
ஆஸ்திரேலியே கடற்கரைகளில் சூரிய குளியல் படுக்கைகளில் படுத்துக்கொண்டு நிறத்தை கறுக்க செய்யும் முறைக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுகிறது.
புத்தாண்டு முதல் நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மானியா, குயின்ஸ்லாந்து, சிட்னி ஆகிய கடற்கரைகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் அதிகம் ஈர்க்கப்பட்டு வந்த செயற்கை சூரிய குளியல் படுக்கைகளுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த தடையை ஆஸ்திரேலிய புற்றுநோய் ஆணையம் வரவேற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் 70 வயதை கடந்த 3-ல் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கபடுகின்றனர். இதனால் சூரிய குளியல் படுக்கைகளுக்கு தடை விதிப்பதன் மூலம் தோல் புற்றுநோயை தடுக்க முடியும் என்று அந்த ஆணையம் ஆஸ்திரேலிய அரசுக்கு அறிவுறுத்தி வந்தது.
இது குறித்து ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் அந்த ஆணையத்தின் இயக்குனர் பால் க்ரோகன் கூறுகையில், "சூரிய குளியல் முறையால் புற ஊதாகதிர்களின் தாக்கம் அதிகமாக உடலில் பாய்கிறது. இதனால் மெலனோமா அளவு அதிகரித்து தோல் புற்றுநோய் உள்ளிட்ட பல அபாயமான நோய்கள் ஏற்படுகிறது.
கனடா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளை விட ஆஸ்திரேலியாவில் புற்றுநோய் அபாயம் அதிகமாக உள்ளது எங்கள் அரசை கவலையடைய செய்துள்ளது" என்றார்.
கடந்த 2011-ல் ஆஸ்திரேலியாவில் 2000-த்துக்கும் அதிகமானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த இறப்பு அனைத்துக்குமே மெலனோமா அளவு அதிகரித்ததே காரணமாக கண்டறியப்பட்டது. இதற்கு அந்த நாட்டின் தட்பவெப்ப நிலையும் காரணமாக உள்ளது.
இதனால் அந்த அரசு பொதுமக்கள் அனைவரும் சன்ஸ்க்ரீன், தொப்பிகள் மற்றும் கருப்பு கண்ணாடிகளை அணிய அறிவுறித்தி வருகிறது. அதோடு அந்த நாட்டில் மிகப் பெரிய பொருளாதார வரவேற்பை பெற்ற சூரிய குளியல் படுக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
31-12-2014
பொது இடங்களில் பெண்கள் மேலாடை எதுவும் இன்றி வெட்கமில்லாமல் சூரிய குளியல் நடத்தும் இந்த முறைக்கு தடை விதித்ததை வரவேற்போம். புற்று நோய் வருவதையும் இதன் மூலம் தடுக்கலாம்.
யோகா என்ற பெயரில் சூரிய நமஸ்காரம் செய்யும் நம் ஊர் பழக்கத்தையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்தி அதன் தீமையை உணர வைக்க வேண்டும். யோகாவில் சொல்லப்படும் மற்ற பயிற்சிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தரலாம். ஆனால் சூரிய வணக்கத்தை அதில் சேர்க்க முடியாது. பல பள்ளிகளில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சூரிய நமஸ்காரத்தால் கண் பார்வையில் பலருக்கு பிரச்னையை உண்டு பண்ணியுள்ளது. உடல் ஆரோக்கியத்தை பெறுகிறேன் என்று உடலுக்கு தீங்கை வரவழைக்கும் சூரிய குளியல், சூரிய நமஸ்காரம் போன்றவற்றை அரசுகள் கவனத்தில் எடுத்து மக்களின் அறியாமையை போக்க முன் வர வேண்டும்.
2 comments:
வைட்டமின் டி தயாாிக்க சுாிய ஒளி தேவை.இந்நிலையில் இக்கட்டுரையை தாங்கள் வெளியிட்டதன் நோக்கம் யோகாவை இழிவு படுத்துவதா ?
சுர்ீயு நமஸ்காரம் அரேபிய அடிமை சுவனப்பிாியனுக்கு அந்நியமாகத் தொியலாம்.குரானில் கருஞ்சீரம் தேன் ஆகிய இருபொருட்கள் சிறந்த மருந்தாக பேசப்பட்டள்ளது. இந்த அரு மருந்துக்களைக் கொண்டு அனைத்துந வியாதிகளையும் சுகப்படுத்த முடியாது.
யோக பயிற்சிகள் அற்புதமானவைகள்.அனைத்து ஆசனங்களையும் ஒருங்கிணைத்த வடிவமே சுாிய நமஸ்காரம். அரேபியாவில் பிறந்தது சுாிய நமஸ்காரம் என்றால் தலையில் போட்டு ஆடுவாய்.இந்தியாவில் பிறந்த கலை எனவே உம்மக்கு யோகா இழிவான பொருளாகப் போய்விட்டது. நாய் குரைத்து கதிரவனுக்கு ஆவதென்ன ?
Post a Comment