Followers

Friday, April 10, 2015

கி. விரமணி அவர்களின் நியூஸ் 7 தொலைக்காட்சியின் நேர் காணல்!

கேள்வி: பகுத்தறிவாதியான தாங்கள் உயிரைக் கொன்று புசிக்கும் பசு வதைக்கு ஆதரவளிக்கும் முகமாக 'பீஃப் பிரியாணி' போடுகிறீர்களாமே? இது சரியா?

கி.வீரமணி: நீங்கள் தினமும் சாப்பிடும் தயிர் எதிலிருந்து உற்பத்தியாகிது? கன்றுக்கு சுரக்கும் பாலை நீங்கள் புசிப்பது பாவமில்லையா? அது பசு வதை இல்லையா? மரம் செடி கொடிகளுக்கும் உயிர் இருக்கிறதே! அதை கொன்று தின்பது பாவமில்லையா?

கேள்வி: ஒரு சிலர் உங்களுக்கு கொலை மிரட்டலும் விடுகிறார்கள். சிலர் உங்களின் உருவத்தை பாடை கட்டி தூக்கி சென்றுள்ளார்களே? அது பற்றி...

கி.வீரமணி: கொலை மிரட்டலுக்கெல்லாம் பயப்படக் கூடிய ஆட்கள் நாங்களல்ல. என்னை சில பார்பனர்கள் பாடையாக தூக்கிச் சென்றுள்ளனர். ஒரு வகையில் இதில் நான் வெற்றி பெற்றுள்ளேன். ஏனெனில் தங்கள் வீட்டு பிணத்தையே வேறு சாதி ஆட்களை விட்டு தூக்கக் கூடியவர்கள் பார்பனர்கள். அப்படிப்பட்டவர்கள் சூத்தினனான எனது பாடையை தூக்கிச் சென்றதன் மூலம் நான் தானே வெற்றி பெற்றுள்ளேன்.

நியூஸ் 7 தொலைக்காட்சியில் நேற்று நடந்த நேர் காணல் நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களின் பேட்டியின் ஒரு பகுதியே இது.

கேள்வி: ஏப்ரல் 15 அன்று தாலி அறுக்கும் போராட்டம் வேறு நடத்தப் போகிறிர்களாமே! இது பிரச்னையை உண்டு பண்ணாதா?

கி.வீரமணி: யாரையும் வற்புறுத்தி தாலியை அறுப்பதல்ல இதன் நோக்கம். விருப்பமில்லாதவர்கள் தங்களின் தாலியை கழற்றி விடுவார்கள். ஒரு தொலைக்காட்சி இதனை புனிதமாக்கி ஒளிபரப்பியது. அது தவறான வாதம் என்று மக்களுக்கு விளக்குவதற்காகவே இந்த நிகழ்வை நடத்துகிறோம்.

நியூஸ் 7 தொலைக்காட்சியில் நேற்று நடந்த நேர் காணல் நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களின் பேட்டியின் ஒரு பகுதியே இது.

https://www.youtube.com/watch?v=lD61vukbrE0

இந்துக்கள் மத்தியில் உள்ள தாலி பழக்கமானது முன்பு இஸ்லாமியரிடத்திலும் தொற்றிக் கொண்டிருந்தது. தாலி என்பதற்கு பதிலாக கருப்பு மணிகளை கோர்த்து 'கருக மணி' என்ற பெயரில் திருமணத்தன்று அணிந்து கொள்வார்கள். மாப்பிள்ளை கூட இதனை கட்ட மாட்டார். உறவினர்களே இந்த கருக மணியை கட்டி விடுவர். இந்த பழக்கத்துக்கும் குர்ஆனின் கட்டளைக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. இது இஸ்லாம் சொல்லாத பழக்கம் என்பதால் திருமணமான ஒரு வாரத்தில் எனது மனைவியை கருக மணியை கழட்டி விட சொன்னேன். அதில் ஏதோ புனிதம் இருப்பதாக நினைத்துக் கொண்டு எனது மனைவி கழட்ட மறுத்தார். நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் போது மெல்ல சென்று கத்தரிக்கோலால் கருக மணியை துண்டித்து விட்டேன். :-) எனது மாமியார் வீட்டில் இது அன்று பெரும் பிரச்னையாக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு நிலைமை சீரானது.

ஆக... வீரமணிக்கு முன்பாக அன்றே நாங்கள் 'தாலி அறுப்பு' நிகழ்வை நடத்திக் காட்டியவர்களாக்கும் :-)


2 comments:

Anonymous said...

கேவலம். நல்ல எண்ணம் கொண்டவன் ஒருவன் கூட உனது மதத்தில் இல்லையா

பிசாசு குட்டி said...

சுவனா.. நீங்க எப்படி அல்லா மீது நம்பிக்கை கொண்டீர்களோ அது போலத்தான் உங்கள் மனைவியும் தாலி மீது புனிதம் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தார்.. (நீங்க அறுத்தேன்னு சொல்றது எந்த அளவுக்கு உண்மையோ ??)
இந்திய கலாச்சாரங்கள் எல்லா கலாச்சாரத்திற்கும் முதன்மையானவை அதை பின்பற்றும் நாங்கள் என்ன வாழ்க்கையில் கெட்டா போய்விட்டோம்.. இறக்குமதி செய்யப்பட்ட கலாச்சாரத்தை தொங்கிகொண்டிருக்கிரீர்கள் என்பதை அறியாதவரா நீங்க.