Followers

Saturday, April 04, 2015

ஆண்கள் பெண்கள் விஷயத்தில் பலகீனமானவர்களே - நந்திதா தாஸ்



அலுவலகங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்து கடந்த 2013-ம் ஆண்டு ஓர் ஆங்கில நாளிதழில் செய்திக் கட்டுரை ஒன்று வெளியானது. அதில், அலுவலக சூழல்களின் பெண்களின் நிலை தொடர்பான சமூக ஆர்வலரும் நடிகையுமான நந்திதா தாஸின் கருத்தும் இடம்பெற்றிருந்தது.

அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில், "எல்லா ஆண்களும் பலாத்காரர் ஆவதற்கான சாத்தியம் உடையவர்களே" என்று நந்திதா தாஸ் கூறியதாக அடிக்கோடிடப்பட்டிருந்தது.

இது சம்பந்தமாக சமூக வலைத் தளங்களில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இவரது கருத்துக்கு ஆதரவாக சிலரும் மற்றும் சிலர் இவரது கருத்து பிற்போக்குத் தனமானது என்றும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
04-04-2015

சமூகத்தில் எவ்வளவு பெரிய பொருப்பில் உள்ள ஆண்களும் பெண் என்று வந்து விட்டால் தங்களின் சமூக பொருப்பை மறந்து சாதாரணமான ஆண்களாக மாறி விடுவதைப் பார்க்கிறோம். சில சமூகங்களால் கடவுளுக்கு நிகராக போற்றப்படும் ஆசிரியர்களும் தங்களின் மாணவிகளோடு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு விடுவதை தினமும் நாம் பத்திரிக்கையில் பார்த்து வருகிறோம். வாழும் தெய்வங்கள் என்று போற்றப்பட்ட பல ஆதீனங்கள் பெண்கள் விஷயத்தில் தவறிழைத்து தங்களின் பொருப்பை மறந்து சிறை தண்டனை பெற்றதையும் நாம் வாழும் காலங்களிலேயே பார்த்தோம்.

எனவேதான் இஸ்லாம் ஆணையும் பெண்ணையும் கல்வி கற்பதாகட்டும், ஆன்மீகத்தில் ஈடுபடுவதாகட்டும் வேலைக்கு செல்வதாகட்டும் எந்த நிலையிலும் தனித் தனியாகவே செயல்பட தூண்டுகிறது. அத்தியாவசியமான சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்திருந்தாலும் கூடியவரை தனித் தனியே செயல்படுவதால் தவறுகள் நடப்பது தடுக்கப்படும் என்கிறது இஸ்லாம். ஏனெனில் ஆண் இயற்கையிலேயே பெண்களால் கவரப்படும் தன்மையிலேயே படைக்கப்பட்டுள்ளான். இதை உணராது ஆணையும் பெண்ணையும் தேவையில்லாமல் ஒன்றாக்கியதால்தான் சமூக சீரழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கணவன் மனைவிக்கிடையே சந்தேகங்களும் கொலைகளும் நடப்பது அதிகமாக வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டிலேயே நடந்து வருவதை நாம் தினமும் செய்தித்தாள்களில் பார்த்து வருகிறோம். அணும் பெண்ணும் தேவையில்லாமல் கலப்பதால் பாதிப்பு பெண்ணுக்குத்தான் என்பதை ஏனோ பெண் உரிமை ஆர்வலர்கள் மறந்து விடுகின்றனர்.


“எந்தவொரு ஆணும் அந்நியப் பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான்(தீய எண்ணங்களை நம் மனதில் விதைப்பவன்) இருக்கிறான்” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத் 109)

“ஷைத்தான்(தீய எண்ணங்களை நம் மனதில் விதைப்பவன்) மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்” என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி), நூல்: புகாரி 3281

1 comment:

C.Sugumar said...

இராமன் இருக்கும் இடத்தில் காமன் இல்லை.அரேபிய காடையா்களின் வரலாற்றை படிப்பவன் பெண்களை குமுஸ் பெண்ணாகவே பாா்ப்பான். ஆகவே அவனது பலகீனமே சாத்தான் என்று உருவகப்படுத்துகின்றான்.சாத்தான் என்று எவனும் இல்லை. மனம்தான் காரணம். சாத்தான் என்று ஒரு ஒருவன்தான் மனிதன் கெட்டு போவதற்கு காரணம் என்பவன் மனநோயாளி. இராமனைப்படித்து பவிவேகானந்தரைப படித்துகற்பு நெறி தவறாது வாழ்நதவர்கள் கோடி உள்ளனா் இந்த நாட்டில். முகம்மது நபியும் தனது இறப்புக்கு பின்னா் தனது மனைவியா்கள் ஜமாத்தின் தாய் என்று பட்டம் சுட்டி மறு திருமணம் செய்ய தடைவிதித்து விட்டாா். மனைவிமாா்கள் யாரும் அப்படி நினைக்கவில்லை.இவறாகவே அப்படி ஒரு தாய் பண்மை அவர்கள் மீது தன்னிச்சையாக சமத்தி விட்டாா். ஆயிசா அம்சா ஹமசா போன்றவர்கள் மிகவும் வயதில் இளைவா்கள்தாம். துறவறம் எனது வழியல்ல என்ற முகம்மது தனது மரணத்திற்கு பின் தனது -செக்ஸ் அனுபவம் பெற்ற -மனைவிமாா்களுக்கு துறவறம் வழங்கியது கவனிக்கத்தக்கது