளுக்கும் பதில் எனது இந்த பதிவில்.

http://suvanappiriyan.blogspot.com/2013/04/blog-post_25.html

4 comments:

Anonymous said...

"நிலப்பரப்பு நகர்ந்து விடாமல் இருக்க முக்கிய காரணமே மலைகள் தான் என்கிறது அறிவியல்."

இதென்ன குரான் அறிவியலா ?

Anonymous said...

"முதுகெலும்புக்கும் நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்து (விந்து) வெளியாகிறது"

அது வேறு ஒன்றும் இல்லை. அந்த கால கட்டத்தில் ஹிப்போகிரீட் சொன்னதுதான் சரியான அறிவியலாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர் செய்த அறிவியல் பிழைகளில் இதுவும் ஒன்று. முகமது அதை குரானில் இணைத்ததால் பிரச்சனை ஆகிவிட்டது. இது போன்று நிறைய உள்ளது குரானில். என்ன செய்வது முகமதையும் அல்லாவையும் காப்பாற்றியாக வேண்டுமே. அதற்காக முஸ்லிம்கள் தலைகீழாக தண்ணீர் குடிப்பது பாவமாகத்தான் இருக்கிறது.

ஆனந்த் சாகர் said...

//அந்த மலைகளை பூமி முழுக்க நிறுவியதே அந்த பூமியின் கீழடுக்குகளும் மேலடுக்குகளும் நகர்ந்து விடாமல் இருப்பதற்காகவே!//

நல்ல நகைச்சுவை!

//அந்த நாளில் முளைகளாக நாட்டப்பட்ட அந்த மகைளும் மண் குவியல்களாக மாறும். பூமியின் மற்ற பாகங்களும் ஆட்டம் காணும்.//

அப்படி ஒரு நாள் வரப்போவதில்லை.

//நிலப்பரப்பு நகர்ந்து விடாமல் இருக்க முக்கிய காரணமே மலைகள் தான் என்கிறது அறிவியல்.//

பி.ஜெ.வின் அறிவியலைத்தானே குறிப்பிடுகிறீர்கள்?

ஆனந்த் சாகர் said...

//

//(2) இதயங்கள் தொண்டைகளை அடைத்துகொண்டன ( (33 : 9 -11)
துக்கம் தொண்டையை அடைத்துகொண்டதாக கேள்விபட்டுள்ளேன். இதயம் தொண்டையை அடைத்துகொண்டதா? அரே, அல்லா!//

இந்த வசனம் போர்க்கள காட்சியை விவரிக்கிறது. திடீரென உங்களை ஒரு பயம் ஆட்கொண்டால் உடல் முழுக்க ஒரு சிலிர்ப்பை உணர்வீர்கள். பயம், துக்கம், அன்பு போன்ற உணர்வுகளின் பிறப்பிடம் நமது இதயம் தானே! அவ்வாறு இது போன்ற உணர்வுகள் அளவுக்கதிகமாக ஆகும் போது தொண்டைக் குழிகளை அடைக்கும். பலர் உடனே அந்த நேரத்தில் தண்ணீரை தேடுவதும் அதனால்தான். நீங்கள் நிகழ்வைச் சொல்கிறீர்கள். குர்ஆன் அந்த நிகழ்வின் மூலத்தை சொல்கிறது.//

உணர்வுகளின் பிறப்பிடம் இதயம் என்று யார் சொன்னது? இது அறிவியல் வளர்ச்சிக்கு முந்தைய பழங்கால மக்களின் நம்பிக்கை. இதயத்தின் ஒரே வேலை ரத்தத்தை பம்ப் செய்து உடலெங்கும் ரத்த குழாய்கள் மூலம் ஓட விடுவதுதான். அதற்கும் உணர்வுகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. உணர்வுகளின் பிறப்பிடம் மூளை.

உணர்வுகள் இதயத்தால் தோன்றுகின்றன என்று தவறாக நம்பினாலும் அதைக்கூட முஹம்மதுவால் சரியாக சொல்லத் தெரியவில்லை. வழக்காம் போல உளறல்தான். துக்கம் தொண்டையை அடைத்துக்கொள்ளும் என்று கூறுவதற்கு பதில் இதயங்கள் தொண்டைகளை அடைத்துக்கொள்ளும் என்று லூசுத்தனமாக உளறி இருக்கிறார். இப்படிப்பட்ட உளறல்கள் குர்ஆன் முழுக்க நிரம்பி உள்ளன. அவர் படிக்காத முட்டாள் என்று தெளிவாக தெரிகிறது.