Followers

Tuesday, August 12, 2014

அமெரிக்காவில் கொள்ளையோ கொள்ளை!





அமெரிக்காவின் மிசூரி நகரத்தில் மிகப் பெரிய கலவரம் நடந்துள்ளது. மெக்கேல் புரொவ்ன் என்ற 18 வயது கருப்பு நிற இளைஞன் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளான். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு இன மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது.

இந்த போராட்டத்தில் சமூக விரோதிகளும் இடையில் புகுந்து கடைகளை உடைப்பதும் அங்குள்ள பொருள்களை கொள்ளையடிப்பதுமாக தொழில் வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது திருடர்கள் கொள்ளையடிப்பதை நேரலையாக பாருங்கள் :-) ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் கொள்ளையடிப்பதிலும் சரி நிகர் சமானம் என்று நிரூபித்துக் கொண்டுள்ளனர்.

படிப்பிலும் நாகரிகத்திலும் நாங்களே முதல் என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவில் கருப்பு இன மக்கள் அன்று முதல் இன்று வரை சரிசமமாக நடத்தப்படுவதில்லை. அந்த வேகம் இன்று ஏதாவது ஒரு சம்பவத்தின் மூலம் உடன் பற்றிக் கொள்கிறது.

உலகத்தை நாங்களே ஆளப் பிறந்தவர்கள் என்று பாலஸ்தீனிலும், ஈராக்கிலும், சிரியாவிலும், ஆப்கானிஸ்தானத்திலும் மூக்கை நுழைத்து அந்த நாடுகளை துவம்சம் செய்யும் ஒபாமாவே! உனது நாட்டு மக்களுக்கு நீதி வழங்கி விட்டு பிறகு வளைகுடா பக்கம் உனது பார்வையை செலுத்து. போராட்டம் மேலும் விரிவடைவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

6 comments:

ஆனந்த் சாகர் said...

ஐ எஸ் ஐ எஸ் பயங்கவாத அமைப்பு ஈராக்கில் வங்கிகளையும் தொல்பொருள் அருங்காட்சியத்தையும் அரசுக்கு சொந்தமான பெட்ரோல் கிணறுகளையும் கொள்ளை அடித்து அதன்மூலம் பல ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களை கள்ள சந்தையில் பெற்று அந்த பணத்தின் மூலம் ஜிஹாத் நடத்துகிறது. இந்த கொள்ளைகளை பற்றி நீங்கள் ஏன் பதிவிடவில்லை? ஏன் என்றெல்லால் அதுதான் முஹம்மதின் வழிமுறை(சுன்னத்) ஆயிற்றே! மதீனாவுக்கு சென்று குடி பெயர்ந்ததிலிருந்து அவர் இறக்கும்வரை 10 ஆண்டுகளாக அவர் அப்படித்தானே கொள்ளை அடித்து ஜிஹாத் நடத்தி இஸ்லாத்தை அரேபியாவில் வலுக்கட்டாயமாக திணித்தார்! அதுதானே இஸ்லாம் அரேபியாவில் நிர்மாணம் செய்யப்பட வரலாறு.

மேலும் லிபியாவில் கடாபிக்கு எதிரான முஸ்லிம்களின் கிளர்சியின்போதும் முஸ்லிம்கள் கொள்ளைகளில் ஈடுபட்டார்களே. அந்த கொள்ளைகளை பற்றி பதிவிடவேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை? அவர்கள் முஸ்லிம்கள் என்பதால்தானே?

suvanappiriyan said...

//ஐ எஸ் ஐ எஸ் பயங்கவாத அமைப்பு ஈராக்கில் வங்கிகளையும் தொல்பொருள் அருங்காட்சியத்தையும் அரசுக்கு சொந்தமான பெட்ரோல் கிணறுகளையும் கொள்ளை அடித்து அதன்மூலம் பல ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்களை கள்ள சந்தையில் பெற்று அந்த பணத்தின் மூலம் ஜிஹாத் நடத்துகிறது. இந்த கொள்ளைகளை பற்றி நீங்கள் ஏன் பதிவிடவில்லை? //

தனது சொந்த நாட்டை அபகரித்து வைத்திருக்கும் அமெரிக்க கூலிப்படைகளை வரட்டி அங்கு இஸ்லாமிய ஆட்சியை அமைப்பது அவர்களின் நோக்கம். ஆனால் அங்கிருந்து வரும் செய்திகளைக் கொடுப்பது அமெரிக்கா. அதன் தரம் எப்படி இருக்கும் என்பதை யாரும் அறிவர். அடுத்து ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நமது நாட்டு செவிலிய பெண்கள் 40 பேர் ஒட்டு மொத்தமாக அவர்களை பாராட்டி பேட்டி கொடுத்துள்ளனர். எனவே இந்துத்வாவாதியான உங்களின் நற்சான்று எங்களுக்கு தேவையில்லை.

// மதீனாவுக்கு சென்று குடி பெயர்ந்ததிலிருந்து அவர் இறக்கும்வரை 10 ஆண்டுகளாக அவர் அப்படித்தானே கொள்ளை அடித்து ஜிஹாத் நடத்தி இஸ்லாத்தை அரேபியாவில் வலுக்கட்டாயமாக திணித்தார்!//

வரலாறு தெரியாத பிதற்றல். மெக்காவான அவரது சொந்த ஊரிலிருந்து அவரையும் அவரது தோழர்களையும் பொருட்களை பிடுங்கிக் கொண்டு விரட்டினர் அன்றைய காபிர்கள். மதினாவில் ஆட்சி அமைந்தவுடன் இழந்த சொத்துக்களை மீட்கவே சென்றனர். மற்ற போர்கள் அனைத்தும் தற்காப்பு போர்களே! இவரது ஆடசி அமைந்தவுடன் ஒரு அறிவிப்பை செய்தார் 'எனது தலைமையில் உள்ள ஆட்சிக்கு கீழ் உள்ள மக்களுக்கு கடன் சுமைகள் இருந்தால் அரசிடம் கூறலாம். அவர்களின் கடனை அரசு கஜானாவிலிருந்து நாங்கள் அடைக்கிறோம். என்றார். அதன்படி அடைத்தும் காட்டினால் சில ஆண்டுகளிலேயே பிச்சைக்காரர்களோ ஏழைகளோ இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கினார் நபிகள் நாயகம். மனுநீதியை பின்பற்றும் இந்துத்வாவாதியான உம்மைப் போன்றோருக்கு இது விளங்க வாய்ப்பில்லை. :-)

suvanappiriyan said...

//மேலும் லிபியாவில் கடாபிக்கு எதிரான முஸ்லிம்களின் கிளர்சியின்போதும் முஸ்லிம்கள் கொள்ளைகளில் ஈடுபட்டார்களே. அந்த கொள்ளைகளை பற்றி பதிவிடவேண்டியதுதானே? ஏன் செய்யவில்லை? அவர்கள் முஸ்லிம்கள் என்பதால்தானே?//

கடாபியின் ஆட்சி கலைக்கப்பட்டு நிச்சயமற்ற நிலை நிலவியது. அப்போது வலிமை உள்ளவன் கிடைக்கும் பொருள்களை சேர்த்து வைத்துக் கொள்ளவே ஆசைப்படுவான்.

ஆனால் அமெரிக்காவிலோ நிலையான ஆட்சி நடக்கிறது. உலகையே தன் கட்டுப்பாட்டில் கொண்ட வர முயற்சிக்கிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இந்துத்வா கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//தனது சொந்த நாட்டை அபகரித்து வைத்திருக்கும் அமெரிக்க கூலிப்படைகளை வரட்டி அங்கு இஸ்லாமிய ஆட்சியை அமைப்பது அவர்களின் நோக்கம்.//

ஈராக்கில் இருப்பது ஈராக்கிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. அதை கூலிப்படை என்று சொல்கிறீர்கள். ஆனால் ஒரு சிறிய பயங்கரவாத கும்பல்(சுமார் 7000 பேர்கள் அடங்கியது) வங்கிகளை, பெட்ரோல் கிணறுகள், தொல்பொருள் அருங்காட்சிய பொருட்களை கொள்ளை அடித்து அந்த பணத்தில் அந்த ரவுடிகள் அரசுக்கு எதிராக வன்முறை செயல்களில் ஈடுபட்டு சட்டத்துக்கு புறம்பாக நகரங்களை கைப்பற்றி வருகிறது. இதற்கு சவுதி அரசு ஆயுத விநியோகம் செய்கிறது. இந்த கிரிமினல்கள்தான் கூலிப்படை.

// ஆனால் அங்கிருந்து வரும் செய்திகளைக் கொடுப்பது அமெரிக்கா. அதன் தரம் எப்படி இருக்கும் என்பதை யாரும் அறிவர். //

பத்திரிகை சுதந்திரம் முழுவதுமாக கொடுக்கப்பட்டுள்ள அமெரிக்க ஊடகங்களே உண்மை செய்தியை உலகுக்கு கொடுக்கின்றன. இதை முஸ்லிம்கள் மறுப்பது புதிய விஷயம் இல்லை. பொய் தானே உங்களின் மூலதனம்!

//அடுத்து ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நமது நாட்டு செவிலிய பெண்கள் 40 பேர் ஒட்டு மொத்தமாக அவர்களை பாராட்டி பேட்டி கொடுத்துள்ளனர்./

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத கிரிமினல்கள் உங்களுக்கு போராளிகளா? உங்களுடைய தரம் என்னவென்று புரிகிறது! செவிலிய பெண்களை கடத்தி பல நாட்கள் அவர்களை அடைத்து வைத்த கிரிமினல்கள் உங்களை பொறுத்தவரை பாராட்டுக்குரியவர்கள்! அந்த கிரிமினல்கள் செவிலியர்களை கற்பழிக்காமல் விட்டுவிட்டார்களாம், அதனால் அவர்களது கண்ணியம் தெரிகிறதாம்! என்ன ஒரு மனிதாபமானம், அறிவு உங்களுக்கு! கடத்தல் குற்றத்துக்கு நம் நாட்டில் 7 வருட சிறை தண்டனை கிடைக்கும். முஸ்லிம்களின் மூளை இஸ்லாமிய விஷ கிருமியால் பாதிக்கப்பட்ட ஒன்று என்பது எவ்வளவு உண்மை!!

// எனவே இந்துத்வாவாதியான உங்களின் நற்சான்று எங்களுக்கு தேவையில்லை.//

நான் எப்பொழுது உங்களுக்கு நற்சான்று கொடுத்தேன், சுவனப்பிரியன்? முஸ்லிம்களுக்கு ஒருக்காலும் நற்சான்று கிடைக்காது. நீங்களெல்லாம் மனிதர்களில் மிக மிக மோசமானவர்கள், மிக அபாயமானவர்கள் என்று அல்லவா சான்று கொடுக்க வேண்டும்?

Anonymous said...

//நான் எப்பொழுது உங்களுக்கு நற்சான்று கொடுத்தேன், சுவனப்பிரியன்? முஸ்லிம்களுக்கு ஒருக்காலும் நற்சான்று கிடைக்காது. நீங்களெல்லாம் மனிதர்களில் மிக மிக மோசமானவர்கள், மிக அபாயமானவர்கள் என்று அல்லவா சான்று கொடுக்க வேண்டும்? //

GOOOOD

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//கடாபியின் ஆட்சி கலைக்கப்பட்டு நிச்சயமற்ற நிலை நிலவியது. அப்போது வலிமை உள்ளவன் கிடைக்கும் பொருள்களை சேர்த்து வைத்துக் கொள்ளவே ஆசைப்படுவான்.

ஆனால் அமெரிக்காவிலோ நிலையான ஆட்சி நடக்கிறது. உலகையே தன் கட்டுப்பாட்டில் கொண்ட வர முயற்சிக்கிறது. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இந்துத்வா கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. //

ஏன் முஸ்லிம்கள் லிபியாவில் கொள்ளை இட்டதை பற்றி ஏதும் பேசாமல் அமெரிக்காவில் நடந்த கொள்ளையை பற்றி மட்டும் பதிவு எழுதுகிறீர்கள் என்று நான் உங்களை கேட்டேன். நீங்கள் நியாயமான மனிதராக இருந்தால், ஆமாம் லிபியாவில் முஸ்லிம்கள் கொள்ளையில் ஈடுபட்டதும் குற்றம்தான் என்று சொல்லி இருப்பீர்கள். முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோர் என்ற இரட்டை அளவுகோல் வைத்துதானே முஸ்லிம்கள் எதையும் பார்ப்பார்கள். அதைதானே முஹம்மது தன் அடிவருடிகளுக்கு சொல்லி கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். இஸ்லாமிய போதனை இப்படி இருக்க, உங்களிடமிருந்து நியாமான பதிலை எதிர்பார்க்க முடியுமா? முகம்மதை சரியாக பின்பற்றும் ஒரு நல்ல முஸ்லிம் எப்படி சிந்திக்க வேண்டுமோ அப்படி சிந்தித்து நீங்கள் மேற்கண்ட பதிலை கொடுத்துள்ளீர்கள். சபாஷ்! முஸ்லிம்களின் நிறம் வெளுத்து அவர்களின் உண்மையான சுய ரூபம் அம்பலமாவதை எல்லோரும் பார்க்கட்டும்.

லிபியாவில் அரசியல் நிச்சயமற்ற நிலை இருந்தது, அப்பொழுது முஸ்லிம்கள் கொள்ளைகளில் ஈடுபட்டார்கள், அதனால் அது தவறில்லை; ஆனால் அமெரிக்காவில் அரசிய ஸ்திரத்தன்மை உள்ளபோது கொள்ளையில் அமெரிக்கர்களில் சிலர் ஈடுபடுவது மட்டும் குற்றம் என்கிறீர்கள். இதுதான் இஸ்லாமிய நீதி! முஸ்லிம்கள் கொள்ளையிடலாம், அது தவறில்லை. ஆனால் மற்றவர்கள் கொள்ளையிடுவது மட்டும் தவறாகும் என்று நேரடியாக சொல்லாமல் இப்படி சுற்றி வளைத்து அரசியல் நிச்சயமற்ற நிலை, நிலையான ஆட்சி என்றெல்லாம் சம்பந்தமில்லாமல் உளறுகிறீர்கள்.

கொள்ளையிடுவது குற்ற செயல் என்பது நாகரிக உலகின் நீதி. அரசியல் நிலைமை எப்படி இருக்கிறது என்பது இதற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாதது. குற்றம் குற்றமே. ஆனால் இது உங்களின் இஸ்லாமிய மூளைக்கு தெரிவதில்லை.