Followers

Wednesday, December 31, 2014

யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் - திருமந்திரம்!



யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடில்

ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

-திருமூலரின் திருமந்திரப் பாட்டு

"இறைவனின் திருவருளால் நான் அந்த இன்பத்தைப் பெற்றேன். இந்த இன்பத்தினை இந்த மண்ணுலகமும் பெறவேண்டும். பெருமை கொண்ட வேதத்தின் உண்மைப் பொருளை இதுதான் என்று எடுத்துக் கூறினால் அதுவே நாவாகிய தசையினை நாம் பெற்றதன் பலனை அடைந்தவராவோம். அவ்வாறு அந்த இறை வேதமாகிய உண்மைகளை நாம் மேலும் மேலும் நேசிக்க அந்த இறைவனின் திருப் பொருத்தத்தை அளவில்லாமல் அடையலாம்." என்கிறார் திருமூலர்.

இதனை ஒரு அழகிய கதையின் மூலம் மேலும் அறிந்து கொள்வோம்.

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன.

ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."...

அந்தப் பம்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது.

அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.

ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்பு இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது.

தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரையும் நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனமும் நிறைந்திருந்தது.

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது.

இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.

"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

இது போன்று தமிழ் மொழியில் எண்ணிலடங்கா ஏகத்துவ கொள்கையையும் நற்பண்புகளையும் போதிக்கும் பல நுல்கள் உள்ளன. ஆனால் ஆரிய படையெடுப்பால் பல நூல்கள் ஆற்றில் வீசியும் தீயிலிட்டு கொளுத்தியும் நாசமாக்கினர் மாபாவிகள். எஞ்சியது திருக்குறள், திருமந்திரம் போன்ற மிக சொற்ப நூல்களே. அதனையும் வஞ்சகத்தால் மறைத்து புராணங்களையும் இதிகாசங்களையும் பிரபலப்படுத்தி மக்களை இன்று வரை அடிமைகளாக வைத்திருப்பவர்களை நாம் அடையாளம் கண்டு தமிழனின் உண்மை வரலாற்றை உலகுக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.


4 comments:

Dr.Anburaj said...

ஆனால் ஆரிய படையெடுப்பால் பல நூல்கள் ஆற்றில் வீசியும் தீயிலிட்டு கொளுத்தியும் நாசமாக்கினர் மாபாவிகள்.
தவறு. அரேபிய படையெடுப்பு என்று எழுதியிருக்க வேண்டும்.அச்சுப்பிழையை திருத்திக் கொள்ள வேணடும். திருமந்திரம் இனிமேல் அரபிக் பாடசாலையில் கற்றுக் கொடுக்கப்படும் என்று நம்பலாமா ? திருமந்திரம் படித்தால் பண்பாடு ஒங்கும். மனம் தெளிவு பெறும்.ஜகாத் -அரேபிய கொலை வெறி தொலையும்.மனித நேயம் பெருகும்.

Dr.Anburaj said...

ஒன்றது பேரூர் வழி அதற்குள்
என்றதுபோல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே!

'ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ ?' (திருவாசகம்) என்கிறார் மாணிக்கவாசகர்.
அரேபிய மாா்க்கம் தான்உண்மை என வாதிடுபவனை குரைக்கும் நாய் என்கிறாா் திருமூலா்.சுவனப்பிாியன் நாயா ?

Anonymous said...

//'ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ ?' (திருவாசகம்) என்கிறார் மாணிக்கவாசகர்.

ஒன்றது பேரூர் வழி அதற்குள்
என்றதுபோல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயை ஒத்தார்களே!//

ஹாஹா ஹா , இப்படி இனம் வரும் என்று அப்போதே திருமூலருக்கு தெரிந்து இருக்கிறதே. சரியான பெயரை தான் கொடுத்திருக்கிறார்.

//அரபிக் பாடசாலையில் கற்றுக் கொடுக்கப்படும் என்று நம்பலாமா //

அட என்னங்க நீங்க இப்டி பதில் சொல்ல முடியாத கேள்வி எல்லாம் கேட்டால் அவர் உடலின் ஒன்பது துவாரத்தையும் பொத்தி கொண்டு விடுவார். அல்லது நெத்தியடியாக பதில் சொல்வதாக நினைத்து ஒரு பதில் சொல்வார், ரொம்ப கேவலமாக இருக்கும்

C.Sugumar said...

இன்று பேசப்படும் சமூக நீதிக்கருத்துக்கள் மனித நேயகருத்துக்கள் தொண்டு உள்ளம் போன்ற அனைத்துக் கருத்துக்களை
யும் திருமந்திரம் கொண்டுள்ளது.விவேகானந்தரது உருவம்தான் திருமந்திர போதனை என்றால் மிகையாகாது.