Followers

Wednesday, April 29, 2015

நேபாளத்தில் புறக்கணிக்கப்படும் தலித் குடியிருப்புகள்!



வரலாறு காணாத பேரழிவு நேபாளத்தில் நிகழ்ந்துள்ளது. இடிபாடுகளில் இன்னும் மக்களின் உடல்கள் கிடப்பதாக சொல்கின்றனர். இறந்தவர்கள் 5000 பேர் என்று அரசு சொன்னாலும் உண்மையான இழப்பு இதை விட மூன்று மடங்கு இருக்கும் என்கின்றனர் நோக்கர்கள். நேபாள மக்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

நேபாள மக்களின் உதவிக்காக நமது இந்திய அரசு பல உதவிகளை வழங்கி வருகிறது. உணவாகவும் மருந்தாகவும் பல கோடிகளை நமது அரசு வாரி வழங்கி வருகிறது. வழங்கப்படும் இந்த உதவிகள் முறையாக பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. நகூல் ரோகா என்ற தலித் கூறுகிறார் 'எங்கள் அரசாங்கத்துக்கு மோடி அரசு பல கோடி உதவிகளை வழங்கியுள்ளதாக கேள்விபடுகிறோம். ஆனால் தலித் குடியிருப்புகளுக்கு இந்த உதவிகள் வந்தடைவதில்லை' என்கிறார்.

ஹரி பகதூர் ரோகா என்பவர் சக்கிலிய சாதியை சேர்ந்தவர். அவர் கூறுகிறார் 'எங்கள் குடியிருப்புகளுக்கு உணவோ, டென்டுகளோ இதுவரை வந்தடையவில்லை. நகரத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதில்தான் பலரும் அதிக கவனம் செலுத்துகின்றனர். எங்களின் வீடுகள் பூகம்பத்தால் பழுதடைந்து ஆட்டம் கண்டுள்ளது. உள்ளே செல்வதற்கு அச்சப்பட்டுக் கொண்டு குளிரிலும் மழையிலும் குழந்தைகளோடு வீதிகளில் வசித்து வருகிறோம். பல நாடுகளிலிருந்து வரும் உதவிகள் எங்கு செல்கின்றன என்பது புதிராக உள்ளது. தினக் கூலியாக எனக்கு முன்னூறு கிடைக்கும். எங்கள் கிராமத்தில் ஆடு கோழிகளை வளர்த்து வருமானம் பார்த்து வந்தோம். தற்போது அனைத்தும் அழிந்துள்ளது. அரசியல்வாதிகள் ஏதும் செய்வார்கள் என்ற நம்பிக்கை எங்களிடமிருந்து விடுபட்டுள்ளது' என்கிறார் பரிதாபமாக.

உதவி செய்வதில் கூட மனு தர்மத்தை கடைபிடிக்க வேண்டுமா நேபாள அரசு? நம் நாட்டு உதவிகள் கூட இந்த அடித்தட்டு மக்களை சென்றடையவில்லை. இந்தியாவாக இருந்தாலும் நேபாளமாக இருந்தாலும் இன ஒதுக்கல் என்பது உதவி செய்வதில் கூட காட்டப்படுகிறது என்பது வருந்தத்தக்க விஷயம். மோடி அரசு இதனை கருத்தில் கொண்டு உழைக்கும் மக்களுக்கு உடன் உதவிகள் கிடைக்க நேபாள அரசுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும். அல்லது நெரிடையாக நம் நாட்டு அதிகாரிகளை கொண்டு உதவிகள் விநியோகிக்கப்பட வேண்டும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
29-04-2015

http://indianexpress.com/article/world/neighbours/dalit-village-wonders-if-modi-govts-help-will-ever-reach-us/

No comments: