Followers

Monday, December 29, 2014

கற்பு ஒழுக்கம் நாகரிக மேம்பாடு பற்றி இஸ்லாம் சொல்வதென்ன?

நண்பர் ராம் நிவாஸ்!

//இஸ்லாம் இறைவழியில் கற்பு ஒழுக்கம், நாகரிக மேம்பாடு என அனைத்தும் சரியாகவே இருந்தது என அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்ய முடியுமா???//

கற்பு என்பது ஒரு தனி மனிதன் ஒழுக்கம் சார்ந்த விஷயம். இதனை அறிவியல் ரீதியாக எவ்வாறு சரி காண முடியும்? :-)

இஸ்லாமிய பெண்களை புர்கா போட்டு பாதுகாத்து வைப்பதாக குற்றச் சாட்டை பலர் சொல்கின்றனர். கற்பழிப்பு, அல்லது ஈவ் டீஸிங்கில் நமது தமிழகத்தில் எந்த இஸ்லாமிய பெண்ணாவது மாட்டியதாக நாம் செய்திகளில் பார்க்கிறோமா? இல்லையே! இதற்கு காரணம் இஸ்லாமிய பெண்கள் பெரும்பாலானவர்கள் கடை பிடிக்கும் புர்கா முறைதான். அது ஒரு கேடயமாக அந்த பெண்களை பாதுகாக்கிறது.

அதே போல் நாகரிக மேம்பாடு என்பது தனி மனிதன், அல்லது தனி குழுமம், அல்லது தனி நாடு சம்பந்தப்பட்ட விஷயம். காட்டு வாசிகள் உடையில்லாமல் திரிவது அவர்கள் நாகரிகம். உடை உடுத்தி வாழ்வது நாட்டுக்குள் வாழும் நம்மவர்களின் நாகரிகம். நாகரிகம் நாட்டுக்கு நாடு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். இதிலும் நீங்கள் அறிவியலை துணைக்கழைக்க முடியாது.

மனித மனம் அமைதி பெற இறை வழிபாடு சிறந்த வழி. இந்த இடத்தில் அறிவியல் வரலாம். மற்ற எந்த மருந்தைக் கொண்டும் குணப்படுத்த முடியாத மன சஞ்சலத்தை ஐந்து வேளை தொழுகையில் எனது மனதை ஸ்திரப்படுத்திக் கொள்கிறேன். ஐந்து வேளை தொழக் கூடிய மக்களிடம் தற்கொலைகள் குறைவாக இருப்பதைக் காணலாம்.

நமது நாட்டில் கேரளாவில்தான் அதிக தற்கொலைகள் நடக்கிறது. அங்கு எடுத்த கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் தற்கொலைகள் செய்து கொள்வது மிக மிக குறைவாக இருந்தது. இதற்கான காரணத்தை அந்த குழு ஆராய்ந்தது. முஸ்லிம்கள் எது நடந்தாலும் இறைவன் நாட்டம் என்று மனதை லேசாக்கிக் கொண்டு இறை தியானத்தில் ஈடுபட்டு விடுவதாலேயே தற்கொலை விகிதாச்சாரம் குறைவாக இருப்பதாக கண்டு பிடித்தனர்.

நமது தமிழகத்திலும் கடந்த ஒரு ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுங்கள். அதில் முஸ்லிம்கள் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே இருக்கும். அல்லது முஸ்லிம்களே அந்த லிஸ்டில் இல்லாமல் இருக்கும். இதற்கு காரணம் எங்களின் மத நம்பிக்கை என்றால் மிகையாகாது.

இஸ்லாமிய சட்ட திட்டங்களை ஓரளவு கடை பிடித்து வாழக் கூடிய மக்களாக இஸ்லாமியர்கள் இருப்பதால்தான் கற்பு மற்றும் நாகரிகத்தில் மற்றவர்களை விட மேம்பட்டு இருக்கிறார்கள். அதற்கு காரணம் எங்களின் வேத நூலாகிய குர்ஆன் என்றால் மிகையாகாது. ஒருவன் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்வது வரை இஸ்லாம் ஒரு முஸ்லிமின் வாழ்வில் குறுக்கிட்டு அவனை செம்மைப்படுத்துகிறது. இது போன்ற சட்டங்களை இந்து மதத்திலோ கிறித்தவ மதத்திலேர் புத்த மதத்திலோ உங்களால் காண முடியாது. ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்கு போவதும் வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போவதோடு உங்களின் மத கடமைகளை முடித்துக் கொள்கிறீர்கள். ஆனால் ஒரு இஸ்லாமியன் அவ்வாறு இருந்து விட முடியாது

மற்ற சமூகத்தவர்களும் கற்பு நாகரிகத்தில் சிறந்து விளங்கினாலும் அதற்கு தனி மனித ஒழுக்கம்தான் காரணமே யொழிய அதற்கு காரணமாக உங்களின் வேத புத்தகத்தைக் காட்ட முடியாது. ஏனெனில் அந்த வேத புத்தகங்களில் தனி மனிதன் வழி தவறி விடுவதற்கே பல சட்டங்களை இயற்றி வைத்துள்ளனர். இதற்கு ஆதாரங்களைக் கேட்டால் தரத் தயாராக இருக்கிறேன்.

5 comments:

suvanappiriyan said...

//புர்கா முறை பாதுகாப்பானது எனில் ஸரியத் சட்டம் மூலமாக மற்ற நாடுகளில் கற்பழிப்புக்கு தண்டனை வழங்கப்படுவதேன்???.....//

தண்டனை கடுமையானால் குற்றம் செய்ய எவனுக்கும் மனம் வராது. அரபு நாடுகளின் கற்பழிப்பு குற்றங்களையும் நம் நாட்டு கற்பழிப்பு குற்றங்களையும் விகிதாச்சார அடிப்படையில் பாருங்கள். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வீர்கள். ஆண்களை கவருவதற்காக பெண்கள் ஆபாச உடைகளை அரபு நாடுகளில் அணிந்து வருவதில்லை. சட்டமும் கடுமையாக இருக்கிறது. பெண்களும் நிம்மதியாக வெளியில் செல்கிறார்கள். நம் நாட்டிலோ வயதுக்கு வந்த பெண்கள் வெளியே சென்றால் பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்க வேண்டியுள்ளது.

எனவே தான் நமது இந்தியர்கள் அதிலும் இந்துக்கள் பல வருடங்களாக தங்கள் குடும்பத்தோடு பாதுகாப்பாக அரபு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

Dr.Anburaj said...

உடைகளில் அடக்கம் கண்ணியம் தேவை. இதை இந்து சமூகம் புறக்கணித்து வருகின்றது. திரைப்பட நடிகை உடல் அழகை ஊருக்குகாட்சி பணம் சம்பாதிக்கும் நடிகையைப்பின்பற்றி உடை உடுக்க முந்தும் ஒரு மனநிலை நாட்டில்பரவி வருகின்றது. இதுமகா ஆபத்து.ஆபத்து.பிரம்மச்சாியம் பிரதி பன்னம் வீாிய லாப என்கிறது யோக சுத்திரம். பிரம்மச்சாியம் காப்பதால் உடலுக்கும் மனதிற்கும் ஆனமாவிற்கும் வீாியம் வாய்க்கின்றது என்கிறது யோக சுத்திரம். பெண்களை தங்களை அழகை வெளிச்சம்போட்டுக் காட்டத் தேவையில்லை.
தினக்கூலி யாக உழைக்கும் முஸ்லிம் பெண்களுக்கு கோசா முறை சாத்தியமா ?

C.Sugumar said...

நாட்டில் பிரம்மச்சாியம் காக்கும் முறை மிகவும் மங்கியுள்ளது.
குறிப்பாக ஆண்கள் மத்தியில் கற்பு -பிரம்மச்சாியம் என்ற சொற்கள் மதிப்பு இழந்துவிட்டது போல் உள்ளது. தன் மகளுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடும்போதுதான் மேற்படி சொற்கள் ஆண்களுக்கு நினைவுக்கு வருகின்றது. பிரம்மச்சாிய ஆஸ்ரமம் அழிந்ததால்தான் இந்தியா வீழ்ந்தது என்கிறாா் சுவாமி விவேகானந்தா். பெண்கள் உடை உடுப்பது பிரம்மச்சாிய ஆஸ்ரமத்தை உயிா்ப்பிப்பதாக இருக்க வேண்டும்.

C.Sugumar said...

சுவாமிஜி வாழ்வில் நடந்தவை …..
ஒரு முறை சுவாமிஜி இருக்கும் மடத்திற்கு வந்த ஒரு சீடர் அங்கே இருந்த களஞ்சியப் புத்தகங்களின் தொகுதியை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் விவேகானந்தரிடம் வியப்புடன் கூறினார் ‘ இந்தப் புத்தகங்கள் எல்லாவற்றையும் ஒரு பிறவியில் படித்து முடிப்பது இயலாத காரியம்’ என்றார். சுவாமி விவேகானந்தரோ அந்தப் புத்தகங்களில் பத்துப் பகுதிகளை முடித்துவிட்டுப் பதினோராம் பகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது சீடருக்குத் தெரியாது.
சுவாமி விவேகானந்தரோ அந்த சீடரிடம் ‘ என்ன சொல்கிறா நீ? முதல் பத்துப் பகுதிகளில் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேள். நான் பதில் சொல்கிறேன்?’ என்றார்.
சீடரோ திகைப்புடன் ‘ என்ன, இந்த நூல்களை எல்லாம் படித்து விட்டீர்களா?’ என்றார்.
சுவாமிஜியோ ‘படிக்காமல் கேள்வி கேட்கச் சொல்வேனா? என்றார்.
சீடர் சுவாமிஜி சொல்வதால் அவரிடம் புத்தகத்தில் முதல் பத்துப் பகுதிகளிலிருந்து வெவ்வேறு விதமாக பல கேள்விகளை வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் கேட்டார்.
சுவாமிஜியோ அசராமல் அனைத்திற்கும் பதிலும் விளக்கமும் சில இடங்களில் அந்த புத்தகத்தின் மொழியிலேயே அவற்றை எடுத்துக் கூறி அசர வைத்தார்.
சீடர் புத்தகத்தை வைத்து விட்டு ‘இது மனித ஆற்றலால் முடியாத காரியம்!’ என்றார்.
ஆனால் சுவாமிஜியோ ‘ஏன் முடியாது. இதோ பார், பிரம்மச்சரியத்தை (கட்டுக்கோப்பான ஒழுக்கத்தையும் தியானத்தையும் வழுவாமல் கடைபிடித்தல்) ஒழுங்காக கடைப்பிடிப்பது ஒன்றால் மட்டுமே எல்லா கலைகளும் கணநேரத்தில் கைவசப்படும்; ஒருமுறை கேட்பவற்றைத் தவறின்றி நினைவில் கொள்ளவும், மீண்டும் அதை அப்படியே ஒப்பிக்கவும் முடியும். இத்தகைய பிரம்மச்சரியம் இல்லாமையால் தான் நமது நாட்டில் எல்லாம் அழிவின் எல்லைக்கே வந்துவிட்டன’ என்றார்.
Close Path
இந்த பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பதால் உண்டாகும் சக்தியை பற்றி சுவாமி விவேகானந்தர் மேற்கொண்டு விளக்குகிறார். குறைவாகவோ அதிகமாகவோ ஒவ்வொரு மனிதனிடமும் ஓஜஸ் (மனித ஆற்றல் அனைத்தும் ஓர் இடத்தில் குவியும் சக்தி) சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
உடலில் செயல்படுகின்ற எல்லா ஆற்றல்களும் அவற்றின் மிகவுயர்ந்த நிலையில் ஓஜஸாக மாறுகின்றன. ஒரு சக்திதான் இன்னொரு சக்தியாக மாறுகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். வெளியில் மின்சாரமாக, காந்த சக்தியாகச் செயல்படுகின்ற அதே சக்தி தான் அகச் சக்தியாக மாறுகிறது. தசைச் சக்தியாக செயல்படுபவைதாம் ஓஜஸாக மாறுகிறது. அதே சக்தி தான் பாலுறவு சக்தியாக, பாலுணர்ச்சியாக வெளிப்படுகிறது.
இவ்வகையில் வெளிப்படும் சக்தியை கட்டுப்படுத்தினால் எளிதில் ஓஜஸாக மாறுகிறது. நம்மிடம் இருப்பது ஒரே சக்தி தான். அதை தான் நாம் பல்வேறு நிலைகளில் உபயோகிக்கிறோம். எனவே எவ்வெவற்றிர்கு சக்தியை செலவிடவேண்டும் என்பதில் தெளிவு பெற வேண்டும்.
ஒழுக்கமுடைய ஆண்களும் பெண்களும் மட்டுமே ஓஜஸை மேலே எடுத்துச் சென்று மூளையில் சேமிக்க முடியும். அதனால் தான் பிரம்மச்சரியம் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது. பிரம்மச்சரியத்திலிருந்து வழுவினால் ஒருவனிடமிருந்து ஆன்மீகம் நீங்கி விடுவதையும் மனவலிமையையும் ஒழுக்க வீரியத்தையும் அவன் இழந்துவிடுவதையும் உணர முடியும்.
இந்தக் காரணத்தினால் தான் பெரிய ஆன்மீக வீரர்களைத் தந்துள்ள எல்லா மதங்களும் சிறிதும் வழுவாத பிரம்மச்சரியத்தை எப்போதும் வற்புறுத்துவதைக் காண்கிறோம். இதே காரணத்தினால் தான், திருமணம் செய்து கொள்ளாத துறவியர் தோன்றினர்.

முஹம்மது அரூஸ். said...

இதனை சிங்கள மொழியில் பெயர்க்க முடியாதா?